மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
டெலிபோட்டோ கேமரா, அமோலெட் டிஸ்பிளே, வெட் ஃபிங்கர் டச் சப்போர்ட், 12 ஜிபி ரேம், 70W சார்ஜிங், கேம் கிரேடு கூலிங் பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் டெக்னோ கேமன் 30 பிரீமியர் 5ஜி வெளியாகி இருக்கிறது.
டெக்னோ கேமன் 30 பிரீமியர் 5ஜி அம்சங்கள் (TECNO CAMON 30 Premier Specifications): இந்த டெக்னோவில் 6.77 இன்ச் (1264 x 2780 பிக்சல்கள்) அமோலெட் எல்டிபிஓ (AMOLED LTPO) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

வெட் ஃபிங்கர் டச்ஸ்கிரீன் (Wet Finger Touchscreen) சப்போர்ட் கொண்டிருக்கிறது. மொத்தமாக டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்டிருக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. அதேபோல 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (3X Optical Zoom) மற்றும் 50எக்ஸ் ஹைபிரிட் ஜூம் (60X Hybrid Zoom) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ஏஐ மோஷன் ஸ்னாப்ஷாட் (AI Motion Snapshot), நைட் போர்ட்ராய்டு (Night Portrait) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 50 எம்பி ஐ-டிராக்கிங் ஆட்டோ போகஸ் செல்பீ ஷூட்டர் வருகிறது. 100எம்எஸ் போகஸ் ஸ்பீடு கொண்டிருக்கிறது. ஆகவே, நொடியில் கிரிஸ்டல் கிளியர் கேப்ச்சர் கிடைக்கும்.
இந்த கேமராவில் ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portrait), ஏஐ எரெஸ் (AI Erase) போன்ற பிரத்யேக பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக போலார்ஏஸ் இமேஜிங் சிஸ்டம் (PolarAce Imaging System) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
ஹைஓஎஸ் (HiOS) உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமெட் (MediaTek Dimensity 8200 Ultimate 5G) சிப் வருகிறது. 12 ஜிபி ரேம் (12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. 70W அல்ட்ரா சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
இந்த போனில் கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேக பேட்டரி கூலிங் சிஸ்டம் (Battery Cooling System) வருகிறது. அதேபோல ஆக்சன் டாட் (Action Dot), எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் (X-axis Linear Motor), இன்பிராரெட் கன்ட்ரோல் (Infrared Control) மற்றும் மோஷன் சென்சார் (Motion Sensor) வருகிறது.
மேலும், ஃபிளிக்கர் சென்சார் (Flicker Sensor), அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Under Display Fingerprint Sensor) வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Stereo Dual Speakers) வருகின்றன. IP54 ரெசிஸ்டன்ட் (Resistant) வருகிறது.
கிளாசிக் சைடு ஆக்சிஸ் கேமரா (Classic side-axis Camera) பேக் பேனல் டிசைன் மற்றும் மெட்டல் யுனிபாடி ஃபிரேம் (Metal Unibody Frame) உடன் பிளாக் லாவா (Black Lava), சில்வர் ஸ்னோவ் (Silver Snow) ஆகிய 2 கலர்களில் வெளியாகி இருக்கிறது. இப்போது, குளோபல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்டிருந்தும் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இந்த டெக்னோ கேமன் 30 பிரீமியர் போன் ரூ.35,000 பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications