3 மாசத்துக்கு முன்ன அறிமுகமான புத்தம் புது Phone மீது ரூ.4000 விலைக்குறைப்பு!

|

முதலில் ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஒரு வணக்கத்தை போடுங்க - எல்லாவற்றிற்கும் இந்த போன் தான் காரணம்!

ஏனெனில், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமான OnePlus 10T 5G மாடலின் விளைவாகவே, சரியாக 3 மாதங்களுக்கு முன்னர் வெளியான ஒரு லேட்டஸ்ட் ஒன்பிளஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மீது ரூ.4,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Price Cut மட்டும் இல்ல.. இன்னும் நிறைய இருக்கு!

Price Cut மட்டும் இல்ல.. இன்னும் நிறைய இருக்கு!

ரூ.4,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ள குறிப்பிட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது வங்கி சலுகை, நோ காஸ்ட் EMI விருப்பம் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கிறது. ஆக உங்களால் அதன் விலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்கலாம்.

அதென்ன மாடல்? அதன் பழைய விலை மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? கூடுதலாக கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போனை தாராளமாக வாங்கலாம்? யாரெல்லாம் 'ஸ்கிப்' செய்வது நல்லது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

சுற்றி வளைக்காத 'ஓப்பன்' Review! Redmi K50i 5G போனை வாங்கலாமா?சுற்றி வளைக்காத 'ஓப்பன்' Review! Redmi K50i 5G போனை வாங்கலாமா?

விலைக்குறைப்பை பெற்றுள்ள அந்த லேட்டஸ்ட் OnePlus Phone?

விலைக்குறைப்பை பெற்றுள்ள அந்த லேட்டஸ்ட் OnePlus Phone?

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 'ஆல்-நியூ' OnePlus 10T 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்திய வேகத்தில் அதன் "150W பாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன்" ஒன்றின் விலையை குறைத்துள்ளது. அது OnePlus 10R 5G (ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி) ஆகும்.

நினைவூட்டும் வண்ணம் 10ஆர் மாடல் ஆனது இந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ரூ.4,000 என்கிற அதிரடி விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது.

இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது, மேலும் அவை அனைத்திற்குமே ரூ.4,000 என்கிற விலைக்குறைப்பு கிடைத்துள்ளது.

OnePlus 10R புதிய விலை VS பழைய விலை:

OnePlus 10R புதிய விலை VS பழைய விலை:

முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் OnePlus 10R மாடலை மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகப்படுத்தியது. அவைகள் 8GB + 128GB (80W), 12GB + 256GB (80W) மற்றும் 12GB + 256GB (150W) ஆகும்.

அறிமுகத்தின் போது அவைகள் முறையே ரூ.38,999, ரூ.42,999 மற்றும் ரூ.43,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றன. தற்போது ரூ.4,000 என்கிற விலைக் குறைப்புக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் 8ஜிபி + 128ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட்களை முறையே ரூ.34,999 மற்றும் ரூ.38,999 க்கு வாங்கலாம்.

மறுகையில் உள்ள 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட்-ஐ ரூ.39,999 க்கு சொந்தமாக்கி கொள்ளலாம்.

iQOO 9T: இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!iQOO 9T: இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

OnePlus 10R மீது வங்கி, இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர்களும் உண்டு!

OnePlus 10R மீது வங்கி, இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர்களும் உண்டு!

சியரா பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி மீது வங்கி சலுகை, இஎம்ஐ விருப்பம் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபரும் அணுக கிடைக்கிறது.

நீங்கள் ஐசிஐசிஐ பேங்க் கார்ட்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1,000 என்கிற உடனடி தள்ளுபடி கிடைக்கும் மற்றும் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI விருப்பமும் கிடைக்கும்.

இதுதவிர்த்து OnePlus 10R -ஐ வாங்குபவர்கள் ரூ.3,000 ரூவரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம்.

ரூ.34,999 க்கு OnePlus 10R வொர்த்-ஆ? இல்லையா?

ரூ.34,999 க்கு OnePlus 10R வொர்த்-ஆ? இல்லையா?

இது வொர்த்-ஆ? இல்லையா? என்பதை பற்றி புரிந்துகொள்ள நாம் OnePlus 10R ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். பிறகு தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

அப்படியாக இது 6.7 இன்ச் FHD+ Fluid AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது.

மேலும் இது MediaTek Dimensity 8100-MAX Octa-core சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, உடன் 12GB வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 3.1 ஹை-ஸ்பீட் ஃபிளாஷ் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான செல்பீ கேமரா!

எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான செல்பீ கேமரா!

OnePlus 10R ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் சோனி IMX766 சென்சார் உடனான 50MP மெயின் கேமரா + 119° ஃபீல்ட் ஆஃப் வியூ உடனான 8MP அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) உடனான 16MP செல்பீ கேமரா உள்ளது.

அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!

இரண்டு 80W.. ஒரு 150W!

இரண்டு 80W.. ஒரு 150W!

கொஞ்சம் வித்தியாசமாக OnePlus 10R ஆனது இரண்டு வகையான ஃபாஸ்ட் சார்ஜிங் வேகத்தை வழங்குகிறது. ஹை -எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 150W SUPERVOOC எண்டூரன்ஸ் எடிஷன் ஆகவும், மற்ற இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் ஆனது 80W SUPERVOOC உடனும் வருகிறது.

80W SUPERVOOC உடன் வரும் OnePlus 10R வேரியண்ட்கள் ஆனது 5,000mAh பேட்டரியுடன் வருகின்றன. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரி வெறும் 32 நிமிடங்களில் 1 - 100% சார்ஜ் ஆகும்.

மறுகையில் உள்ள 150W SUPERVOOC Endurance Edition-ஐ கொண்ட OnePlus 10R ஆனது 3 நிமிடங்களில் 1 - 30% வரை சார்ஜ் செய்யக்கூடிய 4500mAh பேட்டரியை பேக் செய்கிறது.

OnePlus 10R ஸ்மார்ட்போனின் நிறைகளும், குறைகளும்!

OnePlus 10R ஸ்மார்ட்போனின் நிறைகளும், குறைகளும்!

- அட்டகாசமான டிசைனை பெற்றுள்ளது. குறிப்பாக பேக் பேனலை பார்க்கும் போது, இது முற்றிலும் புதிய ஒன்பிளஸ் மாடலாக தெரிகிறது.
- குறையே சொல்ல முடியாத திறமையான பெர்ஃபார்ம்மென்ஸ்
- இது மிகவும் திறமையான பாஸ்ட் சார்ஜிங்கை கொண்டிருந்தாலும் கூட இதன் கேமராக்கள் "தி பெஸ்ட்" என்று கூற முடியாது.
- அதே போல இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் செயல்திறன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்!

Photo Courtesy: OnePlus

Best Mobiles in India

English summary
Just Launched Before 3 Months Now Gets Rs 4000 Price Cut Check OnePlus 10R New Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X