எக்ஸ்ட்ரா ஆப்ஸ் எதுக்கு?- Facebook வீடியோவை பாதுகாப்பாக டவுன்லோட் செய்து ஷேர் பண்ணுங்க!

|

பெரும்பாலானோரின் பொழுதுபோக்காக மொபைல் பயன்பாடு இருக்கிறது. மொபைலில் சமூகவலைதளங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகம். வங்கியில் கூட கணக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஏதேனும் ஒரு சமூகவலைதளங்களில் கணக்கில்லாதவர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் சொர்ப்பம்.

அதன்படி சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது பேஸ்புக். இந்த தளத்திற்கு அறிமுகம் எதுவும் தேவை இருக்காது. இந்த தளம் குறித்த சுவாரஸ்ய தகவலை தான் பார்க்கப் போகிறோம்.

மிக பிரபலமாக இருக்கும் பேஸ்புக்

மிக பிரபலமாக இருக்கும் பேஸ்புக்

கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2.936 பில்லியன் என அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.

டுவிட்டர், இன்ஸ்டா என பல சமூகவலைதளங்கள் வளர்ச்சியை சந்தித்தாலும் பேஸ்புக்கிற்கு இருக்கும் வரவேற்பு வளர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்தளவிற்கு பேஸ்புக் பயனர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்கிறது.

வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்

வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்

அதேபோல் பேஸ்புக்கின் மெசஞ்சர் பயன்பாடு உடனடி செய்தி பகிர்வு தளமாக இருக்கிறது.

பிறந்தநாள் நினைவூட்டல்கள், ஷாப்பிங், மொபைல் எண் அறியாத நண்பர்களின் தகவல்கள் என அனைத்தையும் இந்த தளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த தளத்தில் வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம் அதிகம். இதை தங்களது நண்பர்களுக்கு பிற சமூகவலைதளம் மூலம் பகிர பலரும் விரும்புவார்கள்.

வீடியோ பார்த்தாரா., இல்லையா?

வீடியோ பார்த்தாரா., இல்லையா?

உதாரணமாக வாட்ஸ்அப்பில் பேஸ்புக் வீடியோவை பகிர விரும்பும் பட்சத்தில் அந்த வீடியோ லிங்கை Copy செய்து அதை அப்படியை பகிர வேண்டும்.

இதில் பேஸ்புக்கில் பகிர்ந்த நபர் பெயர், அவர் பதிவிட்ட வீடியோ கேப்ஷன் என அனைத்தும் காட்டப்படும்.

இது சற்று தொந்தரவை ஏற்படுத்தும். மேலும் உங்கள் நண்பர் இந்த வீடியோவை பார்த்தாரா, இல்லையா என்பதும் உங்களுக்கு தெரியாது.

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் தேவையா?

மூன்றாம் தரப்பு ஆப்ஸ் தேவையா?

எனவே பேஸ்புக் வீடியோவை அப்படியே வீடியோவாக பகிர சில வழிமுறைகள் இருக்கிறது.

இதற்கு பலரும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவார்கள். ஆனால் இது பாதுகாப்பா என்பது சந்தேகமே.

எனவே மூன்றும் தரப்பு பயன்பாடு இல்லாமல், ஒரு பேஸ்புக் வீடியோவை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

பாதுகாப்பான மற்றும் நம்பகமான தளம்

பாதுகாப்பான மற்றும் நம்பகமான தளம்

பேஸ்புக் தளத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கு மூன்றாம் தரப்பு ஆப்ஸ் என்பது ஒரு தொந்தரவாக இருக்கலாம்.மேலும் இது பாதுகாப்புத் தன்மை வாய்ந்ததா என்பது சந்தேகமே.

எனவே பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வதற்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான தளம் ஒன்று பரிந்துரையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.

எளிய வழிமுறைகள் இதோ

எளிய வழிமுறைகள் இதோ

ஸ்டெப் 1: பேஸ்புக் பயன்பாட்டை திறந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோவை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: இதில் ஷேர் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் வலது புறத்தில் காட்டப்படும் Arrow போன்ற தேர்வை தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3: அதில Copy என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 4: இதை Copy செய்த பிறகு, க்ரோம் போன்ற ஏதேனும் ப்ரவுசருக்குள் சென்று savefrom.net என டைப் செய்து உள்ளே நுழையவும்.

ஸ்டெப் 5: இதற்குள் நுழைந்ததும் "Paste your video link here" என காட்டப்படும் இடத்தில், நீங்கள் Copy செய்த லிங்க்கை Paste செய்யவும்.

ஸ்டெப் 6: பின் அதற்கு கீழ் காட்டப்படும் டவுன்லோட் என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் வீடியோ டவுன்லோட் தொடங்கப்படும்.

ஸ்டெப் 7: இதில் உங்கள் வீடியோ எந்தத் தெளிவுத்திறனுடன் வேண்டும் என்பதை விருப்பத்திற்கு நீங்களே ஏற்ப கிளிக் செய்து கொள்ளலாம்.

ஐபோன் பயனர்களுக்கு வேறு வழிமுறை

ஐபோன் பயனர்களுக்கு வேறு வழிமுறை

ஐபோன் பயனர்களுக்கு வேறு வழிமுறை இருக்கிறது. நீங்கள் Safari browser க்குள் சென்று டவுன்லோட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் விரும்பும் வீடியோவை கிளிக் செய்து, கீழ காட்டப்படும் ஷேர் ஐகானை கிளிக் செய்தால் Save Video காட்டப்படும். இதை கிளிக் செய்தால் உங்கள் வீடியோ டவுன்லோட் ஆகிவிடும். இப்படி நீங்கள் சேமிக்கும் வீடியோ ஐபோனின் கேமரா ஃபோல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

Best Mobiles in India

English summary
How to Download Facebook Video safely?- Simple Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X