Home
News

அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!

அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் முழுவதுமாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி வருகின்றன.

நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள்

நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள்

அதேபோல் கடந்த காலாண்டு கணக்கு முடிவில் வோடபோன் நிறுவனம் இதுவரை வரலாறு காணாத நஷ்டங்களை சந்தித்ததாகவும், ஏர்டெல் நிறுவனமும் கடும் நஷ்டத்தை சந்தித்ததாகவும் தெரிவித்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு அந்த நிறுவனங்களுக்கு பேரிடியாக விழுந்தது என்றே சொல்லலாம்.

திட்டத்தின் வேலிடிட்டியும் விலையும் மாற்றம்

திட்டத்தின் வேலிடிட்டியும் விலையும் மாற்றம்

இதையடுத்து அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களது திட்டத்தை மாற்றம் செய்து அறிவித்தன. அதேபோல் குறிப்பாக வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் அதே விலைக்கு தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் விலை குறைவாக இருந்தது

ஜியோவின் விலை குறைவாக இருந்தது

ஆனால் ஜியோ நிறுவனம் முதலில் கட்டணங்களை சற்று உயர்த்தி அறிவித்தாலும், பின்பு குரல் அழைப்பு நன்மைகளுக்கு கட்டணம் வசூல் செய்தது, இருப்பினும் ஜியோவின் விலைகள் மற்றவைகளை விட குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக ஜியோவின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை பெரிதாக பாதிக்கவில்லை.

1 ஜிபி டேட்டாவுக்கு ரூ.20 என நிர்ணயிக்க திட்டம்

1 ஜிபி டேட்டாவுக்கு ரூ.20 என நிர்ணயிக்க திட்டம்

ஜியோ நிறுவனம் 1ஜிபி- டேட்டாவுக்கு தற்போதுவரை ரூ.15 என நிர்ணயித்து வசூலித்து வருகிறது. இந்த நிலையில் அதன் கட்டணம் ரூ.20-ஆக உயர்த்த விரும்புவதாக தகவல்கள் வெளியானது. அதற்கேற்ப இந்த விலை உயர்வு ஆறு மாத காலத்திற்குள் படிப்படியாக இருக்கும் என்று அந்த நிறுவனம் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

360 நாட்கள் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ

360 நாட்கள் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ

இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ அறிவித்து நீண்ட நாள் திட்டமானது 360 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் உள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ 28 நாட்கள் திட்டங்களை மாதாந்திர திட்டமாகவும், 336 நாட்கள் திட்டங்களை வருடாந்திர திட்டமாகவும் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டம் 360 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 350 ஜிபி டேட்டா

மொத்தமாக 350 ஜிபி டேட்டா

இந்த திட்டத்தின் மூலம், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 350 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த டேட்டாவானது தினசரி வரம்பு திட்டம் என்பதற்கு பதிலாக மொத்த டேட்டா திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

64 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா

64 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் மொத்தமாக வழங்கப்பட்டுள்ள 350 ஜிபி நிறைவடைந்தவுடன் வரம்பற்ற 64 கேபிபிஎஸ் வேகத்துடன் டேட்டா வழங்கப்படுகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது திட்டத்தை தொடர்ந்து பெறலாம்.

ஜியோ டூ ஜியோ இலவசம்

ஜியோ டூ ஜியோ இலவசம்

பிற நன்மைகள் என்று பார்க்கையில், ஜியோ டூ ஜியோ வரம்பற்ற இலவச குரல் அழைப்பு, அதேபோல் மற்ற தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு 12,000 நிமிட இலவச அழைப்புகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பலாம். மேலும் ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கும் இலவச சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலையானது ரூ.4,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

336 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தின் விலை திருத்தம்

336 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தின் விலை திருத்தம்

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ அறிவித்த வருடாந்திர திட்டத்தில் விலை திருத்தம் செய்யப்பட்டு ரூ.2121 ஆக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டமானது 336 நாட்கள் செல்லுபடியாகும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் பிற தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு 12,000 நிமிட சேவை வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reliance jio 4999 plan: jio brings back long term prepaid plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X