India

Philips அண்ணே! இதை முதல்லயே செஞ்சிருந்தா அம்மாகிட்ட அடி வாங்கி இருக்க மாட்டோம்ல!

|

நம்முடைய அம்மாக்கள் எதை வேண்டுமானால் மன்னித்து விடுவார்கள். ஆனால் வெள்ளை சட்டை, பேண்ட் அல்லது ஷூவை அழுக்காக்கி கொண்டு வந்தால்.. கண்டிப்பாக அன்றைக்கு "கச்சேரி" தான்; கையில் கரண்டியோடு காட்சியளிக்கும் காளியாக மாறி விடுவார்கள்!

அதற்கு பின் நடக்கும் "சம்பவங்களை" பற்றி சபையில் பேசினால், நமக்கு தான் அசிங்கம்!

இப்படியாக நம்மில் பலரும் வெள்ளை நிறத்திலான பொருட்களை வாங்க பயப்படுவதே அது அழுக்காகி விடும் என்கிற அச்சத்தினால் தான். குறிப்பாக ஒயிட் கலர் செருப்பு மற்றும் ஷூக்களை!

ஒயிட் ஷர்ட், பேண்ட்-ஐ கூட காப்பாற்றி விடலாம்.. ஆனால் ஷூவை?

ஒயிட் ஷர்ட், பேண்ட்-ஐ கூட காப்பாற்றி விடலாம்.. ஆனால் ஷூவை?

வெள்ளை நிற சட்டை மற்றும் பேண்ட்-ஐ கூட தரையில் படாமல், அழுக்கில் படமால் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த "பாவப்பட்ட" ஷூக்கள் இருக்கிறதே, அவைகளுக்கு அழுக்கில் தான் வேலையே!

அப்படியான ஒயிட் கலர் ஷூவை மற்றும் ஸ்னீக்கர்ஸை அழுக்குகளில் இருந்து காப்பாற்ற வழியே இல்லையா? என்கிற கூக்குரல், பிலிப்ஸ் நிறுவனத்தின் காதுகளில் விழுந்து விட்டது போலும்!

இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

"கூல் டவுன்" என்று கூறி கூலாக அறிமுகமான பிலிப்ஸ் ஸ்னீக்கர் கிளீனர்!

அட ஆமாங்க! பிலிப்ஸ் (Philips) நிறுவனம் இந்தியாவில் "முதன் முறையாக" ஒரு ஸ்னீக்கர் கிளீனரை அறிமுகம் செய்துள்ளது.

பிலிப்ஸ் ஸ்னீக்கர் கிளீனர் ஜிசிஏ1000/60 (Philips Sneaker Cleaner GCA1000/60) என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டிவைஸின் விலை என்ன? இது எத்தனை ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வருகிறது? இதை பயன்படுத்துவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பிலிப்ஸ் நிறுவனத்தின் தைரியம்!

பிலிப்ஸ் நிறுவனத்தின் தைரியம்!

நீங்களொரு 90ஸ் கிட் ஆக இருந்தாலும் சரி அல்லது 2கே கிட் ஆக இருந்தாலும் சரி, உங்களுக்கு 'பிலிப்ஸ்' என்கிற பெயர், மிகவும் பரீட்சியமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆகையால் பிலிப்ஸ் நிறுவனத்தை பற்றி அதிகம் பேசி 'போர்' அடிக்காமல்.. நேரடியாக ஸ்னீக்கர் க்ளீனரை பற்றி பார்ப்போம்.

ஆட்டோமேடட் ஷூ கிளீனர்கள் - ஒரு பொதுவான தயாரிப்பு அல்ல என்றாலும் கூட Philips நிறுவனம் தைரியமாக அதை அறிமுகம் செய்துள்ளது பாராட்டுக்கு உரியது!

பிலிப்ஸ் ஸ்னீக்கர் கிளீனர் ஆனது உங்கள் காலணிகளில் உள்ள அழுக்கை எளிமையாக, வசதியாக மற்றும் திறமையான முறையில் சுத்தம் செய்ய அனுமதிக்கிறது.

Zomato, Swiggy-யின் Zomato, Swiggy-யின் "ஆட்டத்தை" முடிக்க.. உணவகங்கள் எடுத்த அதிரடி முடிவு!

இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? இது எப்படி வேலை செய்யும்?

இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? இது எப்படி வேலை செய்யும்?

பிலிப்ஸ் ஸ்னீக்கர் ஷூ கிளீனர் ஆனது 'ரப்பிங்' மற்றும் 'ஸ்க்ரப்பிங்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் காலணிகளை வேகமாகவும், திறமையாகவும் சுத்தம் செய்யும்.

