வாழவேண்டிய வயசு! Social Media டிரெண்டுக்காக உயிரே போச்சே! கதறித்துடிக்கும் பெற்றோர் மனது!
சோஷியல் மீடியா டிரெண்டுக்காக 13 வயது சிறுமி செய்த காரியம் அவரது உயிரையே காவு வாங்கியிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக உயிருக்குப் போராடி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது உயிர் பிரிந்துவிட்டது. இதுபோன்று மற்ற குழந்தைகள் செய்துவிடக் கூடாது என்று அவரது பெற்றோர், விழிப்புணர்வு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர். இதுகுறித்த விவரம் இதோ.
இப்போதெல்லாம் சோஷியல் மீடியா டிரெண்டுக்காக (Social Media Trend) என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றதொரு எண்ணம் பலரது மனதில் இயல்பாகிவிட்டது. யூடியூப் (YouTube), பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்களில் கிரிஞ்ச்சாக (Cringe) எதையாவது செய்வது, ஆபத்தை விளையாட்டாக நினைத்து எதையாவது செய்வது என்பது பலருக்கு வாடிக்கையாகி வருகிறது.

இதை அவர்களும் விருப்பப்பட்டுச் செய்வது கிடையாது, லைக்ஸ் (Likes) மீதும் வியூஸ் (Views) மீதும் கொண்ட அவர்களது மோகம் அப்படி செய்ய வைக்கிறது என்றே சொல்ல வேண்டும். "இப்படிலாம் பண்ணாதீங்க" என்று யாராவது சோஷியல் மீடியா பிரியர்களை பார்த்து சொன்னால் கூட, அவர்களை பூமர் அங்கிள் (Boomer Uncle) என்று சொல்லி ஒதுக்கிவிடுகின்றனர். இதனால் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
இந்த நேரத்தில் கேட்க ஆளில்லாத, பல சோஷியல் மீடியா பிரியர்களின் விபரீத செயல்கள் அவர்களின் வாழ்க்கையையே முடித்து விடுகிறது. அப்படி ஆஸ்திரேலியாவில் சோஷியல் மீடியா டிரெண்டுக்காக 13 வயது சிறுமி செய்த காரியம் அவரது உயிரையே காவு வாங்கிவிட்டது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (Melbourne) நகரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, எஸ்ரா ஹெய்ன்ஸ் (Esra Haynes) சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது நண்பர்கள் ஏற்பாடு செய்த பார்ட்டிக்கு கடந்த மார்ச் 31ஆம் தேதி எஸ்ரா ஹெய்ன்ஸ் சென்றிருந்தார்.
அப்போது, ஆஸ்திரேலியாவில் குரோமிங் (Chroming) என்ற சோஷியல் மீடியா சேலஞ்ச் மிகவும் பிரபலமடைந்து வந்தது. அதாவது, நாம் பயன்படுத்தும் டியோடரன்ட்டை (Deodorant) நன்றாக மூக்கில்படும்படி அடித்து, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதே குரோமிங் சேலஞ்ச் என்றழைக்கப்படுகிறது. இந்த சேலஞ்ச்சை எஸ்ரா ஹெய்ன்ஸ் மார்ச் 31ஆம் தேதி இரவு செய்துள்ளார்.
அப்போது அவர், பிரபல நிறுவனத்தின் ஏரோசல் டியோடரன்ட்டை (Aerosol Deodorant) நேரடியாக முகர்ந்துள்ளார். அதன்பின் சில நொடிகளில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை நண்பர்கள் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அங்கு அவரால் மூச்சுவிட முடியவில்லை. இதயம் மெல்லமெல்ல செயல்பாட்டை இழந்தது. இதனால், அவருக்கு லைஃப் சப்போர்ட் (Life Support) வழங்கப்பட்டது.
இப்படி 2 மாதங்களாக சிகிச்சைப்பெற்று வந்தும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இருக்கவில்லை. நேற்றிரவு அவரது உயிர் பிரிந்தது. இவரது உயிரிழப்பு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே பரவிவரும் சோஷியல் மீடியா மோகம் குறித்து பெற்றோர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.
இதுகுறித்து, எஸ்ரா ஹெய்ன்ஸ் பெற்றோர் கூறுகையில், "இதுபோன்று உயிருக்கு ஆபத்தான, முட்டாள்தனமான செயல்களில் மற்ற குழந்தைகள் ஈடுபடாமல் இருக்க வேண்டுகிறோம். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
டியோடரன்ட்டில் அதிகப்படியான கெமிக்கல்ஸ் இடம்பெற்றிருக்கும். இதை நேரடியாக சுவாசிக்கக்கூடாது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








