Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?

நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்த எச்டிஎம் நிறுவனம் புதிய எச்எம்டி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது எச்எம்டி பல்ஸ் ப்ரோ, எச்எம்டி பல்ஸ் பிளஸ், எச்எம்டி பல்ஸ் பிளஸ் ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக எச்எம்டி பல்ஸ் ப்ரோ (HMD Pulse Pro), எச்எம்டி பல்ஸ் பிளஸ் (HMD Pulse+), எச்எம்டி பல்ஸ் (HMD Pulse) பிளஸ் போன்கள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. அறிமுகமானது HMD போன்கள்..

எச்எம்டி பல்ஸ் ப்ரோ அம்சங்கள் (HMD Pulse Pro specifications): RIY டிசைன் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக 6.65 எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி பல்ஸ் ப்ரோ போன். மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன். எச்எம்டி பல்ஸ் ப்ரோ போனில் யுனிசாக் டி606 (Unisoc T606) சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு 50எம்பி செல்பி கேமரா, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், 4ஜி, வைஃபை 5, புளூடூத் வி5.2, 3.5எம்எம் ஆடியோ ஜாக், OZO ஆடியோ, ஐபி52 ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது எச்எம்டி பல்ஸ் ப்ரோ போன்.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. அறிமுகமானது HMD போன்கள்..

எச்எம்டி பல்ஸ் பிளஸ் அம்சங்கள்: RIY டிசைன் கொண்டுள்ளது எச்எம்டி பல்ஸ் பிளஸ் போன். மேலும் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. அதேபோல் யுனிசாக் டி606 சிப்செட் வசதியுடன் எச்எம்டி பல்ஸ் பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது எச்எம்டி பல்ஸ் பிளஸ் போன். மேலும் 50எம்பி செல்பி கேமரா, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், 4ஜி, வைஃபை 5, புளூடூத் வி5.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக், OZO ஆடியோ, ஐபி52 ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது எச்எம்டி பல்ஸ் பிளஸ்.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. அறிமுகமானது HMD போன்கள்..

எச்எம்டி பல்ஸ் அம்சங்கள் (HMD Pulse specifications): 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது எச்எம்டி பல்ஸ் போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங், 6.65-இன்ச் டிஸ்பிளே, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், 4ஜி, வைஃபை 5, புளூடூத் வி5.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக், OZO ஆடியோ, ஐபி52 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக இந்த மூன்று எச்எம்டி போன்களும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட எச்எம்டி பல்ஸ் ப்ரோ போனின் விலை ரூ.16,070-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி எச்எம்டி பல்ஸ் பிளஸ் போனின் விலை ரூ.14,284-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் + 64எம்பி மெமரி கொண்ட எச்எம்டி பல்ஸ் போனின் விலை ரூ.12,498-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Pulse Pro Plus launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X