Power Bank பஞ்சாயத்து! பார்த்துப் பார்த்து வாங்கினால்.. பதட்டம் இருக்காது!

|

ரூ.6,500 க்கு வாங்கிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி அல்லது ரூ.65,000 க்கு வாங்கிய ஆப்பிள் ஐபோனாக இருந்தாலும் சரி.. பேட்டரி லைஃப் என்று வந்துவிட்டால், நம் கையில் இருக்கும் பெரும்பாலான மொபைல் போன்கள் 24 மணிநேரத்தை தாண்டுவது - மிகவும் அரிது!

ஸ்மார்ட்போனில் 10% பேட்டரி தான் இருக்கிறது என்கிற நிலைமையில், அருகில் சார்ஜிங் பாயிண்ட் எதுவும் இல்லை என்கிற சூழ்நிலையில் நமக்கு உதவக்கூடிய ஒரே ஒரு ஆபத்பாண்டவன் - பவர் பேங்க் (Power Bank) தான்!

பார்த்து பார்த்து வாங்கினால்... பதட்டம் இருக்காது!

பார்த்து பார்த்து வாங்கினால்... பதட்டம் இருக்காது!

நம் கையில் ஒரு நல்ல பவர் பேங்க் இருந்தால்.. 10% பேட்டரியை பார்த்து நாம் பதட்டம் அடைய வேண்டிய அவசியமே இருக்காது. அதே சமயம் ஒரு நல்ல பவர் பேங்க்-ஐ வாங்குவதென்பது அவ்வளவு ஈஸியான காரியமும் இல்லை.

கண்களை மூடிக்கொண்டு, ஆன்லைனில் வாங்க கிடைக்கும் மட்டமான பவர் பேங்க்குகளை வாங்கினால், அது உங்கள் ஸ்மார்ட்போனிற்கு மட்டுமின்றி, உங்களுக்கே கூட ஆபத்தாக முடியலாம். பார்த்து பார்த்து வாங்கினால் தான் பதட்டம் இருக்காது!

ஒருவேளை "நமக்கு ஏன் இந்த Power Bank பஞ்சாயத்து எல்லாம்? நீங்களே.. ஒரு நல்ல பவர் பேங்க்-ஆ பார்த்து சொல்லுங்களேன்!" என்று கேட்டால்.. இதோ எங்களின் "டாப் 6" பரிந்துரை!

Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!

06. Ambrane 27000mAh பவர் பேங்க்

06. Ambrane 27000mAh பவர் பேங்க்

ஆம்ப்ரேன் 27000mAh பவர் பேங்க் ஆனது LED ஃபிளாஷ் லைட்டுடன் 4 போர்ட்களை வழங்குகிறது. அதாவது 2 USB-A போர்ட்கள், 1 USB டைப்-சி மற்றும் 1 மைக்ரோ USB போர்ட் உடன் வருகிறது.

534 கிராம் எடையுள்ள இந்த பவர் பேங்க் ஆனது ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி டேப்லெட், வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ், இயர் பட்ஸ் போன்றவைகளையும் சார்ஜ் செய்யும். இதன் விலை ரூ.1899 ஆகும்.

05. Realme 20000mAh பவர் பேங்க்

05. Realme 20000mAh பவர் பேங்க்

18W க்விக் சார்ஜ் சப்போர்ட் உடன் வரும் ரியல்மி நிறுவனத்தின் இந்த 20000mAh பவர் பேங்க் ஆனது 2 USB-A போர்ட்கள் மற்றும் 1 USB-C போர்ட் என்கிற மூன்று அவுட்புட் போர்ட்களை வழங்குகிறது.

இது ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களை சார்ஜ் செய்ய வழிவகுக்கும். வெறும் 495 கிராம் எடையுள்ள இந்த பவர் பேங்க்கின் விலை ரூ.2099 ஆகும்.

Philips அண்ணே! இதை முதல்லயே செஞ்சிருந்தா அம்மாகிட்ட அடி வாங்கி இருக்க மாட்டோம்ல!Philips அண்ணே! இதை முதல்லயே செஞ்சிருந்தா அம்மாகிட்ட அடி வாங்கி இருக்க மாட்டோம்ல!

04. Ambrane 20000mAh பவர் பேங்க்

04. Ambrane 20000mAh பவர் பேங்க்

ஆம்ப்ரேன் நிறுவனத்தின் இந்த 20000mAh பவர் பேங்க் ஆனது டூயல் USB அவுட்புட் போர்ட்கள், டைப் C போர்ட் மற்றும் மைக்ரோ USB ஆகியவற்றை வழங்குகிறது.

இதை டைப்-சி அல்லது மைக்ரோ யுஎஸ்பி கேபிள் வழியாக சார்ஜ் செய்யலாம். 20W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் இந்த பவர் பேங்க்கின் விலை ரூ.1499 ஆகும்.

03. Mi 3i 30000mAh பவர் பேங்க்

03. Mi 3i 30000mAh பவர் பேங்க்

சியோமி நிறுவனத்தின் இந்த 30000mAh பவர் பேங்க் ஆனது 18W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது. மேலும் இந்த பவர் பேங்க்கால் ஒரே நேரத்தில் மொத்தம் 3 டிவைஸ்களை சார்ஜ் செய்ய முடியும்.

இந்த பவர் பேங்கை டைப்-சி அல்லது மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மூலம் சார்ஜ் செய்யலாம். இதை (24W) USB Type-C கேபிள் வழியாக சார்ஜ் செய்தால் 7.5 மணிநேரத்தில் முழுமையாக ரீசார்ஜ் ஆகிவிடும். இதன் விலை ரூ.2999 ஆகும்.

02. Redmi 20000mAh பவர் பேங்க்

02. Redmi 20000mAh பவர் பேங்க்

ரெட்மி நிறுவனத்தின் இந்த 20000mAh பவர் பேங்க் ஆனது டூயல் USB அவுட்புட் போர்ட்களை வழங்குகிறது. மேலும் இதை டைப்-சி அல்லது மைக்ரோ யுஎஸ்பி கேபிள் கொண்டு சார்ஜ் செய்யலாம்.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ள இந்த 447 கிராம் எடையுள்ள பவர் பேங்க்கின் விலை ரூ.1699 ஆகும்.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

01. Mi 3i 20000mAh பவர் பேங்க்

01. Mi 3i 20000mAh பவர் பேங்க்

இதன் பெயர் குறிப்பிடுவது போலவே இது 20,000mAh திறன் கொண்ட ஒரு பேட்டரியை பேக் செய்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், மொத்தம் 3 டிவைஸ்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய ஆதரவு, டைப்-சி மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட்டுகள், பவர் பட்டனை இருமுறை அழுத்துவதன் மூலம் லோ-சார்ஜிங் மோட் போன்றவைகளை கொண்டுள்ளது.

6.9 மணிநேரத்தில் முழுமையாக ரீசார்ஜ் ஆகும் இந்த பவர் பேங்க்கின் விலை ரூ.1799 ஆகும்.

Best Mobiles in India

English summary
Weak Mobile Phone Battery Top 6 Best Power Bank with 20000mAh 30000mAh Capacity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X