5வது முறையாக மீண்டும் தோன்றிய மோனோலித்.. இம்முறை போலந்தில்.. அடுத்த மர்மம் என்னவோ?
போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு மர்மமான உலோக மோனோலிக் தோன்றியுள்ளது. இந்த மோனோலித் உருவங்கள் சமீபத்தில் மர்மமான முறையில் பூமியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தோன்றிய பின்னர் இன்னும் 4 இடங்களில் தோன்றியுள்ளது. இப்பொழுது ஐந்தாவது முறையாக மீண்டும் இந்த மோனோலித் உருவம் போலந்தில் தோற்றமளித்துள்ளது.

5வது முறையாய் தோன்றிய மோனோலித்
5வது முறையாய் தோன்றிய இந்த மோனோலித் பற்றி உள்ளூர் ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது, விஸ்டுலா ஆற்றின் குறுக்கே அதிகாலையில் ஓடும் போது இந்த முக்கோண தூணை ஜாகர்ஸ்கள் கவனித்துள்ளனர். இது சுமார் மூன்று மீட்டர் (10 அடி) உயரத்திலிருந்துள்ளது, மந்தமான வெள்ளி நிற மேற்பரப்பைக் கொண்டுள்ளது, ஸ்குரூ (screw) மூலம் ஒன்றாகப் பிடிக்கப்பட்டு இருந்துள்ளது.

ஆற்றங்கரையின் மணலில் 5வது மோனோலித்
பெரிய பாலத்தின் அருகே ஆற்றங்கரையின் மணலில் இந்த 5வது மோனோலித் நடப்பட்டிருக்கிறது. "வலது (நதி) கரையில் உள்ள கடற்கரையில் ஒரு மர்மமான மற்றும் அசாதாரண மோனோலித் நிறுவல் உருவாகியுள்ளது" பற்றி அந்த பகுதியில் மக்கள் சற்று பதட்டம் அடைந்ததாகவும் வார்சாவின் விஸ்டுலா மாவட்ட அதிகாரிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்து தொடர்ந்து இப்போ இங்கே..
உலக நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இப்பொழுது 5வது முறையாக போலந்திலும் மோனோலித் என்ற மர்ம உலோகத் தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் உடா பாலைவனத்தில் முதல் மோனோலித் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலோக தூண் திடீரென மாயம்
கண்டுபிடிக்கப்பட்ட தூண் திடீரென மாயமாகியதால், மோனோலித் பற்றிய செய்திகள் இன்னும் தீவிரமடைந்தது. அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்திலும் போன்ற பிற நாடுகளிலும் இந்த உலோக தூண் திடீரென உருவாகி மறைந்தது. இன்னும் இந்த மர்மம் அவிழ்க்கப்படவில்லை.

உண்மை என்ன? தொடரும் புதிர்.. அடுத்த மர்மம் என்னவோ?
இப்பொழுது 5வது மோனோலிக் மர்மமாகத் தோன்றியுள்ளது. இதை யார் வைத்தார்கள்? எப்படி, எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலர் இதை ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தின் ரசிகர்கள் செய்யும் ஏமாற்று வேலை என்றும், இன்னும் சிலர் இது ஏலியன்களின் மாய செயல் தானோ என்று கதைக்கட்டி வருகின்றனர். உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியாமல் புதிராக இருக்கிறது.


Click it and Unblock the Notifications