Just In
- 15 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 19 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 19 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 21 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Virat Kohli ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இத்தனை கோடி வருமானமா?- உடனே உங்க மொபைல் எடுங்க!
சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்கள் கொண்ட ஒருவராக விராட் கோலி இருக்கிறார். இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது 14-வது இடத்தில் இருக்கிறார்.
அர்ப்பனிப்பான செயல்பாடு, கடுமையான உழைப்பு, ஃபிட்னெஸ் ஆகியவற்றில் விராட் கோலி தனித்துவமாக திகழ்ந்து வருகிறார். இதன் காரணமாக விராட் கோலி கிரிக்கெட் பிரியர்களையும் தாண்டி பலருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்.

தனி அந்தஸ்த்தை உருவாக்கி வைத்துள்ள கோலி
விராட் கோலி கடந்த பல போட்டிகளில் சதங்கள் எதுவும் அடிக்கவில்லை. இதன்காரணமாக சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் கடினமான கட்டத்தை சந்தித்து வந்தாலும், தனக்கென ஒரு அந்தஸ்தை தக்க வைத்துள்ளார். இதன் பிரதபலிப்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிகிறது. விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்குக்கு அப்படி என்ன சிறப்பு?

ஒரு பதிவுக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?
விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்குக்கு 20 மில்லியனுக்கும் மேல் (200,703,169) ஃபாலோவர்கள் இருக்கிறார்கள். hopperhq.com தகவலின் படி, இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் பட்டியலில் விராட் கோலி 14-வது இடத்தில் இருக்கிறார். ஆசியாவில் ஒரே ஒருவர் தான் டாப் 25 இல் இடம்பிடித்திருக்கிறார். அது விராட் கோலி தான். விராட் கோலி ஒரு இன்ஸ்டா பதிவுக்கு $1,088,000 சம்பாதிக்கிறார். அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.8.69 கோடி ஒரு இன்ஸ்டா பதிவுக்கு சம்பாதிக்கிறார்.

டாப் இடத்தில் இருப்பவருக்கு எவ்வளவு இருக்கும்?
இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலமாக விராட் கோலி இருக்கிறார். இந்த ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி விராட் கோலி ஒரு இன்ஸ்டா பதிவுக்கு சுமார் ரூ.5.5 கோடி வசூலித்த வந்த நிலையில், தற்போது வெளியாகயுள்ள நிலவரப்படி இதன் மதிப்பு 1.5 மடங்கு அதிகரித்துள்ளது. 14-வது இடத்தில் விராட்கோலிக்கே இவ்வளவு வருமானம் என்றால் டாப் இடத்தில் இருப்பவருக்கு எவ்வளவு இருக்கும்?

ஒரு பதிவுக்கு ரூ.19.15 கோடி வருமானம் ஈட்டுபவர் இவர்தான்
இன்ஸ்டாகிராமில் உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ள கால்பந்து வீரரான ரொனால்டோ ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.19.15 கோடி வருமானம் ஈட்டுகிறார். அதேபோல் அர்ஜென்டினா கால்பந்து வீரரான மெஸ்ஸி ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.14.20 கோடி வருமானம் ஈட்டுகிறார். இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் பிரபலங்கள் செய்வார்கள் நம்மால் முடியுமா? என தோன்றும். திறமையும் நம்பிக்கையும் மட்டும் இருந்தால் போதும் அனைவரும் சம்பாதிக்கலாம். இதோ வழிமுறைகளை பார்க்கலாம்.

ஒரே இரவில் ஒபாமாவாக மாறிவிட முடியாது
ஒரே இரவில் ஒபாமாவாக மாறிவிட முடியாது. எந்த ஒரு செயலுக்கும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மிக அவசியம். சமூகவலைதளம் மூலம் பிரபலமாகி வருமானம் ஈட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகம். சமூகவலைதளங்களில் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் வருமானம் ஈட்ட முடியுமா என்றால் அதுதான் இல்லை. பெரும்பாலான சமூகவலைதளங்கள் தங்களது பயனர்கள் வருமானம் ஈட்ட வழிவகை செய்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எப்படி பிரபலமாவது என்பது குறித்து பார்க்கலாம்.

ஃபாலோவர்கள் எண்ணிக்கை ரொம்ப முக்கியம்
இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க ஃபாலோவர்கள் எண்ணிக்கை என்பது மிக அவசியம். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் Facebook இன் Brand Collabs Manager மூலம் பணம் சம்பாதிக்க குறைந்தது 1000 ஃபாலோவர்கள் தேவை. இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்துவிட்டால் ஃபாலோவர்கள் எண்ணிக்கை என்பது பிரதான ஒன்றாகும்.

