உலகையே புரட்டிப்போடப்போகும் 5 தொழில்நுட்ப துறைகள்!

வெறுமனே ஒரு கையடக்க சாதனத்தை பயன்படுத்தி எந்தவொரு தகவலையும் நம்மால் தற்போது கண்டுபிடிக்க முடியும் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

|

பரபரப்பான தலைப்பில் இது நல்லதா இல்லையா என்ற விவாதம் நடந்துவரும் நிலையில், கடந்த சில தசாப்தங்களாக நமது உலகம் ஒரு தொழில்நுட்ப புரட்சியை சந்தித்து வருகிறது என்ற உண்மையை சுலபமாக மறுத்துவிடமுடியாது. வெறுமனே ஒரு கையடக்க சாதனத்தை பயன்படுத்தி எந்தவொரு தகவலையும் நம்மால் தற்போது கண்டுபிடிக்க முடியும் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

உலகையே புரட்டிப்போடப்போகும் 5 தொழில்நுட்ப துறைகள்!

வரவிருக்கும் ஆண்டுகளில் நமது உலகின் அடுத்த பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஐந்து தொழில்நுட்பங்களின் பட்டியல் பின்வருமாறு. நாம் விவாதிப்பதுபோலவே இவற்றில் சில தொழில்நுட்பங்கள் ஏற்கனவே நம்மை சுற்றியுள்ள உலகத்தை கட்டமைத்துவரும் நிலையில், கீழேயுள்ள பட்டியலை பார்த்து அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence)

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முன்னோடியில்லாத விகிதத்தில் மேம்பட்டுவருகிறது. மணிக்குமணி சிறப்பான திறனுடையாக மாறி வரும் இத்தொழில்நுட்பம், அதன் மனித படைப்பாளர்களுக்கு கூட மிகவும் சிக்கலானதாக கருதப்படும் செயல்களை எளிதாக செய்யும். செயற்கை நுண்ணறிவின் சாத்தியக்கூறுகளை பொறுத்தவரை, மருத்துவ மற்றும் விவசாயம் உட்பட கிட்டத்தட்ட அனைத்து தொழில்களையும் சிறப்பானதாக மாற்றமுடியும்.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ரோபோட்களை பயன்படுத்தி அதிக துல்லியத்தன்மை தேவைப்படும் பணிகளை நிறைவேற்றலாம். வரவிருக்கும் தசாப்தத்தில் ரோபோவை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துவதையும் எதிர்பார்க்கலாம். ஆனால் இதுவே இறுதியானது அல்ல. என்விடியா, குவாக்கன் போன்ற கருவிகள் மூலம் அனைவரையும் கலைஞர்களாக்க முடியும். மறுபுறம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், வேளாண் உலகத்தை மாற்றியமைப்பதையும் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் செயல்படுவதையும் நாம் காண முடியும்.

3டி பிரிண்டிங்(3D Printing)

3D பிரிண்டிங் அல்லது சேர்க்கை உற்பத்தி என்று அழைக்கப்படுகின்ற இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே நம் வாழ்வில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மெதுவாக முன்னேறி வந்தாலும் நிச்சயமாக கிட்டத்தட்ட அனைத்து தொழில்துறைகளிலும் புகுந்துள்ளது. முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட கட்டமைப்புகள், முப்பரிமாண உடல் உறுப்புகள், எலும்புகள் மற்றும் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட விமான பாகங்கள் கூட தற்போது உள்ளது. முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட அடிடாஸ் ஷூ பற்றி மறந்துவிட முடியுமா?.


நாசா கூட முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை தேர்வுசெய்தது அதன் விண்கலத்தின் பாகங்களை அச்சிட பயன்படுத்துகிறது. டெக்சாஸை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஐகான், வீடில்லாதவர்களுக்கு 3டி அச்சிடும் முறையை பயன்படுத்தி வீடுகள் கட்டி தருகிறது . 3டி அச்சிடும் தொழில்நுட்பமானது கட்டுமானம் செலவை குறைப்பதோடு செலவிடப்படும் நேரத்தையும் குறைக்கிறது.

தானியங்கி வாகனங்கள் (Autonomous Vehicles)

கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான நிறுவனமான டெஸ்லா, தானாக இயங்கக்கூடிய வாகனங்களை நிஜமாக்கும் பணியில் இரவுபகலாக பணியாற்றிவருகிறது. தொழில்நுட்பம் இன்னமும் வளர்ந்து மேம்பட்டு வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையான தானியங்கி கார்களை சாலைகளில் எதிர்பார்க்க முடியும். எலன் மஸ்க் சரியான வழியில் பயணித்தால் வெகு விரைவில் அது சாத்தியமாகும். ஓட்டுநர் இல்லா வாகனங்கள் நாம் பயணிக்கும் முறைகளிலும், ஆட்டோமோடிவ் துறை இயங்குவதையும் முற்றிலும் புரட்சிகரமாக்கும்.

பப்ஜி விளையாடி மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்.! கதறும் பெற்றோர்.!பப்ஜி விளையாடி மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்.! கதறும் பெற்றோர்.!

ஏஆர்/விஆர் தொழில்நுட்பம் (AR/VR Technology)

பயனர்களுக்கு சிறப்பான மெய்நிகர் அனுபவங்களை உருவாக்குவது தான் ஆக்குமெண்டேட் மற்றும் வெர்சுவல் தொழில்நுட்பத்தின் குறிக்கோள் ஆகும். இந்த குறிப்பிட்ட தொழில்நுட்பம் எதிர்காலத்தில் புதிய விஷயங்களை எவ்வாறு உருவாக்க கட்டமைக்க மற்றும் அனுபவத்தை பெற முடிகிறது என்பதில் முக்கியமான பங்கை கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக மருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகிறது. கட்டிட வடிவமைப்பாளர்கள் 'இன்- ஹவுஸ்' அனுபவத்தை உருவாக்குவதற்கான ஆக்குமெண்டேட் தொழில்நுட்பம் மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், திட்டங்களின் செலவினம் மற்றும் நேரம் குறைக்கின்றன.

விரைவில் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு நவீன படை-அலறும் பாக்.!விரைவில் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு நவீன படை-அலறும் பாக்.!

டிரோன்கள்(Drones)

தனிப்பட்ட பயன்பாடுகள் அல்லது இராணுவப் பயன்பாடுகள் என எதுவாக இருந்தாலும் ட்ரோன்கள் மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டன. ட்ரோன் தொழில்நுட்பம் இன்னும் மேம்பட்டு வரும்நிலையில், ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் சிறந்த ட்ரோன்களை நாம் காண்கிறோம். ட்ரோன் தொழில்நுட்பம் ஏற்கனவே உலகெங்கிலும் பேரழிவு நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது துல்லியமான விவசாயம், சொத்து ஆய்வுகள், கடல் வரைபடமாக்கல் மற்றும் பார்சல்களை டெலிவரி செய்வது போன்றவற்றிக்கும் பயன்படுத்துகிறது.

கடின உழைப்பாளிக்கு சோமோட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி.! பாராட்டுக்கள்.!கடின உழைப்பாளிக்கு சோமோட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி.! பாராட்டுக்கள்.!

Best Mobiles in India

English summary
5 Areas Of Technology That Will Revolutionize The World : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X