ரூ.299 விலையில் TWS இயர்பட்ஸ்.. லேட் பண்ணா கிடைக்காது.. உடனே வாங்குங்க.. எந்த மாடல்? எங்கே வாங்கலாம்?
மிகவும் குறைந்த விலையில் ஒரு அசத்தலான TWS இயர்பட்ஸ் (Earbuds) சாதனத்தை வாங்க முடியுமா? என்று சந்தேகித்தவர்களுக்கு முடியுமென்று பதிலளித்துள்ளது ட்ரூக் (Truke) பிராண்ட். வெறும் ரூ.299 விலையில், பிரீமியம் தரத்தில் ஒரு புது இயர்பட்ஸ் வாங்கும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.
என்னது? வெறும் ரூ.299 விலையில் ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் (Truly Wireless Stereo Earbuds) வாங்க முடியுமா? உண்மையாவா? என்று உங்களில் சிலர் சந்தேகமாக இந்த பதிவை படிப்பது எங்களுக்கு தெரிகிறது. ஆமாங்க, உண்மையாகவே வெறும் ரூ. 299 விலையில் இப்போது உங்களால் ஒரு அட்டகாசமான TWS இயர்பட்ஸ் சந்தானத்தை வாங்க முடியும். இவ்வளவு மலிவு விலையில் இயர்பட்ஸா? இதன் தரம் எப்படி இருக்கும்?

ட்ரூக் பட்ஸ் கியூ1 லைட் (Truke Buds Q1 Lite):
தரத்தில் எந்த குறையும் இல்லாமல், ஆடியோ குவாலிட்டியில் அலறவிடும் அம்சங்களுடன் ட்ரூக் (Truke) நிறுவனம், அதன் புதிய ட்ரூக் பட்ஸ் கியூ1 லைட் (Truke Buds Q1 Lite) TWS இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ட்ரூக் பட்ஸ் Q1 லைட் இயர்பட்ஸ் சாதனம் இப்போது இந்தியாவில் விற்பனைக்கும் களமிறக்கப்பட்டுள்ளது. அறிமுக விற்பனையின் ஒரு பகுதியாக ட்ரூக் பிராண்ட் புதிய சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சலுகை ஒரு அறிமுக சலுகை என்பதனால், குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த லேட்டஸ்ட் ட்ரூக் பட்ஸ் கியூ1 லைட் இயர்பட்ஸ் சாதனத்தை நீங்கள் வெறும் ரூ. 899 என்ற சலுகை விலையில் இப்போதே வாங்கிட முடியும். இது குறுகிய கால சலுகையாகும். ட்ரூக் இப்போது மற்றொரு சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது.
அந்த சிறப்பு சலுகையில் படி, ட்ரூக் பட்ஸ் கியூ1 லைட் இயர்பட்ஸ் சாதனத்தை வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு, ட்ரூக் நிறுவனம் இந்த சாதனத்தை வெறும் ரூ.299 என்ற மலிவு விலையில் வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல் 100 நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த ட்ரூக் பட்ஸ் கியூ1 லைட் இயர்பட்ஸ் சாதனத்தை ரூ.299 விலையில் தட்டி தூக்கிய அதிர்ஷ்டசாலியாக நீங்களும் மாறலாம்.

இந்த சிறப்பு சலுகை விலை எங்கு பொருந்தும்? எங்கே வாங்கலாம்?
இந்த சிறப்பு சலுகை அமேசான் (Amazon) தளம் மற்றும் Truke நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் வழியாக கிடைக்குமென்று அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) வழியாகவும் இது வாங்க கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், இந்த ட்ரூக் பட்ஸ் கியூ1 லைட் இயர்பட்ஸ் சாதனம் 12.4 mm டைட்டானியம் டிரைவர்களுடன் (12.4mm Titanium drivers) தரமான ஆடியோவை வழங்குகிறது.
இதுவொரு ட்ரூ வயர்லெஸ் இன்-இயர் (True Wireless In-Ear) இயர்பட்ஸ் சாதனமாகும். இது 40ms அல்ட்ரா லோ-லேடன்சி கேமிங் மோட் (40ms Ultra Low Latency Game mode) அம்சத்துடன் வருகிறது. இந்த TWS இயர்பட்ஸ் சாதனம் குவாட் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Quad Mic Environmental Noise Cancellation) ஆதரவை கொண்டுள்ளது. இது ப்ளூடூத் v5.4 வெர்ஷனில் (Bluetooth v5.4) இயங்குகிறது.
இந்த புதிய ட்ரூக் பட்ஸ் கியூ1 லைட் (Truke Buds Q1 Lite) இயர்பட்ஸ் சாதனம் 48 மணிநேர பிளேபேக் நேரத்தை (48h Total Playback time) இந்த டிவைஸ் வழங்குகிறது. சிங்கிள் சார்ஜில் (Single charge) சுமார் 10 மணி நேரம் நேரடியாக பிளே செய்யும் ஆயுளை இது கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் சாதனம் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதனால் வெறும் 10 நிமிடத்தில் 100 நிமிட பிளேடைம் கிடைக்கிறது.
இது டச் கண்ட்ரோல் (Touch controls) உடன் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice assistant) ஆதரவை கொண்டுள்ளது. இது மெட்டல் பிளாக் (Metal Back), சாம்பைன் கோல்டு (Champagne Gold), மற்றும் றோஸ் ரெட் (Rose Red) நிறங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








