Anand Mahindra சொன்ன ஒரு வார்த்தை., இதை மட்டும் செய்தால் ஓஹோனு வாழ்க்கை!

|

இந்த புகைப்படம் பணிவை கற்பிக்கிறது என ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. அது என்ன புகைப்படம், ஆனந்த் மஹிந்திரா அப்படி சொல்ல காரணம் என்ன என்ற விவரத்தை பார்க்கலாம்.

தொடர்ந்து ஊக்கப்படுத்தும் ஆனந்த் மஹிந்திரா

தொடர்ந்து ஊக்கப்படுத்தும் ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவரும் இந்திய தொழிலதிபர்களில் பிரதான ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பெரும் புகழ் பெற்றவராக இருக்கிறார். அதோடு துடிப்பான இளைஞர்கள், திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பை வழங்குவதிலும் இவர் வல்லவராக இருக்கிறார். ட்விட்டரில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியன் ஆகும். ஆனந்த் மஹிந்திரா, ட்விட்டரில் தன்னை கவர்ந்த புகைப்படம் மற்றும் விஷயங்களை வாழ்க்கைக்கான தத்துவங்களுடன் பகிர்ந்து தனது ஃபாலோவர்களை ஊக்கப்படுத்துவார்.

மார்ஸ் இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

மார்ஸ் இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

அதன்படி தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். அதனுடன் தனது பாணியில் வாழக்கைக்கான தத்துவத்தையும் பகிர்ந்திருக்கிறார். இவரது இந்த பதிவுக்கு ட்விட்டரில் ஏணையோர் தங்களது விருப்பங்களையும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட ட்விட்டர் பதிவை விரிவாக பார்க்கலாம்.

ஒரே வார்த்தையில் வாழக்கை தத்துவம்

ஒரே வார்த்தையில் வாழக்கை தத்துவம்

ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட ட்விட்டில் உள்ள புகைப்படம் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆம், செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை தான் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் பூமி ஒரு சிறிய புள்ளியாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது. அதனுடன் ஆனந்த் மஹிந்திரா, "இந்த புகைப்படம் நமக்கு கற்பிக்க வேண்டிய ஒன்று இருந்தால்., அது பணிவு" என ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.

க்யூரியாசிட்டி ரோவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படமானது நாசாவின் க்யூரியாசிட்டி ரோவரால் எடுக்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படத்தை நாசா பகிர்ந்த போது "செவ்வாய் கிரகத்தின் இரவு வானில் எந்தவொரு நட்சத்திரத்தை விடவும் பூமி பிரகாகசமாக இருக்கிறது" என குறிப்பிட்டு இருந்தது.

புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிரும் நாசா

புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிரும் நாசா

சிவப்பு கிரகமான மார்ஸ் இல் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவன்ஸ் உலா வந்து, அந்த கிரகம் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை புகைப்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்களை நாசா தனது சமூகவலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்தும் வருகிறது. இந்த புகைப்படம் மூலம் மக்கள் வியப்படைவதோடு செவ்வாய் கிரகம் குறித்த தகவலையும் அறிந்து வருகின்றனர்.

புகழ் பெற்ற தத்துவமான யிங் யாங் புகைப்படம்

புகழ் பெற்ற தத்துவமான யிங் யாங் புகைப்படம்

ஆனந்த் மஹிந்திரா, இதுபோன்ற புகைப்படத்தை பகிருவது என்பது இது முதன்முறையல்ல. முன்னதாக சீனாவின் பிரபலமான யின் யாங் புகைப்படத்தை பகிர்ந்து அதோடு வாழ்க்கைக்கான தத்துவத்தையும் விளக்கி இருந்தார். யிங் யாங் புகைப்படம் என்றால் என்னவென்று முதலில் பார்க்கலாம். சீனாவில் தாவோயிசம் பரவிய காலத்தில் புகழ் பெற்ற தத்துவம் இந்த புகைப்படம் ஆகும்.

