சொந்த வீட்டை விற்ற பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg- பக்கத்து வீட்டுக்காரர் ஒரே குஷி: காரணம் தெரியுமா?

|

Mark Zuckerberg மற்றும் அவரது மனைவி சான் பிரான்சிஸ்கோ வீட்டை 31 மில்லியன் டாலருக்கு விற்றனர். சமீப காலங்களில் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மிக விலை உயர்ந்த வீட்டு ஒப்பந்தம் இதுதான் எனவும் கூறப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபல தளங்களுக்கு சொந்தக்காரரான மார்க் ஜுக்கர்பெர்க் வீட்டை விற்க காரணம் என்னவென்று பார்க்கலாம்.

மிக உயர்ந்த வீட்டு விற்பனை ஒப்பந்தம் இதுதான்

மிக உயர்ந்த வீட்டு விற்பனை ஒப்பந்தம் இதுதான்

இதுகுறித்து ரியல் டீலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சமீப காலங்களில் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மிக உயர்ந்த வீட்டு விற்பனை ஒப்பந்தம் இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க் ஜூக்கர்பெர்க் 2012 இல் 10 மில்லியன் டாலருக்கு இந்த வீட்டை வாங்கியுள்ளார். தற்போது மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த வீட்டை விற்றிருந்தாலும் நல்ல லாபம்தான் அவருக்கு கிடைத்திருக்கிறது.

மார்க் ஜுக்கர்பெர்க் மட்டும் விதிவிலக்கு அல்ல

மார்க் ஜுக்கர்பெர்க் மட்டும் விதிவிலக்கு அல்ல

தொழிலதிபர்கள், பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், கோடீஸ்வரர்கள் என பலரின் வாழ்க்கையும் ஆடம்பரத்தில் தான் புரளும். இதில் உலகின் மிக விலையுயர்ந்த சில பொருட்களை வைத்திருக்கும் மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மட்டும் விதிவிலக்கு அல்ல.

சமூகவலைதளங்களில் முன்னணி நிறுவனங்களாக திகழும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களின் தாய் நிறுவனமாக மெட்டா இருக்கிறது. மெட்டா தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் ஜுக்கர்பெர்க் இருக்கிறார்.

வருவாய் இழப்பை சந்தித்து வரும் மெட்டா

வருவாய் இழப்பை சந்தித்து வரும் மெட்டா

மெட்டா நிறுவனம் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மெட்டாவின் பங்கு மதிப்பும் சரிவை சந்தித்திருக்கிறது.

டிக்டாக் போன்ற தளங்கள் ஏற்படுத்தும் கடும் போட்டி, விளம்பர வருமானம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது மெட்டா நிறுவனத்தின் வருவாய் 280.82 கோடி டாலர் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனே முடிவுக்கு வந்துவிடாதீர்கள், இதனால் தான் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வீட்டை விற்றார் என்று. அதற்கு வேறு காரணம் இருக்கிறது.

ரூ.180 கோடிக்கு வீீட்டை விற்ற மார்க்

ரூ.180 கோடிக்கு வீீட்டை விற்ற மார்க்

மார்க் ஜுக்கர்பெர்க், தனது சான் பிரான்சிஸ்கோ வீட்டை 31 மில்லியன் டாலர்களுக்கு விற்றுள்ளார். அதாவது இந்திய விலை மதிப்புப்படி தனது வீட்டை ரூ.180 கோடிக்கு விற்றிருக்கிறார்.

சான் பிரான்சிஸ்கோவில் சமீப காலங்களில் நடந்த மிகப் பெரிய வீட்டு விற்பனை ஒப்பந்தம் இதுதான் என ரியல் டீலில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

7400 சதுர அடி பரப்பளவில் உள்ள வீடு

7400 சதுர அடி பரப்பளவில் உள்ள வீடு

மார்க் ஜுக்கர்பெர்க் 2012 இல் 10 மில்லியன் டாலருக்கு இந்த வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீடு ஒதுக்குப்புற மலையில் அமைந்திருக்கிறது. 7400 சதுர அடி பரப்பளவு உள்ள இந்த வீடு சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனைக்கு அருகில் இருக்கிறது.

