Home
Mobile

நம்பி வாங்க 4 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்.. இலவச இயர்பட்ஸ் உடன் OnePlus Nord CE 4 விற்பனை!

ஆரம்பமே ரூ.1500 ஆஃபர், கூடவே ரூ.2199 மதிப்புள்ள இலவச இயர்பட்ஸ் என.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம் உங்களிடம் இருந்தால்.. இதோ அதற்கான பதில்!

விலை மற்றும் விற்பனை சலுகைகளை பொறுத்தவரை.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.24,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலவச  இயர்பட்ஸ் உடன் OnePlus Nord CE 4 விற்பனை!

ஒன்பிளஸ்.இன் (Oneplus.in), அமேசான் இந்தியா (Amazon India) வழியாக விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனை, ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 30 க்குள் வாங்கும் வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் ஒன்கார்டு வழியாக ரூ.15000 உடனடி வங்கி தள்ளுபடியை பெறுவார்கள்.

ஒருவேளை நீங்கள் எச்டிஎப்சி கிரெடிட் வழியாக வாங்கினால் ரூ.1500 மற்றும் எச்டிஎப்சி டெபிட் வழியாக வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் கிடைக்கும். இதுதவிர்த்து ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.2,199 மதிப்புள்ள ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் (OnePlus Nord Buds 2r) முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச  இயர்பட்ஸ் உடன் OnePlus Nord CE 4 விற்பனை!

நம்பி வாங்க 4 காரணங்கள்:
1. இது தெளிவான காட்சகளை வழங்கும் அட்டகாசமான டிஸ்பிளேவை (Vivid Display) கொண்டுள்ளது
2. இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த கேமரா செட்டப்புமே (ரியர் மற்றும் செல்பீ) நல்ல அவுட்புட்டை (Good Camera Output) வழங்குகின்றன
3. இது க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு 14 எக்ஸ்பீரியன்ஸை (Clean Android 14 Experience) வழங்குகிறது
4. கடைசியாக இது திடமான பேட்டரி லைஃப்பை (Solid Battery Life) உறுதிசெய்கிறது

வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்:
1. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு வரையறுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களுக்கான (Limited Android OS Updates) வாக்குறுதியையே அளித்துள்ளது
2. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் நல்ல புகைப்படங்களை வழங்கினாலும் கூட, வீடியோ குவாலிட்டி ஆனது சராசரியாகேவ (Average Video Quality) உள்ளது.

இலவச  இயர்பட்ஸ் உடன் OnePlus Nord CE 4 விற்பனை!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) உடன் இயங்குகிறது. 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது.

இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 Chipset) மற்றும் 8ஜிபி LPDDR4x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கேமிங்கிற்கான எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இலவச  இயர்பட்ஸ் உடன் OnePlus Nord CE 4 விற்பனை!

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் சோனி LYT600 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சோனி IMX355 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது.

ஐபி54 ரேட்டிங், ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உடன் வரும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது. 15 நிமிட சார்ஜிங்கில் இது ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது, அதேசமயம் வெறும் 29 நிமிடங்களில் 1 முதல் 100% சார்ஜ் ஆகிவிடும்.

Best Mobiles in India

English summary
4 reasons to buy OnePlus Nord CE 4 without any hesitation and 2 reasons to skip wisely
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X