சுறுசுறுப்பாக இருத்தல் மிக அவசியம்
இன்ஸ்டாவில் பணம் சம்பாதிக்க மற்றொரு முக்கியமான விஷயம் "ஆக்டிவ்" ஆக இருப்பது. இன்ஸ்டா கணக்கில் தனித்துவமான மற்றும் புதுமையான கன்டென்ட்களை தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
கணக்கை பின்தொடர்பவர்களை செயலில் வைத்திருக்கவும் அதிகரிக்கவும் இது மட்டும் தான் உதவும். சுறுசுறுப்பாக இயங்கி புதுப்புது கன்டென்ட்களை பதிவிடும் கணக்கை தான் நிறுவனங்களும் கவனிக்கும்.
இதை தொடர்ந்து செய்து வந்தாலே ஃபாலோவர்கள் எண்ணிக்கை அதுவாக அதிகரிக்கத் தொடங்கும்.

கன்டென்ட் மற்றும் பிராண்ட் மிக முக்கியம்
உங்கள் கணக்கை பிரபலமாக்க மற்றொரு முயற்சி பார்ட்னர்ஷிப் உருவாக்குவது.
அதாவது ஏற்கனவே இன்ஸ்டாவில் பிரபலமானவர்களுடன் இணைந்து உங்கள கன்டென்டுகளை பதிவிடுங்கள். இதன்மூலம் குறிப்பிட்ட அளவான ஃபாலோவர்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள். இதற்கு கன்டென்ட் மற்றும் பிராண்ட் என்பது மிக முக்கியம்.

ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்
பிராண்ட், அதாவது நீங்கள் எதுதொடர்பான கன்டென்ட்களை பதிவிட வேண்டும் என்பதை தீர்மானத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, சினிமா ரிவ்யூ, உடல்நல டிப்ஸ், சமையல், டிராவல் வ்லாக் இதுபோன்று உங்களுக்கு விருப்பமான கன்டென்டை ஏதாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் பிராண்டாக மாறும்.
ஒரே பிராண்டின் கீழ் வெவ்வேறு கன்டென்ட்டை புதுமையாக பதிவிட்டால் குறிப்பிட்ட குழுவினரிடையே எளிதாக பிரபலமடையலாம்.

எப்போதும் தொடர்பில் இருப்பது முக்கியம்
தொடர்ந்து உங்களுக்கான ஒரு குழுவை உருவாக்கிக் கொள்ளுங்கள். குழு உறுப்பினர்களிடையே எப்போதும் தொடர்பில் இருங்கள்.
உங்கள் குழுவில் பயனர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கொடுத்துக் கொண்டே இருங்கள். இதன்மூலம் உங்கள் குழு எண்ணிக்கையும் விரிவடையும்.

ஹேஷ்டேக்கில் கவனம் செலுத்துங்கள்
அதேபோல் நீங்கள் பதிவிடும் கன்டென்ட்களுக்கு கொடுக்கும் ஹேஷ்டேக் மிக அவசியம்.
சரியான ஹேஷ்டேக் கீழ் கன்டென்ட்டை பதிவிட்டால் அது அதிக பயனர்களை சென்றடையும்.
டிரெண்டிங் விஷயங்களை கவனித்துக் கொண்டே இருங்கள், அதோடு தொடர்புப்படுத்தி உங்கள் கன்டென்டை பதிவிடுங்கள் இது உங்கள் ஃபாலோவர்கள் எண்ணிக்கையை எகிறச் செய்யும்.

இது நடந்தால் அது தானாக நடக்கும்
இது அனைத்தும் சரியாக நடந்து நீங்கள் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்களை பெற்றிருந்தால், அடுத்தக்கட்டம் வருமானம் தான்.
இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் போதும், வருமானம் தானாக நடக்கும்.
இன்ஸ்டாவில் ஸ்பானசர் செய்யப்பட்ட பதிவுகளை உங்கள் கணக்கில் விளம்பரமாக வெளியிடுங்கள். பார்வையாளர்களுக்கு ஏற்ப வருமானம் வரத் தொடங்கும். ஃபாலோவர்கள் அதிகம் இருந்தால் தானாக பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அனைத்துக்கும் அடிப்படை ஃபாலோவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470