அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!

|

சாம்சங் நிறுவனம், ஆபர்களை அள்ளி தரும் மைண்ட் செட்டில் இருப்பது போல் தெரிகிறது. ஏனெனில் சமீபத்தில் தான் இந்நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்21 FE ஸ்மார்ட்போனின் மீது தாறுமாறான சலுகைகளை அறிவித்தது.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி வாட்ச் 4 ஸ்மார்ட் வாட்ச்சின் விலையும் குறைக்கப்பட்டது.

தற்போது ஏற்கனவே விற்பனையில் பட்டையை கிளப்பும் ஒரு Samsung 5ஜி ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Price Cut -க்கு பின்னரும்

Price Cut -க்கு பின்னரும் "இதை" நம்பி வாங்கலாமா?

அதென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்? அதன் பழைய / அசல் விலை என்ன? எவ்வளவு விலைக்குறைப்பை பெற்று உள்ளது? இனிமேல் என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்?

Price Cut -க்கு பின்னரும் அதை நம்பி வாங்கலாமா? வொர்த் ஆன மாடலா? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!

கடந்த மார்ச்சில் அறிமுகம்.. இந்த ஆகஸ்டில் ஆபர்!

கடந்த மார்ச்சில் அறிமுகம்.. இந்த ஆகஸ்டில் ஆபர்!

விலைக்குறைப்பை பெற்றுள்ள சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி (Samsung Galaxy F23 5G) ஆகும். நினைவூட்டும் வண்ணம், இது கடந்த மார்ச் மாதம் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாகி முழுதாக 4 மாதங்கள் ஆகவில்லை; அதற்குள் இதன் மீது ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மற்ற F சீரீஸ் ஸ்மார்ட்போன்களை போலவே, இதுவும் நல்லபடியே விற்பனை ஆகி கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தான் கேலக்ஸி எஃப்23 5ஜி மீது திடீர் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது!

விலை எந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது?

விலை எந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது?

Samsung Galaxy F23 5G ஸ்மார்ட்போனின் மீது ரூ.1,500 'ப்ரைஸ் கட்' அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமான விடயம் என்னவென்றால், குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது மற்றும் அது இரண்டுமே விலை "வீழ்ச்சியை" கண்டுள்ளன!

ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி "இது" தான் மாஸ்!

பழைய விலை vs புதிய விலை :

பழைய விலை vs புதிய விலை :

நினைவூட்டும் வண்ணம் Samsung Galaxy F23 5G ஆனது இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் அறிமுகமானது. அது 4GB + 128GB மற்றும் 6GB + 128GB ஆகும். இவைகள் முறையே ரூ.17,499 மற்றும் ரூ.18,499 க்கு வெளியாகின.

தற்போது இந்த 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலையிலும் ரூ.1,500 குறைக்கப்பட்டுள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் இப்போது 4ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.15,999 க்கு வாங்கலாம், அதே சமயம் 6ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.16,999 க்கு வாங்கலாம்.

விலைக்குறைப்பு மட்டுமல்ல.. பேங்க் ஆபரும் கிடைக்கும்!

விலைக்குறைப்பு மட்டுமல்ல.. பேங்க் ஆபரும் கிடைக்கும்!

Forest Green, Aqua Blue மற்றும் Cooper Blush என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும் Galaxy F23 5G மீது வெறுமனே விலைக்குறைப்பு மட்டும் அல்ல, சில வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கிறது.

ஒருவேளை நீங்களொரு ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு யூசர் என்றால், உங்களுக்கு ரூ.1,000 என்கிற உடனடி தள்ளுபடியும் அணுக கிடைக்கும்.

இதனுடன், வாடிக்கையாளர்கள் ரூ.1665 முதல் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களையும் பெறுவார்கள்.

ரூ.15,999 க்கு Samsung Galaxy F23 5G வொர்த்-ஆ?

ரூ.15,999 க்கு Samsung Galaxy F23 5G வொர்த்-ஆ?

இந்த கேள்விக்கு "பொத்தாம் பொதுவாக" பதில் சொல்லி விட முடியாது; சொல்லவும் கூடாது. முதலில் Samsung Galaxy F23 5G ஆனது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது என்பதை பற்றி பார்க்க வேண்டும். பின்னரே அது விலைக்கு ஏற்ற அம்சங்களை வழங்குகிறதா? இல்லையா? என்கிற முடிவுக்கு வர வேண்டும்.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

பெரிய டிஸ்பிளே, போதும் போதும்னு ஸ்டோரேஜ், லேட்டஸ்ட் ஓஎஸ்!

பெரிய டிஸ்பிளே, போதும் போதும்னு ஸ்டோரேஜ், லேட்டஸ்ட் ஓஎஸ்!

இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ சப்போர்ட் செய்யும் 6.6-இன்ச் அளவிலான FullHD+ TFT டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இது 4ஜிபி / 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடனான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750G SoC மூலம் இயங்குகிறது. மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி இதன் ஸ்டோரேஜை 1டிபி வரை நீட்டிக்க முடியும். இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.

ரூ.15கே பட்ஜெட்டிற்கு ஏற்ற கேமரா செட்டப்!

ரூ.15கே பட்ஜெட்டிற்கு ஏற்ற கேமரா செட்டப்!

இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் 50MP மெயின் சென்சார் + 8MP அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2MP மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.

இதன் ரியர் கேமரா செட்டப் ஆனது 30fps இல் 4K வீடியோ பதிவு மற்றும் 480fps வரை ஸ்லோ-மோஷன் பதிவை ஆதரிக்கிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங், பேட்டரி எல்லாம் எப்படி?

ஃபாஸ்ட் சார்ஜிங், பேட்டரி எல்லாம் எப்படி?

Samsung Galaxy F23 5G ஆனது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இது 5G (12 பேண்ட்ஸ்), டூயல் சிம் ஸ்லாட்டுகள், யூஎஸ்பி டைப்-C, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் என்எஃப்சி (NFC) போன்றவைகளை வழங்குகிறது.

கடைசியாக இதன் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது; சுவாரசியமாக இதில் ஃபேஸ் அன்லாக் ஆதரவும் உள்ளது.

இப்போ வாங்கிக்கோங்க.. அப்புறமா காசு கொடுங்க! Samsung-இன் இப்போ வாங்கிக்கோங்க.. அப்புறமா காசு கொடுங்க! Samsung-இன் "அடேங்கப்பா" ஆபர்!

யாரெல்லாம் வாங்கலாம்? யாரெல்லாம் 'ஸ்கிப்' செய்யலாம்?

யாரெல்லாம் வாங்கலாம்? யாரெல்லாம் 'ஸ்கிப்' செய்யலாம்?

எனக்கு மொபைல் பேட்டரி லைஃப் தான் மிகவும் முக்கியம் என்றால்.. ஏராளமான 5G பேண்டுகளை ஆதரிக்கும் ஒரு ஸ்மார்ட்போனை ரூ.18கே பட்ஜெட்டின் கீழ் வாங்க வேண்டும் என்றால்... சரியான நேரத்தில் லேட்டஸ்ட் சாப்ட்வேர் அப்டேட்கள் கிடைக்க வேண்டும் என்றால்... Galaxy F23 5G ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்; அதிலும் 6ஜிபி ரேம்-ஐ தேர்வுசெய்வது இன்னும் நல்லது!

ஒருவேளை நீங்கள் ​டிஸ்ப்ளே மற்றும் கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்துபவராக இருந்தால் வேறு ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்!

Photo Courtesy: Samsung

Best Mobiles in India

English summary
Latest Samsung Mid Range 5G Phone Gets Price Cut in India Check Galaxy F23 New Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X