Home
News

சும்மா அள்ளுது.. குவியும் ஆர்டர்கள்.. Red Magic 9 Pro வாங்க இதான் நல்ல சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

நுபியா (Nubia) நிறுவனம், சமீபத்தில் ரெட்மி மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த போனின், ப்ரீ-புக்கிங் இப்போது துவங்கியுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

உலக ஸ்மார்ட்போன் சந்தையில், நுபியா ரெட் மேஜிக் 9 ப்ரோ (Nubia Red Magic 9 Pro) விற்பனைக்கு வரவுள்ளது. ஓபன் சேல்ஸ் விற்பனைக்கு முன்பாக, Red Magic 9 Pro வாங்க விரும்புவோர், அவர்களுக்கான யூனிட்டை வாங்கிக்கொள்ள நிறுவனம் இப்போது ப்ரீ-புக்கிங் செய்ய அனுமதிக்கிறது. அதாவது, முன்பதிவு செய்துகொள்ள அனுமதிக்கிறது.

சும்மா அள்ளுது.. குவியும் ஆர்டர்கள்..Red Magic 9 Pro வாங்க நல்ல சான்ஸ்

வெறும் 1 டாலர் செலவில் உங்களுக்கான Red Magic 9 Pro ஸ்மார்ட்போன் யூனிட்டை உறுதி செய்துகொள்ள இந்த முன்பதிவு உதவுகிறது. இத்துடன், முன்பதிவு செய்து Red Magic 9 Pro வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரெட்மி மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்கள் இதோ.

இந்த புதிய நுபியா ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) ஸ்மார்ட்போன் ஸ்லீட் (Sleet) (கருப்பு), ஸ்னோஃபால் (Snowfall) (வெள்ளை) மற்றும் சைக்லோன் (Cyclone) (ட்ரான்ஸ்பரன்ட்) ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் ஸ்லீட் மாடல் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ஸ்னோஃபால் மற்றும் சைக்லோன் மாடல்கள் முறையே 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் அம்சத்துடன் வருகிறது.

மற்ற அம்சங்களைப் பொருத்தவரை, Red Magic 9 Pro சாதனம் 6.8" இன்ச் Full HD+ OLED டிஸ்ப்ளே (Display) மற்றும் 120Hz அதிவேக ரிஃப்ரெஷ் ரேட் (Refresh rate) உடன் 960Hz டச் ரெஸ்பான்ஸ் (Touch response) அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த டிஸ்பிளே 10-பிட் கலர் டெப்த் (Color depth), 100% DCI-P3 கலர் ரேன்ஞ் மற்றும் 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ் (Brightness) ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

சும்மா அள்ளுது.. குவியும் ஆர்டர்கள்..Red Magic 9 Pro வாங்க நல்ல சான்ஸ்

ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3 சிப்செட் (Octa-Core Snapdragon 8 Gen 3 processor) மற்றும் அட்ரெனோ 750 (Adreno 750) GPU மற்றும் ரெட்மேஜிக் OS 9.0 அம்சத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு 14 (Android) இயங்குதளத்துடன் இது இயங்குகிறது. இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேயில் இன்-பில்ட் ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார் (In-built fingerprint sensor) உடன் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் அம்சங்கள் UFS 4.0 தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் சேர்த்து இரண்டு சிம் கார்ட்களுக்கான வசதியும் உள்ளது. கேமரா அம்சத்தை பொருத்த வரை சாம்சங் GN5 சென்சாருடன் கூடிய 50MP பிரைமரி கேமரா மற்றும் சாம்சங்கின் JN1 சென்சாருடன் கூடிய 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை ஸ்மார்ட்போனின் பின்பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த செல்ஃபி அனுபவத்திற்காக 16MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக 3.5mm ஆடியோ ஜாக், இரண்டு 1115K ஸ்பீக்கர்கள், DTS:X அல்ட்ரா சப்போர்ட் ஆகியவற்றுடன் சேர்த்து மூன்று மைக்ரோபோன்கள் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சங்களாக 5G சப்போர்ட், வைஃபை 6E, ப்ளூடூத் 5.4, டைப்-C USB போர்ட் மற்றும் NFC ஆகியவை இடம்பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Red Magic 9 Pro pre-order starts now ends before January 3rd 2024 check price and colors
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X