பப்ஜி விளையாடி மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்.! கதறும் பெற்றோர்.!

|

பப்ஜி உலகம் முழுதும் அனைவராலும் பெரிதும் விளையப்பட்டுக்கொண்டிருக்கும் கேம் என்பது அனைவர்க்கும் தெரியும். இண்டோர் பகுதியைச் சேர்ந்த 16 வயது வாலிபர் தொடர்ச்சியாக 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடித் தோற்ற அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.

பப்ஜி பற்றி ஆய்வுகள் என்ன தெரிவிக்கிறது தெரியுமா?

பப்ஜி பற்றி ஆய்வுகள் என்ன தெரிவிக்கிறது தெரியுமா?

உலகம் முழுதும் பலரும் இந்த பப்ஜி கேம்மை விரும்பி விளையாடி வருகின்றனர். பலரும் இந்த கேமிற்கு அடிமையாகி விட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. தொடர்ச்சியாக இந்த கேம்மை விளையாடும் பலருக்கும் மனரீதியான சோர்வும், குழப்பமும், விரக்தியும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃபுர்கான் குரேஷி

ஃபுர்கான் குரேஷி

மருத்துவர்கள் முன்பே தெரிவித்தது போல் சிறுவர்களுக்கு இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடம் என்று சொன்னது அனைத்தையும் உறுதிப்படுத்தும் விதமாக இப்பொழுது ஒரு உண்மை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஃபுர்கான் குரேஷி என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், தொடர்ச்சியாக 6 மணிநேரத்திற்கு மேல் பப்ஜி கேம்மை விளையாடி மரணம் அடைந்திருக்கிறார்.

அதிகம் படிக்கப்பட்டவை:விரைவில் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு நவீன படை-அலறும் பாக்.!அதிகம் படிக்கப்பட்டவை:விரைவில் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு நவீன படை-அலறும் பாக்.!

இறுதியாய் மகனின் அலறலைக் கேட்ட பெற்றோர்

இறுதியாய் மகனின் அலறலைக் கேட்ட பெற்றோர்

தொடர்ச்சியாக பப்ஜி விளையாடி, ஒருமுறை கூட வெற்றிபெற முடியாத காரணத்தினால் மனவிரக்தியில் சத்தமிட்டுக் கதறி அழுதுள்ளான். இந்த சம்பவம் நடந்த பொழுது ஃபுர்கான் குரேஷியின் தகப்பனாரும் அருகிலிருந்திருக்கிறார். மகனின் அலறலைக் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் ஃபுர்கான் குரேஷியின் அருகில் வந்துள்ளனர்.

மயங்கி கீழே விழுந்த குரேஷி

மயங்கி கீழே விழுந்த குரேஷி

விரக்தியில் கதறி அழுத்த ஃபுர்கான் குரேஷி, சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்திருக்கிறார். குரேஷியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். பேச்சு மொச்சு எதுவுமில்லாமல் குரேஷி இருப்பதாய் கண்டு விரைவாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை:கடின உழைப்பாளிக்கு சோமோட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி.! பாராட்டுக்கள்.!அதிகம் படிக்கப்பட்டவை:கடின உழைப்பாளிக்கு சோமோட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி.! பாராட்டுக்கள்.!

மருத்துவர்களின் முயற்சி

மருத்துவர்களின் முயற்சி

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலும் பொழுதே குரேஷி இறந்திருக்கிறார். மருத்துவர்கள் குரேஷியைச் சோதித்த பொழுது அவருக்கு நாடித்துடிப்பு இல்லாமல் இருந்திருக்கிறது. நாடித்துடிப்பு இல்லாத போதும் மருத்துவர்கள் குரேஷியைக் காப்பாற்ற முயன்றிருக்கின்றனர், ஆனால் மருத்துவர்களின் முயற்சிகள் பயனளிக்கவில்லை.

மாரடைப்பு ஏற்பட காரணம் இதுதான்

மாரடைப்பு ஏற்பட காரணம் இதுதான்

குரேஷியின் உடலைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கூறியதாவது "சிறுவனின் இதயம் வலிமையாகத் தான் இருந்திருக்கிறது. கேம் விளையாடிய உற்சாகத்தில் அதிகமாக அட்ரினலின் சுரந்திருக்க கூடும், இவர் கத்தி கூச்சலிடத்தில் இதயத் துடிப்பு அதிகம் ஆகி இரத்த ஓட்டம் அதிகரித்து இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அதிகம் படிக்கப்பட்டவை:டிரம்ப் உடன் சத்திப்புக்கு ஏற்பாடு செய்த அதிகாரிக்கு மரண தண்டனை: ஹிட்லரை மிஞ்சும் கிம்.!அதிகம் படிக்கப்பட்டவை:டிரம்ப் உடன் சத்திப்புக்கு ஏற்பாடு செய்த அதிகாரிக்கு மரண தண்டனை: ஹிட்லரை மிஞ்சும் கிம்.!

18 மணி நேரம் ஓய்வு இல்லாமல் பப்ஜி

18 மணி நேரம் ஓய்வு இல்லாமல் பப்ஜி

குரேஷி ஒரு நீச்சல் வீரர் என்று அவரின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். ஃபுர்கான் குரேஷி சில நேரங்களைத் தொடர்ச்சியாக 18 மணி நேரம் ஓய்வு இல்லாமல் பப்ஜி கேம்மை விளைந்து வந்ததாகவும் அவரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார். விளையாட்டால் இவர் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Indore school boy played pubg died on spot due to heart attack : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X