Home
News

இனி நாள் முழுவதும் நெட் யூஸ் பண்ணலாம்! 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த Airtel

ஏர்டெல் நிறுவனம் தற்போது அதிக டேட்டா நன்மைகள் வழங்கும் 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. நாள் முழுவதும் சோஷியல் மீடியாக்கள் பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் வசதியாக இருக்கும்.

புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த Airtel

Airtel அறிமுகம் செய்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டங்களில் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்னவென்று பார்த்தால், இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருந்தால் 5ஜி வேக இணையத்தையும் பயன்படுத்தலாம்.

நாள் முழுவதும் நெட் யூஸ் பண்ணலாம்! 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம்!

ஏர்டெல் டேட்டா ஆட்-ஆன் பிளான்

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து பல்வேறு விலைப் பிரிவில் வெவ்வேறு அம்சங்களுடன் புதிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. பெரும்பாலான திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் குறிப்பிட்ட அளவிலான டேட்டா நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் கிடைக்கும் டேட்டா வரம்பு முடிந்த பிறகும் இணைய சேவை தேவைப்பட்டால் கூடுதலாக டேட்டா ஆட்-ஆன் திட்டங்களையும் வழங்குகிறது. இதன்மூலம் பயனர்கள் கூடுதலாக இணைய சேவையை மட்டும் பெற முடியும்.

சிறந்த டேட்டா ரீசார்ஜ் பிளான்

இணைய வரம்பு முடிந்த பிறகு கூடுதலாக டேட்டா ஆட்-ஆன் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது இது உங்களை கூடுதல் செலவுக்கு வழிவகுக்கிறது. இதை அறிந்த ஏர்டெல் தற்போது இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களில் தினசரி வரம்பு ஏதும் கிடையாது. மொத்தமாக 30 நாட்கள் வேலிடிட்டியுடன் டேட்டா வழங்கப்படுகிறது. உங்களுக்கு தேவைப்படும் தினத்தில் இந்த டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். மாத இறுதியில் டேட்டா மீதம் இருந்தால் அதை மொத்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏர்டெல் 5G

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 2 ரீசார்ஜ் திட்டங்களின் விலை ரூ.489 மற்றும் ரூ.509 ஆகும். அதிக இணையம் தேவைப்படும் பயனர்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பயனர்கள் ஏர்டெல் 5ஜி கிடைக்கும் பகுதியில் இருந்தால் 5ஜி வேகத்தில் இணையத்தை அனுபவிக்கலாம். இந்த திட்டங்களில் டேட்டா, வாய்ஸ் கால் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது.

நாள் முழுவதும் நெட் யூஸ் பண்ணலாம்! 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம்!

ரூ.489 விலையில் கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் பயனர்கள் வரம்பற்ற காலிங், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை பெறலாம். தினசரி வரம்பு ஏதும் இல்லாம் மொத்தமாக 50 ஜிபி டேட்டா வரவு வைக்கப்படுகிறது. கூடுதலாக பயனர்களுக்கு ஏர்டெல் விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன், அப்பல்லோ 24/7 மற்றும் ஃபாஸ்ட்டேக் நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும்.

ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.509 விலையில் அறிவித்துள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் மூலம் பயனர்கள் சில கூடுதல் நன்மைகளை பெறலாம். இந்த திட்டமானது முழுமையாக 1 மாதத்திற்கு செல்லுபடியாகும். உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் உட்பட வரம்பற்ற வாய்ஸ் காலிங் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ் நன்மையும் வழங்கப்படுகிறது. மொத்தமாக 60 ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் முடியும் வரை எப்போது வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூடுதலாக பயனர்களுக்கு ஏர்டெல் விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன், அப்பல்லோ 24/7 மற்றும் ஃபாஸ்ட்டேக் நன்மைகள் வழங்கப்படுகிறது.

நாள் முழுவதும் நெட் யூஸ் பண்ணலாம்! 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம்!

தமிழ் நாட்டில் ஏர்டெல் 5ஜி கிடைக்கும் பகுதிகள்

ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் நீங்கள் இருந்தால் 5ஜி வேக இணையத்தை இந்த திட்டத்தில் அனுபவிக்கலாம். தற்போது ஏர்டெல் 5ஜி சேவை 35க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது. தமிழகத்தின் 5 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கிறது. முன்னதாக சென்னையில் மட்டும் கிடைத்து வந்த நிலையில் தற்போது கோயம்புத்தூர், மதுரை, ஓசூர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிலும் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் இலவசமாக 5ஜி இணைய வேகத்தை அனுபவிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Specially For Social Media and Internet Users: Airtel Launches 2 New Prepaid Plans With Bulk Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X