உண்மையிலேயே இது மிகவும் வேகமானது மற்றும் மூன்று வெவ்வேறு ப்ரெஷ்களுடன் வருகிறது. அதாவது ஒரு மென்மையான ப்ரெஷ் (Soft brush), ஒரு கடினமான ப்ரெஷ் (Hard brush) மற்றும் பலவிதமான "துப்புரவு பணிகளுக்கு" பயன்படுத்துவதற்கான சாஃப்ட் ஸ்பான்ஜை (Soft sponge) வழங்குகிறது.

ஒவ்வொரு ப்ரெஷும் ஒவ்வொரு வேலைக்கானது!

ஒவ்வொரு ப்ரெஷும் ஒவ்வொரு வேலைக்கானது!

சாஃப்ட் ப்ரெஷ் என்பது பல்நோக்கு பயன்பாட்டிற்கு ஏற்றது; மெஷ் மற்றும் கேன்வாஸுக்கு ஏற்றது. ஹார்ட் ப்ரெஷ் ஆனது கடினமான மேற்பரப்புகளை கொண்ட ஷூக்களை முழுமையாக சுத்தம் செய்வதற்கு ஏற்றது. சாஃப்ட் ஸ்பான்ஜ் ஆனது பிவிசி, லெதர் போன்ற மென்மையான காலணிகளுக்கு ஏற்றது.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

வாட்டர்-ரெசிஸ்டென்ட்.. 80 நிமிடங்கள் பேட்டரி மற்றும் பல!

வாட்டர்-ரெசிஸ்டென்ட்.. 80 நிமிடங்கள் பேட்டரி மற்றும் பல!

பிலிப்ஸ் ஸ்னீக்கர் கிளீனரில் உள்ள 'ஹெட்' ஆனது நீரை எதிர்க்கும் ஆதரவுடன் (Water-resistant) வருகிறது. ஆக தண்ணீர் தொடர்பான பாதுகாப்பு சிக்கல்கள் அதிகம் இருக்காது. அதாவது இது IPX5 "நீர்ப்புகா" மதிப்பீட்டை பெற்றுள்ளது.

இந்த ஸ்னீக்கர் கிளீனர் ஒரு "இலகுரக", வயர்லெஸ் மற்றும் கையடக்க டிவைஸ் என்பதால் இதை நீங்கள் எங்கும் எடுத்து செல்லலாம்; "எதிலும்" வைக்கலாம்.

இந்த ஸ்னீக்கர் கிளீனரின் எடை வெறும் 0.35 கிலோ மட்டுமே ஆகும். எனவே பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் முதல் டிராவல் விரும்பிகள் வரை எல்லோருமே இதை நம்பி வாங்கலாம்!

மேலும் இது 6V 4 AA பேட்டரிகளுடன் வருகிறது, நிறுவனத்தின் கூற்றுப்படி இது 80 நிமிடங்கள் வரை செயல்படும் மற்றும் 500RPM (வரை) என்கிற க்ளீனிங் ஸ்பீட்-ஐயும் வழங்கும்.

என்ன விலை, எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

என்ன விலை, எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

இந்தியாவில் Philips Sneaker Cleaner GCA1000/60 ஆனது ரூ.2,595 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவாரசியமாக இது 2 ஆண்டு உத்தரவாதத்துடனும் வருகிறது.

இது பிலிப்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் இ-ஸ்டோர் (Philips Domestic Appliances e-store) வழியாக பிரத்தியேகமாக வாங்க கிடைக்கிறது.

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

"வாழ்க ஸ்னீக்கர் கலாச்சாரம்!"

Philips Sneaker Shoe Cleaner GCA1000/60 அறிமுகத்தின் முக்கிய நோக்கமே, இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்னீக்கர் கலாச்சாரத்தை மேம்படுத்துவதே ஆகும்.

கைமுறையாக சுத்தம் செய்வதை விட பிலிப்ஸ் ஸ்னீக்கர் க்ளீனர் ஆனது சிறப்பாக செயல்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். விரைவாகவும் சிரமமின்றி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனம் அனைத்து வகையான ஸ்னீக்கர்களுக்குமான ஒரு சிறந்த டிவைஸ் ஆகும்.

Photo Courtesy: Philips

Most Read Articles
Best Mobiles in India

English summary
Philips First Shoe Cleaning Device Introduced in India Check Sneaker Cleaner Price How it Works

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X