Xiaomi டபுள் பாதுகாப்பு.. டபுள் கழுகு பார்வை.. உங்க வீட்டுக்கு இந்த செக்யூரிட்டி கேமரா பெஸ்ட்.. விலை என்ன?
சியோமி (Xiaomi) நிறுவனம் கடந்த மாதம் CW500 என்ற ஒரு வித்தியாசமான செக்யூரிட்டி கேமராவை (Security camera) அறிமுகம் செய்தது. அதன் விற்பனை இப்போது துவங்கியுள்ளது. இதன் விலை என்ன? இதன் கிடைக்கும் தன்மை என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்.
சியோமி நிறுவனத்தின் சொந்த சந்தையான சீனாவில் இப்போது இந்த CW500 டூயல் லென்ஸ் செக்யூரிட்டி கேமரா (CW500 dual lens security camera price) சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 4000 விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்த சாதனம் சீனாவில் மட்டும் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படுகிறது. விரைவில் இது இந்தியா போன்ற மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி CW500 டூயல் லென்ஸ் செக்யூரிட்டி கேமரா (Xiaomi dual lens outdoor security camera):
இது 64GB ஸ்டோரேஜ் கொண்ட இலவச மெமரி கார்டுடன் விற்பனைக்கு இப்போது கொண்டுவரப்பட்டுள்ளது. சியோமி CW500 டூயல் லென்ஸ் செக்யூரிட்டி கேமரா (Xiaomi dual lens outdoor security camera) மிகவும் பிரத்தியேகமான வடிவமைப்பை பெற்றுள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போல இதுல 2 கேமரா லென்ஸ்கள் (2 camera lens) உள்ளது. இதில் உள்ள ஒரு கேமரா லென்ஸ் ஒரே இடத்தை மட்டும் ஃபோக்கஸ் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டாவதாக வழங்கப்பட்டுள்ள கேமரா லென்ஸ் 360 டிகிரி கோணத்தில் திரும்பக்கூடிய அம்சத்துடன் வருகிறது. இது டில்டிங் மற்றும் பெனிங் போன்ற அம்சத்துடன் பரந்த அளவிலான இடத்தை இதன் செக்யூரிட்டி பார்வைக்குள் சிக்க வைக்கிறது. இதனால், உங்களுக்கு பிளைண்ட் ஸ்பாட்டே (blind spot) இல்லாத மிகவும் உறுதியான பாதுகாப்பு கிடைக்கிறது. அதாவது, ஒளிவு மறைவு இல்லாத ஒட்டுமொத்த பார்வை கோணத்தை இந்த செக்யூரிட்டி கேமரா கைப்பற்றுகிறது.
இந்த இரண்டு கேமரா லென்ஸ்களும் 4 மெகாபிக்ஸல் (megapixel) கொண்ட அம்சத்துடன் வருகிறது. இது 2.5K அல்ட்ரா கிளியர் இமேஜ் (ultra clear image) உடன் வருகிறது. இந்த இரண்டு கேமரா லென்ஸில் உள்ள லென்ஸிற்கு அருகில் 2 வைட் லைட் (white light) மற்றும் 2 இன்ஃபிரா ரெட் (Infrared night vision) சென்சார்களை கொண்டுள்ளது. இதில் நைட் விஷன் மோட் உள்ளது.

AI அம்சம், மனித மற்றும் வாகன டிடெக்ஷன் மோட் உடன் சிசிடிவி கேமரா:
இது இரவு நேரத்தில் தெளிவான படங்களை கைப்பற்ற அனுமதிக்கும் நைட் விஷன் அம்சத்தையும் கொண்டுள்ளது. அதேபோல், மனித உடல் உருவம் மற்றும் வாகனங்களின் உருவம் போன்ற உருவங்கள் நகர்வதை கண்டால், ஆட்டோமேட்டிக்காக கலர் நைட் விஷன் அம்சத்தை ஆக்டிவேட் செய்து கிளியரான வீடியோவை பதிவு செய்கிறது.
CW500 டூயல் லென்ஸ் செக்யூரிட்டி கேமரா AI அம்சத்துடன் வருகிறது. இது AI ஹியூமன் மற்றும் வெஹிக்கிள் டிடெக்ஷன் அம்சத்துடன் வருகிறது. இதனால், மிகவும் துல்லியமான கண்காணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் AI கண்காணிப்பு அம்சம் இருப்பதனால் ஒரு சிறிய அசைவு ஏற்பட்டால் கூட, அதை உடனே கேமரா திரும்பி ரெக்கார்ட் செய்யும். உடனே அசைவுகள் பற்றி Mi Home ஆப்ஸ் மூலம் பயனர் ஸ்மார்ட்போனிற்கு நோட்டிபிகேஷன் அனுப்பும்.
இந்த செக்யூரிட்டி கேமராவில் பில்ட் இன் Mi Home செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டுள்ளது, இதனால் இதில் உள்ள தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது கடுமையான தூசி, தண்ணீர், மழை மற்றும் பனி போன்ற சூழல்களில் தாங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஹை-சென்சிட்டிவிட்டி மைக்ரோபோன் மற்றும் ஹை-பவர் ஸ்பீக்கர் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டு வழி கம்யூனிகேஷனை உறுதி செய்கிறது.
அதாவது இந்த செக்யூரிட்டி கேமரா மூலம் உங்கள் வீட்டிற்கு வெளியில் உள்ள நபர்களுடன் நீங்கள் பேசலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஆப்ஸ் வழியாக பேசினால், வெளியில் இருக்கும் நபருக்கு ஸ்பீக்கர் வழியாக நீங்கள் பேசிய தகவல் ஒளிபரப்பப்படும். இந்த கேமரா சியோமியின் HyperOS கனெக்ட் அம்சத்தையும் கொண்டுள்ளது. உண்மையில், இது ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான பாதுகாப்பு கேமரா என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications