உலகின் முதல் 3D டேப்லெட் சாதனம்.! டிஸ்பிளே மட்டும் 3D இல்லை.. கேமரா கூட 3D தானா?
3D திரைப்படம் கேள்விப்பட்டிருப்பீங்க.. 3D கண்ணாடியும் கூட கேள்விப்பட்டிருப்பீங்க.. 3D டேப்லெட் டிவைஸ்னு ஒரு புது டேப்லெட் சாதனம் இருப்பதை இதற்கு முன் நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டதுண்டா? இல்லை என்றால், இப்போது தெரிந்துகொள்ளுங்கள். உலகின் முதல் 3D டேப்லெட் சாதனம் இந்த ஆண்டின் MWC 2023 ஆம் நிகழ்வில் அறிமுகமாகிறதாம்.
இதை அறிமுகம் செய்யப்போகும் நிறுவனம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா? இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறதென்று தெரியுமா? உலகத்தின் முதல் 3D டேப்லெட் சாதனமான இந்த சாதனத்தில் என்ன சிறப்புக்கள் நிறைந்திருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க. சமீபத்திய தகவலின் படி, பிப்ரவரி 21 ஆம் தேதி (இன்று) அன்று, நுபியா மொபைல் நிறுவனம் ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டது.

உலகின் முதல் 3D டேப்லெட் சாதனம் இது தானா?
இந்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெறும் MWC 2023 மாநாட்டில், உலகின் முதல் AI இன்ஜின் இயக்கப்படும் 3D டேப்லெட்டை அறிமுகப்படுத்தவுள்ளனர் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த சாதனம் முன்பு நிறுவனத்தால் ஒரு இடுகையில் டீஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய டேப்லெட் சாதனத்தை நிறுவனம் நுபியா பேட் 3D (nubia Pad 3D) என்று குறிப்பிடுகிறது.
Nubia நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, நுபியா பேட் 3D என்பது உலகின் முதல் 3D டேப்லெட் ஆகும். இது AI இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது முழு டிஸ்பிளேவும் 3D பயன்பாடுகளை ஆதரிக்கும் அம்சத்துடன் செயல்படுகிறது. இந்த நுபியா பேட் 3D சாதனம் 3D வீடியோ, 3D வீடியோ ரெக்கார்ட்ட்டிங், 3D ஸ்ட்ரீமிங் மீடியா, 3D கேம்கள் மற்றும் 3D AI உருவாக்கம் உள்ளிட்ட நம்பமுடியாத அளவிலான அம்சங்களை பேக் செய்கிறது.
இப்படி ஒரு மிரட்டலான சாதனத்தை நிறுவனம் MWC 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளது என்பது இப்போது உறுதியாகியுள்ளது. முழுமையான 3D அம்சங்களை பல விதங்களில் ஆதரிக்கும் அம்சத்துடன் இந்த டேப்லெட் சாதனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பயனர்கள் தங்கள் உணர்வுகளைத் தூண்டும் மற்றும் அவர்களின் கற்பனைகளை ஊக்குவிக்கும் ஒரு டீப் மற்றும் பெஸ்ட் கிளாஸ் 3D காட்சி அனுபவத்தை இந்த பதிய 3D Tablet சாதனம் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

3D அனுபவத்தை அனுபவிக்க 3D கண்ணாடி தேவையில்லையா? பிறகு எப்படி 3D-ல் தெரியும்?
இந்த நுபியா பேட் 3D சாதனத்தின் மிக சிறப்பான அம்சம் என்னவென்றால், இந்த சாதனம் உங்கள் கண்களைக் கண்காணிக்கும் மற்றும் சிறப்பு கண்ணாடிகளின் உதவியின்றி முப்பரிமாண 3D படத்தை உங்களுக்கு காட்சியளிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஆம், இதில் 3D அனுபவத்தை அனுபவிக்க உங்களுக்கு 3D கிளாஸ் தேவைப்படாது. அதேபோல், இதற்கு ஸ்பெஷல் பேரலாக்ஸ் பேரியர் டிஸ்பிளேவும் தேவைப்படாது.
நுபியா பேட் 3D இன் வடிவமைப்பும் குறிப்பிடத்தக்கது. உயர் திரை விகிதத்தை வழங்கும் நான்கு குறுகிய பிரேம்களுடன் நேர்த்தியான வலது-கோண நடுத்தர பிரேம் வடிவமைப்பை இது கொண்டுள்ளது. டிவைஸின் முன்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. அவை 3D படத்தை உருவாக்க கண் அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வர் கலவை உடன் இது இணையற்ற பயனர் அனுபவத்தை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 3D டேப்லெட் உருவாக்கத்தில் இணைத்துள்ள மற்றொரு முன்னணி நிறுவனம் எது தெரியுமா?
இந்த புதிய 3D டேப்லெட், சிலிக்கான் வேளி (Sillicom valley) தளமாகக் கொண்ட லைட் ஃபீல்ட் ஹார்டுவேர் மற்றும் உள்ளடக்க சேவைகளின் முன்னணி வழங்குநரான நுபியா மற்றும் லியா இன்க் இடையேயான ஒத்துழைப்பின் விளைவாகும். நானோ தொழில்நுட்ப வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் அறிவார்ந்த மென்பொருள் ஆகியவற்றில் முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம், லியா டிஜிட்டல் தொடர்புகளின் எதிர்காலத்தை உருவாக்குகிறது.
இரண்டு நிறுவனங்களுக்கிடையிலான கூட்டு முயற்சி, சாத்தியமானவற்றின் எல்லைகளைத் தாண்டி புதிய கண்டுபிடிப்புகளுடன் அடுத்த தலைமுறை சாதனங்களின் வளர்ச்சியில் பயணிக்க துவங்கியுள்ளது இந்த 3D டேப்லெட் சாதனம் மூலம் தெளிவாகியுள்ளது. இந்த ஆண்டின் MWC 2023 நிகழ்வில் இன்னும் என்னென்ன புது வகை சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








