வேட்டையாடுபவர்களை மிரளவைக்கும் யுக்தி: சூறாவளி போல் சுற்றி சூழ்ச்சி செய்யும் கலைமான்கள்- ட்ரோன் வீடியோ வைரல்!

|

வேட்டையாடுபவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள கலைமான் சூறாவளிக் காற்று போல் வட்டமிடும் காட்சி டிரோன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்படும் வித்தியாசமான உயிரினங்களும் ஆச்சரியங்களும் நம்மை வியப்படைய செய்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் நம்மை வியப்படைய செய்வதோடு பூரிக்க வைக்கிறது. உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துக் கொண்டே போகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும்., அதற்கு இணையான கண்டுபிடிப்புகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

 சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

சில நேரங்களில் சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள், நம்மை சில விநாடிகள் உராயவைத்து பார்க்கச் செய்கிறது. அதன்படி சமீபத்தில் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சூறாவளிகாற்று போல் கலைமான்கள் வட்டமிடும் வீடியோ ஆகும். சூறாவளி காற்று போல் வட்டமாக கலைமான் சுற்றியும், வட்டமிடும் வேகத்திற்கு ஏற்ப தலையை ஆட்டும் காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. வேட்டையாடுபவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள கலைமான் சூறாவளிக் காற்று போல் வட்டமிடும் காட்சி டிரோன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிர்ச்சியூட்டும் சிறந்த சம்பவம்

டிரோன் மூலம் அதிர்ச்சியூட்டும் சிறந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள கலைமான் மந்தையில் வேட்டையாடுபவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இறுக்கமான வட்டத்தில் கலைமான்கள் விறுவிறுப்பாக நகர்ந்து ஹிப்னாடிக் தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வு பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

சூறாவளி காற்று போல் கலைமான்

சூறாவளி காற்று போல் கலைமான் வட்டமாக சுறுசுறுப்பாக நகர்ந்து தனது கன்றுகளை வட்டத்தின் நடுவில் நிற்கவைத்து வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு ஒரு விளைவை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை புகைப்படக் கலைஞரான லெவ் ஃபெடோசீவ் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த டுவிட்டர் பயனரான @gunnrosesgirl3 தகவலின்படி, கலைமான் சூறாவளி யுக்தியானது சிறந்த பாதுகாப்பு தேர்வாகும். கலைமானின் இந்த ஒருங்கிணைந்த சூழ்ச்சியின் மூலம் அவைகளை வேட்டையாடுபவர்கள் குறிவைப்பது சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மந்தையின் ஹிப்னாடிக் வீடியோ

மந்தையின் ஹிப்னாடிக் வீடியோ சமூகவலைதளத்தில் சாத்தியமாகி வருகிறது. ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் உள்ள கலைமான்கள் வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்பிக்க சூறாவளி சுழல் பாதுகாப்பு யுக்தியை பயன்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கலைமான்கள் குறித்த எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேட்டையாடுபவர்களிடம் இருந்து தற்காப்பு

கலைமான்கள் வேட்டையாடுபவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள சூறாவளி சூழல் உக்தியை கையாளும் என்பது பேசுபொருளாக இருந்தது. இதை பெரும்பாலானோர் நம்பவில்லை. இந்த நிலையில் இந்த ஆவணப்படம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி சுழல் வட்டம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்ரோன் மூலம் இந்த காட்சி பதியப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reindeer used Cyclone maneuvering to protect themselves from Predators: Drone Video

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X