Home
Social media

கடின உழைப்பாளிக்கு சோமோட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி.! பாராட்டுக்கள்.!

கடந்த சில வாரங்களுக்கு முன்னாள் சோமோட்டோ நிறுவன ஊழியர் ராமு பாய் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகினார். மாற்றுத்திறனாளியான ராஜு பாய் சோமோட்டோ நிறுவனத்தில் டெலிவரி பார்ட்னராக வேலைபார்த்து வருகிறார்.

கடின உழைப்பாளிக்கு சோமோட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி.! பாராட்டுக்கள்.!

தற்பொழுது சோமோட்டோ நிறுவனம் ராமுவிற்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை நேரடியாக அவருக்கே டெலிவரி செய்து மிரளவைத்துள்ளது.

இணையத்தை கலக்கிய வீடியோ

இணையத்தை கலக்கிய வீடியோ

கடந்த வாரம்ஹனி கோயல் என்பவர் டிவிட்டர் பக்கத்தில் ராமுகையால் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனத்தில் உணவை டெலிவரி செய்யும் வீடியோ பதிவை பதிவிட்டார். இணையம் முழுதும் இந்த வீடியோ சிறிது நேரத்தில் வைரலானது. இந்த வீடியோவைஆயிரக்கனான லைக் மற்றும் ஷேர் செய்தனர்.

இவர் ஒரு எடுத்துக்காட்டு

வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நம்பிக்கை இல்லாமல் இருக்கும் பலருக்கும், வாழ்வைக் கண்டு சோர்வடைந்த அனைவர்க்கும் இவர் ஒரு முன்மாதிரி என்று அனைவராலும் ராமு பாராட்டப்பட்டார். இந்த பதிவு சோமோட்டோ நிறுவனத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

வீடியோ பதிவிற்கு சோமோட்டோ அளித்த பதில்

சோமோட்டோ நிறுவனம், ராமுவின் வீடியோ பதிவிற்குப் பதிலும் அளித்திருந்தது. சோமாட்டோ பயனர்களுக்கு உணவை எந்த தடையும் இன்றி கொண்டு செல்லும் எங்கள் டெலிவரி பார்ட்னர்களை கண்டு நாங்கள் வியக்கிறோம், இந்த பதிவை எங்களுக்குச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி என்று சோமோட்டோ நிறுவனம் பதில் டிவீட்டும் செய்திருந்தது.

ராகுவிற்கு சோமோட்டோவின் டெலிவரி

ராகுவிற்கு சோமோட்டோவின் டெலிவரி

அதனைத் தொடர்ந்து நெட்டிசன்ஸ்கள் அவருக்கு மின்சாரத்தால் இயங்கக்கூடிட மின்சார வாகனத்தை நிறுவனம் வழங்கலாமே என்றும் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். தற்பொழுது ராமுவிற்கு இன்ப அதிர்ச்சியாக, சோமோட்டோ நிறுவனம் மின்சாரத்தால் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனத்தை வழங்கியுள்ளது.

உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பலன்

உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பலன்

ராமுவின் கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த பலன் இது என்று சோமோட்டோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சோமோட்டோ நிறுவனம் வழங்கிய மின்சார மூன்று சக்கர வாகனத்தை ராமு ஏற்றுக்கொண்டார். தன்னை ஊக்குவித்த அனைவர்க்கும் நன்றிகளையும் தெரிவித்திருக்கிறார்.

இனி டெலிவரி ஈஸி ராமு உற்சாகம்

தற்பொழுது சோமோட்டோ நிறுவனம் வழங்கிய மின்சார மூன்று சக்கர வாகனத்தில் ராமு உணவுகளை டெலிவரி செய்யத் துவங்கிவிட்டார். ராமு மின்சார மூன்று சக்கரத்தில் டெலிவரி செய்யும் வீடியோ பதிவுகள் தற்பொழுது வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

Best Mobiles in India

English summary
surprisingly zomoto delivers electric motor vehicle to his delivery partner : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X