Home
News

வெறித்தனமான Nubia Z50S Pro டிஸ்பிளே.. 16ஜிபி ரேம் + 1TB ஸ்டோரேஜ்.. இந்த விலையில் இப்படி ஒரு போன்-ஆ?

நுபியா (Nubia) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் ஒரு வெறித்தனமான போனை களமிறங்கியுள்ளது. RedMagic 8S Pro சீரிஸ் இன் அறிமுகத்திற்கு பிறகு, சீனாவில் நுபியா Z50S ப்ரோ என்ற மாடலை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய பிளாக்ஷிப் Z சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலாக நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளதாக nubia அறிவித்துள்ளது. இது 6.78' இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அளவு கொண்ட 1.5K 120Hz AMOLED BOE Q9 டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 2160Hz உயர் அதிர்வெண் PWM டிம்மிங் உடன் வருகிறது.

வெறித்தனமான Nubia Z50S Pro டிஸ்பிளே.. 16ஜிபி ரேம் + 1TB ஸ்டோரேஜ்..

இந்த புதிய நுபியா Z50S ப்ரோ (Nubia Z50S Pro) சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் உடன் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) இல் இயங்குகிறது. இது 3.36GHz மற்றும் 4233mm² கூலிங் சிஸ்டம் கொண்ட திறன் உடன் வருகிறது. இது 12 ஜிபி ரேம் வரை கொண்டுள்ளது.

இது 12ஜிபி மற்றும் 16 ஜிபி கொண்ட LPDDR5X ரேம் உடன் 256 ஜிபி மற்றும் 1TB வரை கொண்ட UFS4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது MyOS 13 உடன் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இல் இயங்குகிறது. இது 50MP கொண்ட Sony IMX800 பிரைமரி கேமரா சென்சார், OIS, 50MP அல்ட்ரா-வைட் மற்றும் 6x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது.

16MP முன்பக்க செல்பி கேமராவை கொண்டுள்ளது. நீல கண்ணாடி ஸ்பின்-கோடட் ஐஆர் ஃபில்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட சூப்பர் சென்சிட்டிவ் ஃபோகஸ் டிராக்கிங் உள்ளது.

இந்த போன் 80W ஃபாஸ்ட் சார்ஜ் உடன் 5100mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது பிளாக் காஃபி (Black Coffee), காக்கி (Khaki) மற்றும் ஒரு ஸ்பெஷல் எடிஷன் : மிரர் ஆப் லைட்ஸ் (Mirror Of Lights) ரெயின்போ ஹாலோகிராபிக் அமைப்பு வெளிப்படையான ரிங் உடன் வருகிறது.

வெறித்தனமான Nubia Z50S Pro டிஸ்பிளே.. 16ஜிபி ரேம் + 1TB ஸ்டோரேஜ்..

"கற்றாரா வைட் (Carrara White)" அமைப்பு வடிவமைப்பு, 3D லேசர் லித்தோகிராபி உடன் கொண்ட புதிய டெக்ஸ்ச்சர் உடன் வருகிறது. இது யுஎஸ்பி டைப் சி (USB Type-C) போர்ட் உடன் வருகிறது. இது மிகவும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்க இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய நுபியா Z50S ப்ரோ சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது 3699 யுவான் என்று விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 42,340 ஆகும். இதன் 12GB + 256GB மாடல் இந்திய மதிப்பில் ரூ.45,750 விலையை நெருங்குகிறது.

இதன் 16GB + 1TB மாடலுக்கு ரூ.50,345 என்ற விலையும், மிரர் ஆப் லைட் ஸ்பெஷல் எடிஷன் போன் 12GB + 1TB மாடலின் விலை ரூ. 46,910 என்ற விலையிலும் வருகிறது. இதன் 16GB + 1TB விலை ரூ. 51,490 ஆகும். இது இப்போது முன்கூட்டிய ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதன் திறந்த விற்பனை ஜூலை 27 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் விரைவில் களமிறங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
nubia Z50S Pro with 1.5K 120Hz AMOLED display Snapdragon 8 Gen 2 16GB RAM 5100mAh Battery Mobile
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X