ஸ்மார்ட்போனா கருங்கல்லா?- அரக்கத்தன வடிவமைப்பு வெறித்தன அம்சங்களுடன் புது Smartphone!

|

Nubia நிறுவனம் Nubia Red Magic 7S Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது அரக்கத்தன வடிவமைப்புடன் வெறித்தன அம்சங்களை கொண்டிருக்கிறது. இது ஓவர் பில்ட் அப் போன்று இருக்கிறதா, முழுமையாக படித்துவிட்டு முடிவை நீங்களே எடுங்கள்.

கரடுமுரடான தோற்றத்தில் ஒரு ஸ்மார்ட்போன்

கரடுமுரடான தோற்றத்தில் ஒரு ஸ்மார்ட்போன்

சாதுவான வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில் கரடுமுரடான தோற்றத்தில் ஒரு நிறுவனம் மட்டும் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இருக்கத்தனமான வடிவமைப்பு மட்டுமில்லை அம்சங்களும் வெறித்தனமாக இருக்கிறது.

அப்படி என்ன ஸ்மார்ட்போன் என்று கேள்வி வருகிறதா?. அது நுபியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் தான்.

நுபியா நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன்

நுபியா நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன்

நுபியா நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பும் சற்று கரடுமுரடாக தான் இருக்கும். இதன் அம்சங்களும் மூர்க்கத்தனத்தில் இருக்கும். அதாவது உறுதியான தோற்றத்தில் இருப்பது போன்ற வடிவமைப்பு மற்றும் உச்சப்பட்ச அம்சங்களை கொண்டிருக்கும்.

அதன்படி தற்போது நுபியா நிறுவனம் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. அது நுபியா ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ ஆகும். கேமிங் பிரியர்களுக்கு விருந்தாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

முடிவு உங்களுடையது

முடிவு உங்களுடையது

நுபியா ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது கேமிங் பிரியர்களை மையமாக வைத்து ஜூலை 26 அன்று உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது சீனாவில் மட்டும் ஜூலை மாத தொடக்கத்தில் அறிமுகமானது.

பில்ட் அப் அதிகமாக இருக்கிறதே உண்மை தானா என்ற சந்தேகம் இருந்தால். இதை படித்து விட்டு நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

உச்சப்பட்சம் என்று குறிப்பிட காரணம் என்ன?

உச்சப்பட்சம் என்று குறிப்பிட காரணம் என்ன?

ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட், அண்டர் டிஸ்ப்ளே முன்புற கேமரா, ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 எஸ்ஓசி, 18 ஜிபி ரேம், 10 லேயர் கூலிங் சிஸ்டம், 64 எம்பி பிரதான கேமரா, 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

இப்போது ஓரளவு புரிந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் உச்சப்பட்சம் என்று குறிப்பிட காரணம் என்னவென்று.

துல்லியமான காட்சி அனுபவம்

துல்லியமான காட்சி அனுபவம்

Nubia Red Magic 7S Pro ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே விவரங்கள் குறித்து பார்க்கையில், இது 120 ஹெர்ட் புதுப்பிப்பு வீதத்துடனான 6.8 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் ஆதரவு இந்த டிஸ்ப்ளேவில் இருக்கிறது. இது காட்சியின் துல்லியத்தை உறுதி செய்யும்.

1,080x2,400 பிக்சல்கள் தீர்மானம், 960 ஹெர்ட்ஸ் மல்டி-ஃபிங்கர் டச் சாம்லிங் ரேட் என பல மேம்பட்ட ஆதரவுகளை இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் பெறலாம்.

இயக்க ஆதரவு எப்படி உள்ளது?

இயக்க ஆதரவு எப்படி உள்ளது?

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது ப்ரீமியம் தர அனுபவம் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் ரேம் பவர் 18 ஜிபி ஆகும். கேமிங் பிரியர்களுக்கு விருந்து என்று குறிப்பிடவும் காரணம் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை தடையின்றி அதிக நேரம் பயன்படுத்தலாம்.

கேமிங் பிரியர்களுக்கு ஒரு விருந்து

கேமிங் பிரியர்களுக்கு ஒரு விருந்து

இந்த ஸ்மார்ட்போன் சூடாவதை தடுப்பதற்கு என 10 லேயர் மல்டி டைமன்ஷனல் கூலிங் சிஸ்டம் இருக்கிறது. இது நுபியா நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாகும்.

அதோடு மெர்குரி மற்றும் சூப்பர்நோவா வகையிலான RGB LED லைட் ஆதரவோடு வெப்பம் வெளியேற்றும் Fan பொருத்தப்பட்டிருக்கிறது.

இது ஸ்மார்ட்போனின் உள்ளிருக்கும் ஹீட்டை உடனே வெளியேற்றும். அதுமட்டுமில்லை ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோவில் ரெட் கோட் 1 கேமிங் சிப் பிரத்யேகமாக பொருத்தப்பட்டுள்ளது.

இப்போது புரிந்திருக்கும் இது கேமிங் பிரியர்களுக்கு விருந்தா இல்லையா என்று.

கேமரா லென்ஸ் விவரங்கள்

கேமரா லென்ஸ் விவரங்கள்

Nubia Red Magic 7S Pro ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை இதில், 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

நீடித்த ஆயுளை வழங்கும் 5000mAh டூயல் செல் பேட்டரி உடன் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா டிஸ்ப்ளேவின் கீழ் புறத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக செல்பி கேமரா டிஸ்ப்ளேவின் மேற்புறத்தில் மட்டும் இருக்கும் பட்சத்தில் இதில் வித்தியாசமாக கீழ்புறத்தில் இருக்கிறது.

இத்தனை அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை என்பது முக்கியம் அல்லவா.

Nubia Red Magic 7S Pro விலை

Nubia Red Magic 7S Pro விலை

Nubia Red Magic 7S Pro விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இதன் விலை $729 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேரியண்ட்டின் இந்திய விலை மதிப்பு ரூ.59,000 ஆகும்.

அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஸ் வேரியண்ட் விலை $899 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.72,000 ஆகும்.

Nubia RedMagic 7S Pro ஸ்மார்ட்போனானது Nubia-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலம் ஆகஸ்ட் 9 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 7S Pro Smartphone Launched with Tough design and Premium Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X