கருப்பு (யின்) வெள்ளை (யாங்)

கருப்பு (யின்) வெள்ளை (யாங்)

இந்த புகைப்படம் குறித்து பார்க்கையில், ஒரு வட்டத்தில் சுழல்வது போன்ற இரு சரிபாதிகளாக கருப்பு (யின்) வெள்ளை (யாங்) வண்ணத்தில் இருக்கும். இதன் கருப்புப் பாதியில் வெள்ளை புள்ளியும், வெள்ளைப் பாதியில் கருப்புப் புள்ளியும் இடம்பெற்றிருக்கிறது. இந்த புகைப்படமே ஒரு ஆகச்சிறந்த தத்துவம் தான். இதை தான் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்தார். இந்த புகைப்படத்தில் என்ன தத்துவம் இருக்கிறது என தோன்றுகிறதா?. வாங்க என்னவென்று பார்க்கலாம்.

நல்லதில் கெட்டதும், கெட்டதில் நல்லதும்

நல்லதில் கெட்டதும், கெட்டதில் நல்லதும்

முழு வட்டத்தின் முதல் பாதியில் கருப்பு வண்ணம் இருக்கிறது, இது கெட்டது என்பதை குறிக்கிறது. மற்றொரு சரிபாதியாக இருக்கும் வெள்ளை வண்ணம், நன்மை என்பதை குறிக்கிறது. வெள்ளை நிறத்தில் ஒரு கருப்புப் புள்ளி இருக்கிறது. அது நல்லதில் உள்ள கெட்டதை காட்டுகிறது. அதேபோல் கருப்பு நிறத்தில் ஒரு வெள்ளைப் புள்ளி, கெட்டதில் உள்ள நல்லதை குறிக்கிறது. இதுதான் வாழ்க்கை என்பதை இந்த புகைப்படம் விளக்குகிறது. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த இந்த புகைப்படம் அவரது ஃபாலோவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வேண்டிய நேரம்

செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வேண்டிய நேரம்

ஆனந்த் மஹிந்திரா செவ்வாய் கிரகம் குறித்து பகிர்ந்தது இது முதன்முறையல்ல. ஆம், கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோல் செவ்வாய் கிரகம் குறித்த தகவலை வெளிப்படையாக தெரிவித்தார். அதில், நாம் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என குறிப்பிட்டார். ஏன் பூமியில் இருந்து மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார் என்பதை பார்க்கலாம்.

கொடூரமான நோய் பரவலே காரணம்

கொடூரமான நோய் பரவலே காரணம்

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் செய்யப்பட்ட நீர் விநியோகத்தில் வித்தியாசமான அமீபா ஒன்று காணப்பட்டதாக சிஎன்என் செய்தி தளம் தெரிவித்தது. அது "மூளை உண்ணும் அமீபா" ஆகும். இந்த தகவல் வெளியான காலக்கட்டத்தில் தான் கோவிட்-19 தொற்று பரவல் அதிகரித்து இருந்தது. இதுகுறித்து தான் ஆனந்த் மஹிந்திரா ட்விட் செய்திருந்தார். ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட ட்விட்டில், "மூளை உண்ணும் அமீபா" என்பது கோவிட் -19 ஐ விட மோசமான ஒன்றாக இருக்கலாம், ஒருவேளை இது "செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டிய நேரம்" என அதில் குறிப்பிட்டிருந்தார்.

வாழ்நாளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவார்கள்

வாழ்நாளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவார்கள்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அனுப்புவதே கனவுத் திட்டமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 ஆக இருக்கும் எலான் மஸ்க் கொண்டிருக்கிறார். இதற்கான முயற்சியில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2020 இன் நடுப்பகுதியில் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார் ஷிப் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என தெரிவித்த மஸ்க், தற்போது இந்த திட்டம் வளர்ச்சி பாதையில் இருப்பதால் 2029 இல் செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் தரையிறங்கும் என தெரிவித்தார். அதேபோல் சமீபத்திய ட்வீட்டில் நமது வாழ்நாளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவார்கள் என குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Anand Mahindra shared a photo of earth taken from mars: Says its Humility

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X