இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

|

நம்மில் பலரும், எப்போதுமே பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களையே வாங்குவது ஏன் என்று தெரியுமா? - ஒருவகையான பயத்தினால் தான்; யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள்!

ஆசை இருக்கும்... கூடவே பயமும் இருக்கும்!

ஆசை இருக்கும்... கூடவே பயமும் இருக்கும்!

"பல வருடங்களாகவே பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்.. எனக்கும் ஒரு நல்ல பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது தான்.

ஆனால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்தி நான் வாங்கும் போன் "மொக்கையாக" இருந்தால்.. என்ன செய்வது என்கிற பயத்தில் தான் பெரிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வாங்குவதில்லை!" என்று கூறுவார்கள்!

அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!

நியாயமான பயம் தான் ஆனால்

நியாயமான பயம் தான் ஆனால் "இந்த போனில்" அது தேவை இல்லை!

அது என்ன ஸ்மார்ட்போன்? இதை ஏன் பயப்படாமல்.. நம்பி வாங்கலாம்? என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது? எதன் வழியாக வாங்க கிடைக்கிறது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

மெல்ல மெல்ல வளர்ந்து.. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளராக உருமாறி உள்ள ஒரு நிறுவனம் தான் - ஐக்யூ (iQOO). இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இன்று (அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி) அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடல் தான் - ஐக்யூ 9டி 5ஜி (iQoo 9T 5G).

அறிமுகமாகும் முன்பே OnePlus 10T க்கு வேட்டு?

அறிமுகமாகும் முன்பே OnePlus 10T க்கு வேட்டு?

நாளை (அதாவது ஆகஸ்ட் 3, 2022) தான் ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில், அதன் "போட்டியாளர்" ஆக இருக்கலாம் என்று கருதப்படும் ஐக்யூ 9டி 5ஜி மாடல் இன்றே இந்தியாவில் அறிமுகமாகி, விற்பனையையும் தொடங்கி விட்டது.

இதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும் OnePlus Vs iQOO யுத்தம் எந்த ரேஞ்சில் உள்ளது என்பதை!

ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!

iQOO 9T 5G-யில் அப்படி என்ன ஸ்பெஷல்?

iQOO 9T 5G-யில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஒன்றா? இரண்டா? ஒரு லிஸ்ட்டே இருக்கிறது. ஐக்யூ நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.

இது தவிர iQoo 9T 5G ஆனது Vivo V1+ இமேஜிங் சிப் உடன் வருகிறது மற்றும் 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

'லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்' ஆக iQoo 9T ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ISOCELL GN5 மெயின் கேமரா உள்ளது மற்றும் இது 4,700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

'ஸ்மூத்' ஆன டிஸ்பிளே!

'ஸ்மூத்' ஆன டிஸ்பிளே!

டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் iQoo 9T 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-அடிப்படையிலான Funtouch OS 12 மூலம் இயங்குகிறது.

மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 100% P3 கலர் கேமட் கவரேஜ், மோஷன் எஸ்டிமேஷன் மோஷன் காம்பன்சேஷன் (MEMC) மற்றும் HDR10+ உடனான 6.78-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ E5 AMOLED (1,080 x 2,400 பிக்சல்ஸ்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

'பவர்ஃபுல்' ஆன ப்ராசஸர்!

'பவர்ஃபுல்' ஆன ப்ராசஸர்!

முன்னரே குறிப்பிட்டபடி, இது Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடனாக 12GB வரையிலான LPDDR5 ரேம் மூலம் இயக்கப்படுகிறது. iQoo 9T 5G ஆனது Vivo நிறுவனத்தின் இன்-ஹவுஸ் V1+ இமேஜிங் சிப்பையும் கொண்டுள்ளது.

கேமிங்கின் போது மேம்படுத்தப்பட்ட 'ஹீட் மேனேஜ்மென்ட்'டிற்காக இதில் 3,930 மிமீ சதுர லிக்விட் கூலிங் வேப்பர் சேம்பரும் (Liquid cooling vapour chamber) உள்ளது.

'அல்டிமேட்' ஆன கேமராக்கள்!

'அல்டிமேட்' ஆன கேமராக்கள்!

கேமராக்களை பொறுத்தவரை, iQoo 9T 5G ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ISOCELL GN5 மெயின் கேமரா + 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 12 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.

செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை, முன்புறத்தில் உட்பொதிக்கப்பட்டுள்ள 16 மெகாபிக்சல் கேமரா பார்த்துக்கொள்கிறது.

ஸ்டோரேஜ், கனெக்டிவிட்டி, பேட்டரி என எல்லாமே 'டபுள் ஓகே' தான்!

ஸ்டோரேஜ், கனெக்டிவிட்டி, பேட்டரி என எல்லாமே 'டபுள் ஓகே' தான்!

இந்த போன் 256ஜிபி வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, 5ஜி, வைஃபை, ப்ளூடூத் v5.2, ஓடிஜி, NFC, ஜிபிஎஸ், FM ரேடியோ, USB டைப்-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்றவைகளை வழங்குகிறது.

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்-ஐ கொண்டுள்ள iQoo 9T 5G ஆனது 120W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடனான 4,700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் எட்டு நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 50 சதவிகிதம் வரை நிரப்பும்.

ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி "இது" தான் மாஸ்!

இந்தியாவில் iQoo 9T 5G விலை மற்றும் விற்பனை:

இந்தியாவில் iQoo 9T 5G விலை மற்றும் விற்பனை:

ஐக்யூ 9T 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.49,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அந்த ரூ.59,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது ஆல்பா மற்றும் லெஜண்ட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படும். தற்போது இது ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வாங்க கிடைக்கிறது. ஆனால் அமேசான் விற்பனை ஆனது ஆகஸ்ட் 4 முதலே தொடங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.4,000 என்கிற தள்ளுபடியும் கிடைக்கும்.

Photo Courtesy: iQOO

Best Mobiles in India

English summary
New Flagship 5G Phone iQoo 9T Launched in India Amazon Sale From August 4 Check Offer Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X