Home
Mobile

OnePlus மிரட்டல்.. Sony கேமரா.. 100W சார்ஜிங்.. அறிமுகமானது புது 5ஜி போன்.. என்ன விலை? எப்போது விற்பனை?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nord CE4) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போனின் விலை, அம்சங்கள், விற்பனை தேதி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த பதவில் சற்று வரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 விலை: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனை ரூ.24,999 விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.26,999-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 4 மதியம் 12 மணி அளவில் அமேசான் (Amazon) மற்றும் OnePlus ஆன்லைன் ஸ்டோரில் வாங்க முடியும்.

OnePlus மிரட்டல்.. அறிமுகமானது புது 5ஜி போன்.. என்ன விலை?

அதேபோல் ஏப்ரல் 4-ம் தேதி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனை வாங்கும் பயனர்கள் ஒன்பினஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் மாடலை ரூ.2,199 விலையில் வாங்க முடியும். மேலும் கிளோசி ஃபினிஷிங் (Glossy Finish), டார்க் குரோம் (Dark Chrome), செலாடன் மார்பிள் (Celadon Marble) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 அம்சங்கள் (OnePlus Nord CE4 specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 260 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2160Hz PWM dimming) உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

OnePlus மிரட்டல்.. அறிமுகமானது புது 5ஜி போன்.. என்ன விலை?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 3 chipset) உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போன் வாங்க கிடைக்கும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W SUPERVOOC fast charging technology) தொழில்நுட்ப வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

ஒஐஎஸ் (OIS) ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி600 பிரைமரி கேமரா (50MP Sony LYT600 primary sensor) + 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா வைடு கேமரா (8MP Sony IMX355 ultra-wide camera) என்கிற டூயல் ரியர் கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது.

OnePlus மிரட்டல்.. அறிமுகமானது புது 5ஜி போன்.. என்ன விலை?

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் OxygenOS 14.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு முக்கிய இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் வயர்டு மற்றும் வயர்லெஸ் ஹெட்ஃபோன்களுக்கான ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ், ஐபி54 ரேட்டிங், யுஎஸ்பி போர்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE4 will go on sale in India on March 4: check specifications, price, colour options
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X