Home
Gadgets

அதிரவிடும் சவுண்ட்.. Waterproof.. 12 மணி நேர பிளேபேக்.. அறிமுகமானது சியோமி ஸ்பீக்கர்கள்..

சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் தரமான சாதனங்களை அறிமுகம் செய்வதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சியோமி நிறுவனம் இரண்டு புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சியோமி சவுண்ட் பாக்கெட் (Xiaomi Sound Pocket) மற்றும் சியோமி சவுண்ட் அவுட்டோர் (Xiaomi Sound Outdoor) என இரண்டு ஸ்பீக்கர்களை தான் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இந்த இரண்டு ஸ்பீக்கர் மாடல்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

அதிரவிடும் சவுண்ட்.. Waterproof.. அறிமுகமானது சியோமி ஸ்பீக்கர்கள்..

சியோமி சவுண்ட் அவுட்டோர் (Xiaomi Sound Outdoor specifications): அனைத்து இடங்களுக்கு எளிதாகப் பைகளில் எடுத்துச் செல்லும் வகையில் இந்த ஸ்பீக்கர் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாடல் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் இந்த அசத்தலான சியோமி சவுண்ட் அவுட்டோர் மாடல் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி சவுண்ட் அவுட்டோர் மாடலில் ரப்பர் மற்றும் ஸ்டிராப் போன்றவை இருப்பதால், இதை கைகளிலேயே சுலபமாக எடுத்து சென்று பயன்படுத்த முடியும். இந்த புதிய ஸ்பீக்கர் ஆனது அதிகபட்சம் 30 வாட் திறனின் ஆடியோவை வழங்குகிறது. எனவே இது கண்டிப்பாகச் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

சியோமி சவுண்ட் அவுட்டோர் மாடலில் பில்ட்-இன் சப்-வூஃபர், இரண்டு பேசிவ் ரேடியேட்டர்கள் மற்றும் டுவீட்டர் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த ஸ்பீக்கர் ஆனது IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதுதவிர ப்ளூடூத் 5.4 தொழில்நுட்பம் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.

அதிரவிடும் சவுண்ட்.. Waterproof.. அறிமுகமானது சியோமி ஸ்பீக்கர்கள்..

குறிப்பாக சியோமி சவுண்ட் அவுட்டோர் மாடலில் 2000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்பீக்கர் மாடலை முழுமையாக சார்ஜ் செய்து 50 சதவீதம் சத்தம் வைத்துக் கேட்கும் பட்சத்தில் இது 12 மணி நேர பிளேபேக் வழங்கும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

சியோமி சவுண்ட் பாக்கெட் அம்சங்கள் (Xiaomi Sound Pocket specifications): 5 வாட் திறனில் ஆடியோவை வழங்குகிறது இந்த அசத்தலான சியோமி சவுண்ட் பாக்கெட் மாடல். இது அளவில் மிகவும் சிறியது. அதேபோல் கருப்பு நிறத்தில் இந்த சியோமி சவுண்ட் பாக்கெட் மாடலை வாங்க முடியும். மேலும் இந்த ஸ்பீக்கர் மாடலில் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அதிரவிடும் சவுண்ட்.. Waterproof.. அறிமுகமானது சியோமி ஸ்பீக்கர்கள்..

சியோமி சவுண்ட் பாக்கெட் ஸ்பீக்கரில் 40 சதவீத சத்தத்தில் கேட்கும் போது பத்து மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என்று நிறுவன கூறுகிறது.குறிப்பாக இந்த சிறிய ஸ்பீக்கர் ஆனது தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி அறிமுகம் செய்துள்ள சியோமி சவுண்ட் அவுட்டோர் மற்றும் சியோமி சவுண்ட் பாக்கெட் மாடல்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல் இந்த புதிய ஸ்பீக்கர்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் சியோமியின் இந்த புதிய ஸ்பீக்கர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

அதேபோல் சியோமி நிறுவனம் சமீபத்தில் தான் சியோமி டிவி எஸ்85 மினி எல்இடி மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த 85-இன்ச் புதிய சியோமி டிவி 64ஜிபி ஸ்டோரேஜ், குவாட்-கோர் பிராசஸர், வைஃபை 6, டால்பி விஷன் பனோரமிக் சவுண்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது. இந்த சியோமி டிவியும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi launched two waterproof Bluetooth speakers in global market: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X