இந்த வீட்டில் நான்கு படுக்கையறைகள், நான்கு குளியலறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடு தற்போது Redfin என்ற சொத்து இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

வீட்டை விற்றதில் லாபம் தானே கிடைத்திருக்கிறது

வீட்டை விற்றதில் லாபம் தானே கிடைத்திருக்கிறது

10 மில்லியன் டாலருக்கு வாங்கிய வீட்டை தற்போது மார்க் ஜுக்கர்பெர்க் 31 மில்லியன் டாலருக்கு விற்றிருக்கிறார் என்றால் லாபம் தானே என்ற கேள்வி வரலாம். லாபத்திற்காக வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது மார்க் ஜுக்கர்பெர்க் இல்லை. மெட்டா நிறுவனர் வீட்டை விற்றதற்கான காரணம் இன்னும் சரியாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் எதிர்பாராத ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அண்டை வீட்டாளர்களுக்கு இருந்த சிக்கல்

அண்டை வீட்டாளர்களுக்கு இருந்த சிக்கல்

பாதுகாப்பு விவகாரங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவைகளில் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கும் அவரது அண்டை வீட்டார்களுக்கும் சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது.

அதாவது தொடர்ச்சியாக வரும் வாகனங்கள், மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு வழங்கப்படும் பாதுகாப்பால் சுதந்திரமின்மை உள்ளிட்ட காரணங்களால் அண்டை வீட்டாளர்களுக்கு சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜுக்கர்பெர்க் வசிக்கும் பகுதியில் வாழ்வது எவ்வளவு கடினம்

ஜுக்கர்பெர்க் வசிக்கும் பகுதியில் வாழ்வது எவ்வளவு கடினம்

மார்க் ஜுக்கர்பெர்க் வசிக்கும் அதே பகுதியில் வாழும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், ஜுக்கர்பெர்க் வசிக்கும் பகுதியில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் "ஹாய் நெய்பர்ஸ், ஜுக்கர்பெர்க் வசிக்கும் பகுதியில் வாழ்வது சிரமமாக இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். மிக நீண்ட கட்டுமானம், இரைச்சல், குப்பைகள், வாகனம் செல்லும் போதும், நிறுத்தி வைக்கும் போதும் ஏற்படும் சிக்கல் போன்ற நிலைகளை சந்தித்தோம். அப்போதெல்லாம் நாம் அனைவருமே நாகரீகமாக நடந்துக் கொள்ள முயற்சித்தோம் என நினைக்கிறேன். இப்போது அந்த நிலை முடிவுக்கு வந்துள்ளது. எங்களிடம் இரண்டு SUV கார்கள் இருக்கிறது. தற்போது அதை விரும்பிய இடத்தில் நிறுத்திக் கொள்வேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை நியூயார்க் போஸ்ட் வெளிப்படுத்தியது.

வருவாய் இழப்பு நிலை தொடரும்

வருவாய் இழப்பு நிலை தொடரும்

மெட்டா நிறுவனம் 2022 இன் இரண்டாவது காலாண்டில் பெரிய வருவாய் இழப்பை சந்தித்தது. இதன் மதிப்பு 280.82 கோடி ஆகும். நிறுவனத்தின் வருவாய் குறைந்து வரும் அதே நேரத்தில் செலவுகளின் மதிப்பு உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இதே வருவாய் இழப்பு நிலைதான் மூன்றாம் காலாண்டிலும் தொடரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதார மந்தநிலையில் இருக்கிறோம், இதன்காரணமாக விளம்பர வருவாயில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது என மார்க் ஜுக்கர்பெர்க் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

எதிர்காலத் திட்டத்தை நோக்கி செயல்பாடு

எதிர்காலத் திட்டத்தை நோக்கி செயல்பாடு

வெளியான தகவல் குறித்து பார்த்துவிட்டு, மெட்டா நிறுவனம் இனி வரும் காலங்களில் இழப்பை மட்டும் தான் சந்திக்குமா என்றால் அதுதான் இல்லை. மெட்டா நிறுவனம் எதிர்காலத் திட்டத்தை (லாபம்) கருத்தில் கொண்டு மெட்டாவெர்ஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதில் தான் நிறுவனம் அதிகளவான முதலீட்டையும் செலுத்தி வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Mark Zuckerberg Sold his House For a Whopping $31 million

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X