வாட்ஸ்அப்-ஐ விட அதிக அம்சம் இருக்கும் வாட்ஸ்அப் Mods! ஆனா ஒரு பெரிய சிக்கல் இருக்கு!

|

உலகெங்கிலும் சுமார் 2 பில்லியினுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டுச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். உலகின் மிகவும் பிரபலமான இந்த மெசேஜ்ஜிங் தளத்தில் ஸ்செடுலிங் மெசேஜ் அல்லது பெரிய அளவு ஃபைல்களை அனுப்பும் சில முக்கிய அம்சங்கள் கிடைப்பதில்லை. இதனால் பலரும் வாட்ஸ்அப் Mods செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றால் ஏற்படும் சிக்கல் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் Mods

வாட்ஸ்அப் Mods

வாட்ஸ்அப் பயன்பாட்டில் கிடைக்காத பல முக்கிய அம்சங்கள் இந்த வாட்ஸ்அப் Mods செயலியில் கிடைக்கிறது. ஆப்பிரிக்காவைத் தளமாகக் கொண்ட பயனர்கள் பெரிதும் இந்த வாட்ஸ்அப் Mods செயலிகளையே பயன்படுத்தி வருகின்றனர் என்று குவார்ட்ஸ் அறிக்கை அண்மையில் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இந்த பயன்பாடுகள் செயல்பட்டு வருகிறது. இவற்றை மக்கள் பெரியளவில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் கிடைப்பதில்லை

அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் கிடைப்பதில்லை

குவார்ட்ஸ் நிறுவனத்தின் அறிக்கைப் படி இந்த நாக்-ஆஃப் வெர்ஷன்கள் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் கிடைப்பதில்லை. ஆனால், இதற்குப் பதிலாக இதைப் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் இந்த பயன்பாடு செயலியை அதிகாரப்பூர்வமற்ற மூலங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் இன்னும் சிலர் ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு ஆஃப்லைனில் ஷேர் செய்துகொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!

GBWhatsApp மற்றும் YoWhatsApp

GBWhatsApp மற்றும் YoWhatsApp

GBWhatsApp மற்றும் YoWhatsApp போன்ற வாட்ஸ்அப் Mods செயலிகளைத் தான் வெளிநாட்டினர் கூட அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறிக்கை விபரம் தெரிவிக்கிறது. இந்த பயன்பாடுகள் பேஸ்புக் மற்றும் மெசஞ்சரை விட மிகவும் பிரபலமானவை என்று குவார்ட்ஸ் நிறுவனத்தின், கஸீம் குறிப்பிட்டிருக்கிறார்.

சாட்டிற்கு பாஸ்வோர்டு லாக்

சாட்டிற்கு பாஸ்வோர்டு லாக்

தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்டிற்கு பாஸ்வோர்டு லாக், பெரியளவிலான தீம் செலெக்ஷன், ஃபைல் பிரிவியூ போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்படுகிறது. இதனால் இவற்றைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏடிஎம்-ல் ரூ.100 நோட்டு குறைந்த அளவு வருவதற்கு இதுதான் காரணமா? உண்மையை சொன்ன அதிகாரிகள்!ஏடிஎம்-ல் ரூ.100 நோட்டு குறைந்த அளவு வருவதற்கு இதுதான் காரணமா? உண்மையை சொன்ன அதிகாரிகள்!

சாட் என்கிரிப்ட்ஷன் குறியாக்கம்

சாட் என்கிரிப்ட்ஷன் குறியாக்கம்

ஆனால், இந்த பயன்பாடுகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமான செயலிகள் இல்லை என்பதே உண்மை. இயற்கையாகவே இந்த அதிகாரப்பூர்வமற்ற பதிப்புகள் மூலம், பயனர்களுக்குப் பாதுகாப்பு ஆபத்து அதிகம் உள்ளது என்கின்றனர் வல்லுநர்கள். மிக முக்கியமாக, இந்த மோட்களில் சாட் என்கிரிப்ட்ஷன் குறியாக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் ஒட்டுக் கேட்கக்கூடும்

அரசாங்கம் ஒட்டுக் கேட்கக்கூடும்

ஆகையால், GBWhatsApp மற்றும் YoWhatsApp போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களின் சாட் மெசேஜ்களை ஹேக்கர்கள் அல்லது அரசாங்கம் ஒட்டுக் கேட்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். கூடுதலாக, வாட்ஸ்அப் நிறுவனத்தின் பெயரில் விதிமுறைகளையும் சேவைகளையும் மீறுவதால், இந்த மூன்றாம் தரப்பு செயலிகளை, வாட்ஸ்அப் தடைசெய்யவும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டிற்கு தனிபாசம் காட்டிய பிஎஸ்என்எல்.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!தமிழ்நாட்டிற்கு தனிபாசம் காட்டிய பிஎஸ்என்எல்.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

பதிவிறக்கம் செய்து ஆபத்தில் சிக்காதீர்கள்

பதிவிறக்கம் செய்து ஆபத்தில் சிக்காதீர்கள்

இந்த பதிப்புகள் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று நிறுவனம் பலவிதமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதிக அம்சம் இருக்கிறது என்று இந்த மூன்றாம் நபர் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp Mods With Extra Features We All Want But There Is A Problem For Security : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X