ஏடிஎம்-ல் ரூ.100 நோட்டு குறைந்த அளவு வருவதற்கு இதுதான் காரணமா? உண்மையை சொன்ன அதிகாரிகள்!

|

அவசரத்திற்கு அருகில் உள்ள ஏடிஎம் சென்று பணம் எடுக்க வரிசையில் நிற்பவர்கள், முன்னாள் சென்று பணம் எடுத்து வெளியே வருபவர் கையில் 100 ரூபாய் நோட்டு உள்ளதா என்று உற்றுப்பார்ப்பார்கள். இன்னும் சிலர் பிரதர் 100 ரூபாய் வருதா? என்று நேரடியாகவே கேள்வி கேட்டுவிடுவார்கள். இதற்கான காரணம் இந்தியாவில் நிகழும் 100 ரூபாய் நோட்டிற்கான தட்டுப்பாடு தான். இந்த சூழ்நிலைக்குப் பின்னால் உள்ள உண்மை காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

குறைத்த அளவில் 100 ரூபாய் நோட்டுகள்

குறைத்த அளவில் 100 ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் உள்ள ஏடிஎம் மையங்களில் தற்பொழுது பெரும்பாலும் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே பெரிதும் கிடைக்கிறது. குறைத்த அளவில் மட்டுமே 100 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் கிடைக்கிறது. முதலில் இந்த 100 ரூபாய் நோட்டுகளுக்கு ஏன் மக்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளதென்று தெரிந்துகொள்ளலாம். இதற்கான முக்கிய காரணம் எளிதாகச் சில்லரை மாற்றிக்கொள்ளலாம் என்பது தான்.

பிரச்சனை இல்லாத 100 ரூபாய் நோட்டு

பிரச்சனை இல்லாத 100 ரூபாய் நோட்டு

கடைக்குச் சென்று 2000 அல்லது 500 ரூபாய் நோட்டுகளை நீட்டினாள், கடைக்காரர் சில்லரை இல்லை என்று கடுப்பாகக் கூறிவிடுவார். ஆனால், 100 ரூபாய் நோட்டிற்கு இந்த பிரச்சனை இல்லை, அனைத்து விதமான பரிவர்த்தனைக்கு எளிதாக உள்ளது என்பதனால் தான் மக்கள் மத்தியில் 100 ரூபாய் நோட்டுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஆனாலும் இந்தியாவில் இப்போது 100 ரூபாய் நோட்டுகள் தான் தட்டுப்பாட்டில் உள்ளது.

அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!

உங்களின் அத்தனை கேள்விகளுக்குமான ஒரே பதில்

உங்களின் அத்தனை கேள்விகளுக்குமான ஒரே பதில்

ஏன் இந்த தட்டுப்பாடு? வங்கிகளுக்கு ஏதேனும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா? RBI ஏதேனும் கட்டுப்பாட்டை விதித்துள்ளதா? அல்லது ஒரு நாளைக்கு இத்தனை 100 நோட்டுக்களைத் தான் ஏடிஎம் மூலம் விநியோகம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு உள்ளதா என்று நமது மனதில் பல கேள்விகள் எழுந்திருக்கும். இந்த அத்தனை கேள்விக்கான ஒரே பதில் அப்படி எந்த ஒரு கட்டுப்பாடுமில்லை, கட்டலையும் விதிக்கப்படவில்லை என்பது தான்.

தட்டுப்பாட்டிற்கான உண்மை காரணம்

தட்டுப்பாட்டிற்கான உண்மை காரணம்

உண்மையில் இந்த தட்டுப்பாட்டிற்கான காரணம், 100 நோட்டுகளின் அளவு தான். புதிய மற்றும் பழைய 100 நோட்டுகளுக்கு இடையே உள்ள சிறிய மற்றும் பெரிய அளவு வித்தியாசம் தான் ஏடிஎம் மையங்களில் 100 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடானதற்கு முக்கிய காரணம் என்று ஏடிஎம் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். ஏடிஎம் ஆபரேட்டர்கள் இந்த நோட்டுக்களை வரிசையாக அமைப்பதில் சிக்கல் ஏற்படுகிறதாம்.

தமிழ்நாட்டிற்கு தனிபாசம் காட்டிய பிஎஸ்என்எல்.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!தமிழ்நாட்டிற்கு தனிபாசம் காட்டிய பிஎஸ்என்எல்.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

ஏடிஎம் Cassette என்றால் என்ன தெரியுமா?

ஏடிஎம் Cassette என்றால் என்ன தெரியுமா?

ஏடிஎம் இயந்திரத்தில் அனைத்து நோட்டுகளும் Cassette என்று பெட்டியில் தான் வைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு விதமான அளவு கொண்ட நோட்டுகளை ஒரே Cassette பெட்டியில் வைக்க முடியாது. இந்த பெட்டியில் வைக்கப்படும் 2000, 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் தான் ஏடிஎம் மூலம் ரொக்கமாகப் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஒரே அளவிலான நோட்டுக்களை மட்டும் தான் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 4 Cassette பெட்டிகள் மற்றும் 2 Cassette பெட்டிகள்

4 Cassette பெட்டிகள் மற்றும் 2 Cassette பெட்டிகள்

புதிய எந்திரங்களை 4 Cassette பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது, அதேபோல் பழைய ஏடிஎம் எந்திரங்களில் 2 Cassette பெட்டிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் தான் பழைய எந்திரங்களில் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் வருவதற்கான காரணம். உண்மையில் வங்கிகளில் 100 ரூபாய் நோட்டுகளுக்கான பற்றாக்குறையே இல்லை என்கின்றனர் வங்கி ஊழியர்கள்.

சத்தமில்லாமல் சலுகையை வழங்கிய டாடா ஸ்கை டிடிஹெச்.! என்ன தெரியுமா?சத்தமில்லாமல் சலுகையை வழங்கிய டாடா ஸ்கை டிடிஹெச்.! என்ன தெரியுமா?

ரூ.100 நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ரூ.100 நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.100 நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு வராமல் தடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி பழைய நோட்டுகளை இயந்திரங்களில் வைப்பதை அனுமதிக்கக் கூடாது என்கின்றனர் ஏடிஎம் ஆபரேட்டர்கள். மேலும் புதிய நோட்டுகளுக்கான அளவு Cassette-களை நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவும் உண்மை தான்

இதுவும் உண்மை தான்

இந்த 100 ரூபாய் நோட்டுகளுக்கான தட்டுப்பாட்டிற்கான காரணம், புதிய மற்றும் பழைய நோட்டுகளின் அளவுதான் என்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் சொல்லும்படி புதிய நோட்டுகளை மட்டும் பயன்படுத்தினால், 100 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்படும் தட்டுப்பாடு சிக்கலை முற்றிலுமாக போக்க முடியும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். எதுவாக இருப்பினும் இன்னும் பல ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் இருப்பதே உண்மை.

Best Mobiles in India

Read more about:
English summary
The True Reason Behind 100 Rupee Note Crisis In India's ATM Machines : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X