உத்தரபிரதேசத்துக்கு வந்தது ஏலியன்ஸா? வானத்தில் தோன்றிய ரயில்..

|

உத்தரபிரதேச மாநிலத்தில் இரவு நேரத்தில் திடீரென வானத்தில் மர்ம விளக்குகள் தோன்றி இருக்கிறது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர். சிலர் இந்த காட்சியை வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர்.

ரயில் ஓடுவது போன்ற காட்சி

ரயில் ஓடுவது போன்ற காட்சி

வானத்தில் நீளமான ரயில் ஓடுவது போன்ற காட்சி இதில் இடம்பெற்றுள்ளது. அடுக்கடுக்காக மஞ்சள் நிற ஒளியில் நீளமாக வானத்தில் மர்ம விளக்குகள் தோன்றி இருக்கிறது. இதற்கு சமூகவலைதள வாசிகள் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வானில் தோன்றிய மர்மமான காட்சி

வானில் தோன்றிய மர்மமான காட்சி

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா, கன்னௌஜில் உள்ள ஜலபாபாத், ஹர்டோயின் பாலி கிராமம் மற்றும் ஃப்ரூகாபாத் போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு நேர வானில் இந்த மர்மமான காட்சி தோன்றி இருக்கிறது.

இதை பார்த்த மக்கள் இது என்னவாக இருக்கும் என குழப்பமடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளை பதிலாக அளித்து வருகின்றனர்.

UFO ஆக இருக்கலாம்

UFO ஆக இருக்கலாம்

சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இது SpaceX இன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (UFO) ஆக இருக்கலாம் எனவும் ஏலியன்ஸ் அந்த பகுதிக்கு வந்துள்ளனர் எனவும் சிலர் பதிலளித்து வருகின்றனர்.

தயவு செய்து விளக்க முடியுமா?

தயவு செய்து விளக்க முடியுமா?

ட்விட்டர் பயனர் ஒருவர் தனது பக்கத்தில் மூன்று புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார். "இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் இந்த மர்மமான விளக்குகள் தோன்றியுள்ளது, இது என்னவென்று தயவு செய்து விளக்க முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவருக்கு பதிலளித்து பயனர் ஒருவர், செப்டம்பர் 11 ஆம் தேதி SpaceX பதிவிட்ட ட்வீட்டை ஷேர் செய்துள்ளார். அதில் 34 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வானில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன்னல்களில் இருந்து வரும் வெளிச்சம்

மற்றொரு ட்விட்டர் பயனர், ரயில் வானத்தில் பயணிப்பது போன்ற ஒளி நிறைந்த மர்மமான பொருள் இது. பெட்டியின் ஜன்னல்களில் இருந்து வெளிச்சம் வருகிறது என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் மற்றொருவர் எதையும் உறுதியாக கூற முடியாது இது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்-51 செயற்கைக்கோள்களில் ஒன்றாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்

டிசம்பர் 2021 இல் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் துல்சா நகரப்பகுதியின் வானத்தில் காணப்பட்டது. இது உறுதியாக என்னவென்று தெரியவில்லை.

இருப்பினும் இதன்மூலம் இது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் சிலர் செயற்கைக்கோள் ரயில் அமைப்பில் தோன்றியது ஆச்சரியமாக இருக்கிறது என சுட்டிக் காட்டி வருகின்றனர்.

முன்னதாக நடந்த நிகழ்வு

முன்னதாக நடந்த நிகழ்வு

முன்னதாக இதேபோல் அலாஸ்கா லேசி மலைப் பகுதியில் மேகம் கீழே விழுவது போல் வானத்தில் வித்தியாசமான காட்சி தோன்றியது. இந்த காட்சியை அப்பகுதி மக்கள் சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்தனர்.

மேலும் இந்த விசித்திர நிகழ்வு ஏலியன்ஸ் வருகை எனவும் விமான விபத்தாக இருக்கலாம் எனவும் ரகசிய ராணுவ ஆயுதமாக கூட இருக்கலாம், ஏவுகணையாக இருக்கலாம், விண்கல் ஆக இருக்கலாம் எனவும் அப்பகுதிகள் மக்கள் பலரும் நம்பத் தொடங்கி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

மேகம் கீழே விழுவது போன்ற காட்சி

மேகம் கீழே விழுவது போன்ற காட்சி

வடஅமெரிக்காவில் அமைந்துள்ளது அலாஸ்கா லேசி எனும் மலைப் பகுதி. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மேகம் கீழே விழுவது போல் வானத்தில் தோன்றிய வித்தியாசமான காட்சியை பொதுமக்கள் சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்தனர்.

புகைப்படங்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் சமூகவலைதளங்களில் வைரலானது. UFO அதாவது Unidentified Flying Object (அடையாளம் காணப்படாத பொருள்) எனப்படும் ஏலியன்களின் விண்வெளி கப்பல் பூமிக்கு வந்ததால் ஏற்பட்ட நிகழ்வு என பலரும் கருத்துகளை பதிவிட்டனர்.

Best Mobiles in India

English summary
mysterious lights Spotted in sky: Do you Know What is this

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X