போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் தரமான கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக உலகம் முழுவதும் சிறந்த கேமரா போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் நிறுவனங்கள் நல்ல கேமரா போன்களை அறிமுகம் செய்துவருகின்றன.
அதேபோல் நுபியா (Nubia) நிறுவனம் கடந்த மாதம் நுபியா இசட்60 அல்ட்ரா போட்டோகிராபர் எடிஷன் ( Nubia Z60 Ultra Photographer Edition) மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது. தற்போது இதே போன் உலக சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 35mm மெயின் லென்ஸ் (35mm main lens) உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்கள், விலைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நுபியா இசட்60 அல்ட்ரா போட்டோகிராபர் எடிஷன் அம்சங்கள் (Nubia Z60 Ultra Photographer Edition specifications): நுபியா அல்ட்ரா போட்டோகிராபர் எடிஷன் ஆனது 54எம்பி சோனி ஐஎம்எக்ஸ்800 சென்சார் (35 mm மெயின் லென்ஸ்) + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் ஆகிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் மிகவும் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நுபியா இசட்60 அல்ட்ரா போட்டோகிராபர் எடிஷன். குறிப்பாக இந்த போனின் கேமரா மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நுபியா நிறுவனம்.

6.9-இன்ச் 1.5கே BOE Q9+ அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் இந்த நுபியா அல்ட்ரா போட்டோகிராபர் எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (2160Hz PWM dimming) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ( Snapdragon 8 Gen 3 chipset) வசதியுடன் இந்த நுபியா இசட்60 அல்ட்ரா போட்டோகிராபர் எடிஷன் வெளிவந்துள்ளது. இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் MyOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும்.
உலக சந்தையில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் நுபியா இசட்60 அல்ட்ரா போட்டோகிராபர் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் சிறந்த ஆடியோ வசதியுடன் இந்த நுபியா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அருமையான பேட்டரி ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அதாவது நுபியா இசட்60 அல்ட்ரா போட்டோகிராபர் எடிஷன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும. பின்பு இதன் பேட்டரி சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இந்த போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நுபியா இசட்60 அல்ட்ரா போட்டோகிராபர் எடிஷன் விலை $779 (இந்திய மதிப்பில் ரூ.65,134) ஆக உள்ளது. இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் நுபியா இசட்60 அல்ட்ரா போட்டோகிராபர் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications