Subscribe to Gizbot

பார்க்கத்தான் இது சியோமி 'மினி' ஆனால் அம்சங்களில் 'புலி'.!

Written By:

சியோமி ஸ்மார்ட்போன்கள் மீது இந்தியர்களுக்கு எப்படி காதல் உருவானது என்பது இன்று வரையிலாக நீளும் ஒரு சந்தேகம் தான்..!

பின் என்ன மக்களே..!? "வேற மாதிரியான வழியில் சைனா செட் மீண்டும் இந்தியாவுக்குள் வருது" என்று கேலி கிண்டல் செய்து விட்டு, இப்போது யாரைக்கேட்டாலும் சியோமி மி கருவி மாடல் ஒன்றைத்தான் வைத்துள்ளதாக கூறுகிறார்கள் (நானும், எங்கள் தொழில்நுட்ப அணியில் பலரும்), "எனக்கு தெரிஞ்சு சியோமி நல்லா இருக்கு", "நம்பி வாங்கலாம்" போன்ற பல கருத்துக்களை பதிவு செய்தால் என்ன அர்த்தம்.??

அப்போது சியோமி நிஜமாகவே ஒரு சைனா செட் போன் இல்லையா..? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பேன். ஆசியாவின் ஐபோன் என்று பெயர் வாங்கும் அளவிற்கு நல்ல தயாரிப்புகளை வழங்கி வரும் ஒரு சீன நிறுவனம் தான் - சியோமி.!

ஒருபக்கம் உயர்தரமான வடிவமைப்பில், விலைக்கு ஏற்ற நல்ல கருவிகளை வழங்கிவரும் சியோமி கருவிகள் மறுபக்கம் பல வகையான லீக்ஸ் தகவல்களை வழங்கியும் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்குகிறது என்றும் கூறவேண்டும். அப்படியான ஓரு லீக் செய்தியில் அடுத்த வரவிற்கும் சியோமியின் மினி பிளாக்ஷிப் கருவி பற்றிய விவரங்கள் இதோ.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மினி பிளாக்ஷிப் கருவி

மினி பிளாக்ஷிப் கருவி

நிறுவனம் மூலம் வெளியிடப்பட்ட பெரிய அளவிலான ஸ்க்ரீன் அளவு (6.4இன்ச்) கொண்ட உயர்-இறுதி சியோமி மி மிக்ஸ் கருவியின் வெற்றியை தொடர்ந்து இப்பொது ஒரு மினி பிளாக்ஷிப் கருவி சார்ந்த பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பெயர்

பெயர்

இந்த மினி பிளாக்ஷிப் கருவியில் 4.6 அங்குல ஸ்க்ரீன் இடம்பெறும் என்பது போல் தெரிகிறது. மற்றும் வதந்திகளின் படி இக்கருவியின் பெயர் சியோமி மி எஸ் என்றும் இது ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் மற்றும் 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வன்பொருள் குறிப்புகள்

வன்பொருள் குறிப்புகள்

வழக்கம் போல இந்த சியோமி லீக் தகவல்களின் ஆதாரமாகவும் விபோ வலைத்தளம் திகழ்கிறது. மேலும் ஆண்ட்ராய்டுப்யூர் கசிவின்படி, இக்கருவி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் சியோமி மி எஸ் கருவி நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் தானா என்று சரிபார்க்க வேண்டியது இருக்க, மறுபக்கம் லீக்ஸ் தகவல்கள் வெளியிட சீன வலைத்தளத்தில் ஸ்மார்ட்போனின் விரிவான வன்பொருள் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி மி எஸ் அம்சங்கள் :

சியோமி மி எஸ் அம்சங்கள் :

டிஸ்ப்ளே : 4.6 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) தீர்மானம்
ரேம் : 4ஜிபி
இயங்குதளம் : ஸ்னாப்டிராகன் 821 எஸ்ஓசி
முன்பக்க கேமிரா : சோனி ஐஎம்எக்ஸ்378 கொண்ட 12 மெகாபிக்சல்
செல்பீ கேமிரா : 4 எம்பி
பாஸ்ட் சார்ஜ் ஆதரவு : உண்டு
பேட்டரி திறன் : 2600எம்ஏஎச்
அளவீடுகள் :8.2 மிமீ தடிமன் மற்றும் 138 கிராம் எடை
இணைப்பு விருப்பங்கள் : என்எப்சி, யூஎஸ்பி டைப் சி போர்ட், மற்றும் ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக் வழங்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

தற்போதைய தகவல்கள் மூலம் இக்கருவியின் சியோமி மி எஸ் என்பது குறியீடு பெயராக இருக்கலாம், இறுதியில் முற்றிலும் வேறு ஏதாவது பெயரில் அழைக்கப்படும் ஒரு நல்ல வாய்ப்பும் உள்ளது என்று நம்பப்படுகிறது. மேலும் வழக்கம் போல தமிழ் கிஸ்பாட் லீக்ஸ் தகவல்கள் என்ற தலைப்பின்கீழ் வழங்கும் செய்திகளில் இருந்து உப்பின் ஒரு சிட்டிகை அளவிலான தகவல்களை மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம் மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கும், செய்திகளுக்கும் தமிழ் கிஸ்பாட் வலைதளம் அல்லது முகநூல் பக்கத்தினோடு இணைந்திருங்கள்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜனவரி முதல் ரூ.11,999/-க்கு சியோமி ரெட்மீ நோட் 4, என்னென்ன அம்சங்கள்.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Xiaomi Mi S Leak Suggests Mini-Flagship With 4.6-inch Display, Snapdragon 821 SoC and 4GB RAM. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot