டிமாண்ட் ஜாஸ்தியா இருக்கு.. Red Magic 9 Pro போனை உடனே ஆர்டர் செய்யுங்க.. விலை இது தான்.. யோசிக்காம வாங்கலாம்..
சீனாவின் புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான நுபியா (Nubia) புதிய ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) ஸ்மார்ட்போனை சீன சந்தையில் சென்ற மாதம் அறிமுகம் செய்தது. இன்று இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) உலகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த புதிய நுபியா ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) ஸ்மார்ட்போன் ஸ்லீட் (Sleet) (கருப்பு), ஸ்னோஃபால் (Snowfall) (வெள்ளை) மற்றும் சைக்லோன் (Cyclone) (ட்ரான்ஸ்பரன்ட்) ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் ஸ்லீட் மாடல் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ஸ்னோஃபால் மற்றும் சைக்லோன் மாடல்கள் முறையே 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் அம்சத்துடன் வருகிறது.

மற்ற அம்சங்களைப் பொருத்தவரை, Red Magic 9 Pro சாதனம் 6.8" இன்ச் Full HD+ OLED டிஸ்ப்ளே (Display) மற்றும் 120Hz அதிவேக ரிஃப்ரெஷ் ரேட் (Refresh rate) உடன் 960Hz டச் ரெஸ்பான்ஸ் (Touch response) அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த டிஸ்பிளே 10-பிட் கலர் டெப்த் (Color depth), 100% DCI-P3 கலர் ரேன்ஞ் மற்றும் 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ் (Brightness) ஆகிய அம்சங்களுடன் வருகிறது.
ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro): ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3 சிப்செட் (Octa-Core Snapdragon 8 Gen 3 processor) மற்றும் அட்ரெனோ 750 (Adreno 750) GPU மற்றும் ரெட்மேஜிக் OS 9.0 அம்சத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு 14 (Android) இயங்குதளத்துடன் இது இயங்குகிறது. இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேயில் இன்-பில்ட் ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார் (In-built fingerprint sensor) உடன் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் அம்சங்கள் UFS 4.0 தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் சேர்த்து இரண்டு சிம் கார்ட்களுக்கான வசதியும் உள்ளது. கேமரா அம்சத்தை பொருத்த வரை சாம்சங் GN5 சென்சாருடன் கூடிய 50MP பிரைமரி கேமரா மற்றும் சாம்சங்கின் JN1 சென்சாருடன் கூடிய 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை ஸ்மார்ட்போனின் பின்பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த செல்ஃபி அனுபவத்திற்காக 16MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக 3.5mm ஆடியோ ஜாக், இரண்டு 1115K ஸ்பீக்கர்கள், DTS:X அல்ட்ரா சப்போர்ட் ஆகியவற்றுடன் சேர்த்து மூன்று மைக்ரோபோன்கள் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சங்களாக 5G சப்போர்ட், வைஃபை 6E, ப்ளூடூத் 5.4, டைப்-C USB போர்ட் மற்றும் NFC ஆகியவை இடம்பெற்றுள்ளது.
ரெட் மேஜிக் 9 ப்ரோ முன்பதிவு (Red Magic 9 Pro Pre-booking): மேலும், அதிவேக சார்ஜிங் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளிற்காக 80W சார்ஜிங் அம்சம் மற்றும் 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட் போன் உலக சந்தையில் ஜனவரி 3, 2024 முதல் தனது விற்பனையை துவங்குகிறது. இதனை டிசம்பர் 27 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இதன் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் இந்தியாவில் ரூ. 54,035 விலைக்கும் விற்பனைக்கு வரும். இதன் 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் வேரியன்ட் மாடல் ரூ. 66,523 விலைக்கும் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








