வைரலாகும் Chicken சமையல் வீடியோ.. சாப்பிட்டால் இல்ல சமைத்தாலே ஆபத்து உறுதி!

|

புதுமையான உணவுகளை டிப்ஸ் படித்தும், யூடியூப் வீடியோ பார்த்தும் சமைப்பது வழக்கம். சமையல் தெரியாதவர்கள் குறிப்பாக வேலை தேடி வெளியூருக்கு செல்லும் இளைஞர்கள் என பலரும் யூடியூப்பில் வீடியோ பார்த்து தான் சமைப்பார்கள். இது தவறு அல்ல, ஆனால் இப்படி செய்வது தவறு..

வைரலாகும் வீடியோ..

வைரலாகும் வீடியோ..

யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சில முறையற்ற வீடியோக்கள் வைரலாகும். அதை முயற்சித்து பார்ப்பது என்பது ஆகாத ஒரு செயல்.

அதன்படி அமெரிக்காவில் டிக்டாக்கில் ஒரு வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. அது சிக்கன் சமையல் தொடர்பான விஷயமாகும். இப்படி சிக்கன் சமைத்து சாப்பிட்டால் நன்றாக உறக்கம் வரும் என ஒரு வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.

எச்சரிக்கையாக இருத்தல் மிக அவசியம்..

எச்சரிக்கையாக இருத்தல் மிக அவசியம்..

அட, என்னப்பா அமெரிக்காவில் தானே வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் டிக்டாக்கில் தானே என்று தோன்றலாம். டிக்டாக் தளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும். வேறு சமூகவலைதளங்களிலும் இந்த வீடியோ பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அல்லது இதுதொடர்பாக கேள்விப்படுதவற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே எச்சரிக்கையாக இருத்தல் என்பது மிக அவசியம்.

சமைத்தாலே ஆபத்து..

சமைத்தாலே ஆபத்து..

சிக்கனை இந்த முறையில் சமைப்பது தான் சேலஞ்ச் என அமெரிக்காவில் டிக்டாக்கில் ஒரு வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதை சாப்பிட்டால் அல்ல சமைத்தாலே ஆபத்து என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

NyQuil-ல் சமைத்த கோழி..

NyQuil-ல் சமைத்த கோழி..

சளி மற்றும் காய்ச்சலுக்கு பயன்படுத்தும் மருந்தான NyQuil-ல் கோழி இறைச்சியை சமைக்கும் வீடியோ டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.

NyQuil-ல் சமைத்த கோழியை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

TikTok போன்ற சமூக ஊடகங்களில் உணவு சவால்கள் (Food Challenges) என இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ மிகவும் பிரபலமாகி வருவதையடுத்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஸ்லீப்பி சிக்கன் என்ற பெயரில் வைரல்..

ஸ்லீப்பி சிக்கன் என்ற பெயரில் வைரல்..

டிக்டாக் இல் இது தொடர்பாக பரவும் வீடியோவில், கோழி இறைச்சியை இருமல் மருந்தை ஊற்றி ஒருவர் வறுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. மேலும் இறைச்சியை திருப்பிப்போடுவதற்கு ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் அந்த வீடியோவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சமையல் ஸ்லீப்பி சிக்கன் என்ற பெயரில் சவாலாக வைரலாகி வருகிறது.

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தகவல்

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தகவல்

இந்த சவால் மிகவும் விரும்பத்தகாத ஒன்று எனவும் அருவருப்பானது எனவும் FDA குறிப்பிட்டுள்ளது. அனைத்து வகைகளிலும் இது பாதுகாப்பற்றது. ஒரு மருந்தை சூடாக்குவது என்பது பலவகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேரடியாக நுரையீரலை பாதிக்கும்..

நேரடியாக நுரையீரலை பாதிக்கும்..

சவால் வீடியோவுக்காக மட்டும் தான் சமைக்கிறோம் அதை உட்கொள்ளவில்லை என்றாலும் ஆபத்து உறுதி என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதாவது இந்த உணவை உட்கொள்ளாவிட்டாலும் சமைக்கும் போது இதில் இருந்து வெளியாகும் ஆவியினாலும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தை கொதிக்க வைக்கும் பட்சத்தில் அதில் இருந்து வெளியாகும் ஆவிகள் நுரையீரலை நேரடியாக பாதிக்கலாம் என நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

குழந்தைகளை எச்சரிக்க வேண்டும்

குழந்தைகளை எச்சரிக்க வேண்டும்

மேலும் FDA இதுகுறித்து கூறுகையில், குழந்தைகளுக்கு கிடைக்காத வகையில் மருந்துகளை எடுத்து வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எதை உட்கொள்ள வேண்டும், எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை கற்றுவிக்க வேண்டும்.

தேவைியல்லாத உணவுகளை உட்கொண்டால் அதன் ஆபத்துகள் என்ன என்பது குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சமூகவலைதளங்களில் பரவும் சவால்கள் போன்ற வீடியோக்கள் குறித்து மக்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்க வேண்டும் என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

TikTok அளித்த பதில்..

TikTok அளித்த பதில்..

டிக்டாக் நேரடியாக இதுகுறித்து பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் nyquilchicken என்ற ஹேஷ்டேக் டிக்டாக் இல் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த ஹேஷ்டேக்கை யாரேனும் தேட முயற்சித்தால் சில சவால்கள் ஆபத்தானவை, தொந்தரவு தரக்கூடியவை போன்ற எச்சரிக்கைகள் காட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
FDA's Warning About Viral TikTok Video: Cooking Chicken in NyQuil is Dangerous

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X