Home
News

ஓ இது தான் காத்துவாக்குல காதலா? ஏர் கூலருக்குள் ஒளிந்திருந்த காதலன்.. கூலாக கண்டுபிடித்த குடும்பம்.. என்னாச்சு

ஸ்மார்ட் போனும் சோசியல் மீடியாவும் வந்தாலும் வந்தது எதையெடுத்தாலும் மக்கள் கன்டென்ட் (Content) ஆக்கி விடுகின்றனர். ஒருவர் விளையாட்டாக செய்யும் செயல்பாடுகள் கூட ட்ரென்டாகி (Trend) இணையதளத்தையே ஒரு கலக்கு கலக்கி விடுகிறது.

ட்ரென்டாக செலிப்ரிட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உடைத்து சாமானிய மக்களும் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்த ஒரு நல்ல மேடையாக சோசியல் மீடியா இருந்து வருகிறது.
திறமைகள் ஒரு பக்கம் அங்கீகரிக்கப்பட்டாலும் மக்களை சிரிக்க வைக்கும் விதத்தில் இருக்கும் விடியோக்களும் (video) பெரிதும் வரவேற்கப்படுகிறது என்றே கூறலாம். அம்மாதிரியான பல வீடியோக்கள் இணையம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது.

ஓ இது தான் காத்துவாக்குல காதலா? ஏர் கூலருக்குள் ஒளிந்திருந்த காதலன்..

அந்த வரிசையில் சமீபத்தில் ஒரு வீடியோ எக்ஸ் (X) பக்கத்தில் ட்ரென்டாகி வருகிறது. வடிவேலு கூறுவது போல வாலிப வயசில் காதல் வயப்படுவது தடுக்க முடியாத ஒன்று. அப்படி காதல் வயப்பட்டிருப்பவர்கள் ஒருவரை ஒருவர் நொடி பொழுது கூட பிரிந்திருக்க முடியாமல் அவதிப்படுவதும் மறுக்க முடியாத உண்மை.

அப்படி தன் காதலியை பிரிந்திருக்க முடியாமல் ஒரு காதலன் செய்த காரியம் தான் சம்பவமாக மாறி இணையதளத்தையே ஒரு ரவுண்ட் வந்துகொண்டிருக்கிறது. ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியை சந்திக்க அவரது வீட்டிலேயே ஏர் கூலர் (Air cooler) பெட்டிக்குள் ஒழிந்திருந்து கையும் களவுமாக மாட்டிய காணொளி தான் அது.

இரவு தனது காதலியின் குடும்பத்தினர் உறங்கிய பின்னர் அவரை தனிமையில் சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்து அந்த நபர், யாருக்கும் தெரியாமல் இருக்க அந்த பெண்ணில் வீட்டில் இருந்த ஏர் கூலரில் ஒளிந்துள்ளார். திடீரென ஏதோ சத்தம் கேட்பது போல தோன்றி சுதாரித்த அந்த குடும்பத்தினர், திருடனாக இருக்குமோ என்று வீடு முழுவதும் தேட ஆரம்பித்துள்ளனர்.

சிறிது நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஏர் கூலரில் ஒரு நபர் ஒழிந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். சின்ன ஏர் கூலர் பெட்டிக்குள் தனது உடலை சுறுக்கி அமர்ந்திருந்ததால் கையும் களவுமாக மாட்டியபோதும் அவரால் தப்பிக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு அந்த பெட்டிக்குள் இருந்து அவர் வெளியேறும் காட்சி அனைவருக்கும் குபீர் சிரிப்பை தான் வரவழைக்கிறது.

மாட்டிகொண்ட நபரை சுட்டிக்காட்டி அந்த குடும்பத்தில் இருந்த ஒரு பெண், "இங்க பாரு, இப்படி கேவளமான எண்ணங்களை வச்சிருக்கியே உனக்கு அசிங்கமாக இல்லையா" என்பதுபோல கேட்பது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. தான் தனது காதலியை பார்க்க வந்ததாக அவர் ஒப்புக்கொண்ட பின்னர் அந்த காதல் ஜோடியை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

என்ன தான் அந்த குடும்பத்திற்கு அது மிகவும் சீரியஸாக சூழ்நிலையாக இருந்தாலும், அதனை பதிவு செய்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பின்னர் பார்ப்பவர்களுக்கு அது ஒரு காமெடி கன்டென்டாக தான் தெரிகிறது. இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்துள்ளது, சம்பந்தப்பட்ட நபர்கள் யார் போன்ற விபரங்கள் தெரியவில்லை என்றாலும் எக்ஸ் தளத்தில் மிகவும் வேகமாக இந்த காணொளி வைரல் ஆகி வருகிறது.

இந்த காணொளியை பற்றி பலரும் வேடிக்கையான கருத்துகளை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அதில் பெரும்பாலான கமென்டுகள் எப்படி அவர் அந்த சிறிய ஏர் கூலரில் தனது உடலை சுருக்கி பொருத்திக்கொண்டார் என்ற கேள்வியாகத் தான் நிறைந்திருந்தது. அதேபோல, பலரும் கூலரில் ஒழிந்து கொள்ள வேண்டும் என்ற யோசனை அவருக்கு எங்கிருந்து வந்திருக்கும் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒருவர் "அந்த நபர் கூலரை சரி செய்வது போல அல்லவா தெரிகிறது" என்று வேடிக்கையாக கமென்ட் செய்ய, மற்றொருவர் சிரிக்கும் இமோஜியை (Emoji) போட்டு "கூலர்" என்று தனது கமென்டை பகிர்ந்துள்ளார். மேலும் சிலர், "அவரது கர்ள் ஃப்ரெண்ட் அவரை எப்போது கூல் ஆக இருக்க சொல்லியிருக்கும். அதனால் தான் அவர் கூலரில் ஒழிந்துள்ளார்" என்று அவரவர் பங்கிற்கு காமெடியை அள்ளி தெளித்து வருகின்றனர்.
இதை பற்றி உங்களது கமென்ட் என்ன?

Best Mobiles in India

English summary
Young man hides inside air cooler to meet his girlfriend caught on video went viral
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X