அப்படி போடு அருவாள.. முழுசா ரூ.5000.. 100W சார்ஜிங் உடன் வரும் இந்த OnePlus போன் மீது திடீர் விலை குறைப்பு!
தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த வேகத்தில். ஒன்பிளஸ் நிறுவனம் தனது பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றின் விலையை திடீரென குறைத்துள்ளது. அதென்ன மாடல்? அதன் புதிய விலை என்ன? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மாடலுக்கு முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போன் மீது தான் தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், தற்போது குறைக்கப்பட்ட விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

பழைய விலை VS புதிய விலை: அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.56,999 ஆக இருந்தது. தற்போது ரூ.2,000 விலைக்குறைப்பை பெற்று ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.3,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.
இப்படியாக ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் மீது மொத்தம் ரூ.5000 விலைக்குறைப்பை பெற்று, இறுதி விலையை ரூ.51,999 க்கு கொண்டுவர முடியும். ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது டைட்டன் பிளாக் மற்றும் எடர்னல் கிரீன் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் மார்பிள் ஒடிஸி வெர்ஷன் ஆனது ரூ.56,999 க்கு தான் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 11 5ஜி மாடலை இப்போது நம்பி வாங்கலாமா? லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 12 மாடலானது ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கும் நேரத்தில்.. ஒரு வருட பழைய மாடலான ஒன்பிளஸ் 11 5ஜி மாடலை இப்போது நம்பி வாங்கலாமா என்கிற சந்தேகம் அல்லது குழப்பம் உங்களுக்கு இருப்பின்.. இந்த ஸ்மார்ட்போனை ஏன் வாங்கலாம் என்பதற்கான 5 பவர்ஃபுல் காரணங்கள் இதோ:
1. தெறிக்கவிடும் ஹசல்பிளாட் கேமரா செட்டப்! ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் ஹசல்பிளாட்-ஆல் இயங்கும் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன: சோனி IMX890 சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50எம்பி மெயின் கேமரா + சோனி IMX581 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 48எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 32எம்பி RGBW டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.

2. கம்பேக் கொடுத்த அலெர்ட் ஸ்லைடர்! ஒன்பிளஸ் நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான அலெர்ட் ஸ்லைடர் அம்சத்தை ஒன்பிளஸ் 11 5ஜி வழியாக மீண்டும் கொண்டு வந்தது. நினைவூட்டும் வண்ணம், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தபோதிலும் கூட இந்த அம்சம் ஒன்பிளஸ் 11-க்கு முன்னர் அறிமுகமான ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறவே இல்லை!
அறியாதோர்களுக்கு, அலெர்ட் ஸ்லைடர் என்பது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் அமைந்துள்ள ஒரு பிஸிக்கல் ஸ்விட்ச் (Physical Switch) ஆகும். இது ஸ்மார்ட்போனை ம்யூட் செய்யவோ, வைப்ரேட்டில் வைக்கவோ அல்லது ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமலேயே ரிங் மோடிற்கு மாற்றவோ, அலாரத்தை ஆப் செய்யவோ என..பல வேலைகளை மிகவும் எளிமையாக செய்ய அனுமதிக்கும் ஒரு சிறப்பம்சம் ஆகும்.
3. 5 ஆண்டுகளுக்கான அப்டேட்ஸ்! ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 13.0 உடன் வரும் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனிற்கு 4 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
4. பவர்ஃபுல் ஆன பெர்ஃபார்மென்ஸ்! ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காமின் லேட்டஸ்ட் 5ஜி சிப்செட்களில் ஒன்றான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் உள்ளது. இது 35% வேகமான சிபியு, 25% மேம்படுத்தப்பட்ட ஜிபியு-வை வழங்குகிறது. போதாக்குறைக்கு இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மல்டி-டாஸ்கிங் மற்றும் கேமிங்கின் போது எந்த குறையும் இருக்காது!
5. 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்! கடைசியாக, ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கை (SUPERVOOC Fast Charging) ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 25 நிமிடங்களில் 0 - 100% பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications








