தமிழ்நாட்டிற்கு தனிபாசம் காட்டிய பிஎஸ்என்எல்.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

|

ஜியோ,ஏர்டெல்,வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கிவந்தது, ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனங்கள் தங்களின் விலைகளை சற்று உயர்த்தின, ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் அப்படி செய்யவில்லை, இதனால் பிஎஸ்என்எல் நிறுவனம் கணிசமான எண்ணிக்கையில் புதிய சந்தாதாரர்களை தன்வசம் ஈர்த்தது.

ஏர்டெல், வோடபோன்,பிஎஸ்என்எல்

குறிப்பாக ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்தபோதிலும் மற்ற நிறுவனங்கள் அதை செய்யவில்லை,குறிப்பாக ஏர்டெல், வோடபோன்,பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் குரல் அழைப்புகளை இலவசமாக
வழங்கிவருகிறது.

270நாட்களுக்கு வழங்கி வருகிறது

270நாட்களுக்கு வழங்கி வருகிறது

சில மாதங்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.998-திட்டத்தில் சிறப்பு சலுகையை அறிவித்தது,அதனொரு பகுதியாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் சந்தாதரர்களுக்கு 2ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை 270நாட்களுக்கு வழங்கி வருகிறது.

அட்வான்ஸ் ரெண்டல்

அட்வான்ஸ் ரெண்டல்

இந்நிலையில் தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களில் அமைந்துள்ள போஸ்ட்பெய்ட்
சந்தாதாரர்களுக்கு அட்வான்ஸ் ரெண்டல் எனும் விருப்பத்தை அறிமுகம் செய்து வழங்கி வருகிறது,அதாவது முன்கூட்டியே வாடகை செலுத்தும் விருப்பத்தை வழங்கி வருகிறது.

2020,மார்ச் 1-ம் தேதி முதல் செயல்படத்துவங்கியுள்ளது

2020,மார்ச் 1-ம் தேதி முதல் செயல்படத்துவங்கியுள்ளது

குறிப்பாக இந்த அட்வான்ஸ் ரெண்டல் விருப்பம் ஆனது நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்களுக்கு இரண்டுவிருப்பங்களை வழங்கும் மற்றும் இது 2020,மார்ச் 1-ம் தேதி முதல் செயல்படத்துவங்கியுள்ளது.

11மாதங்களுக்கான வாடகை

11மாதங்களுக்கான வாடகை

அட்வான்ஸ் ரெண்டல் விருப்பத்தின் அடிப்படையில்,பயனர்கள் தங்களது வாடகையை செலுத்த இரண்டு முறையை பயன்படுத்தலாம். முதலாவதாக-வருடாந்திர அட்வான்ஸ் விருப்பம், இதன் கீழ் ஜிஎஸ்டி கட்டணங்களுடன் சேர்த்து
11மாதங்களுக்கான வாடகையை முன்கூட்டியே செலுத்தமுடியும்.

 21 மாதங்களுக்கான வாடகை

21 மாதங்களுக்கான வாடகை

அடுத்து இரண்டாவதாக, இரண்டு ஆண்டுகளுக்கு அட்வான்ஸ் செலுத்தும் விருப்பம் உள்ளது. இதன் கீழ் ஜிஎஸ்டி கட்டணங்களுடன் சேர்த்து 21 மாதங்களுக்கான வாடகையை முன்கூட்டியே செலுத்தலாம்.

போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்கள்

மேலும் அட்வான்ஸ் ரெண்டல் விருப்பத்தின் காலம் முடிந்ததும்,போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்கள் தானகவே பிஎஸ்என்எல் வழங்கும் மாத வாடகை திட்டங்களுக்கு மாறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

பிஎஸ்என்எல் ரூ.998-க்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகை

பிஎஸ்என்எல் ரூ.998-க்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.998-திட்டத்திற்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இப்போது 240 நாட்களுக்கு பதிலாக 270 நாட்கள் என்கிற கூடுதல் செல்லுபடியின் கீழ் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சலுகை

மற்றொரு சலுகை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மற்றொரு சலுகை என்னவென்றால், ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கான ரூ.551 திட்டமானது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டம் தினசரி 5ஜிபி டேட்டா மற்றும் 90நாட்கள் வேலிடிட்டி வசதியுடன்
கிடைக்கிறது. மேலும் இதில் குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடையாது எனபது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் இந்த திட்டம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL Advance Payment Options for Chennai and Tamil Nadu Postpaid Subscribers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X