Home
Gadgets

அதிரவிட்ட அமேசான்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் Xiaomi டிவி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சியோமி நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி ஆடியோ, 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிவியின் விலை, அம்சங்களை பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் சியோமி எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆணட்ராய்டு எல்இடி டிவி மாடலுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.20499 இருந்தால் வாங்கிவிட முடியும்.

அதிரவிட்ட அமேசான்.. டால்பி ஆடியோ..ஆஃபரில் Xiaomi டிவி.. எந்த மாடல்?

சியோமி 5ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Xiaomi MI 5A Series Smart TV Specifications): சியோமி எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad core Cortex A55)உடன் இந்த எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனேவ இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக PatchWall மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே பல்வேறு புதிய அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கும்.

அதிரவிட்ட அமேசான்.. டால்பி ஆடியோ..ஆஃபரில் Xiaomi டிவி.. எந்த மாடல்?

குறிப்பாக இந்த சியோமி ஆண்ட்ராய்டு டிவியில் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் போன்ற பல அசத்தலான அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் ஆதரவு உள்ளது. அதேபோல் பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த அட்டகாசமான எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டது.

சியோமி நிறுவனத்தின் எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

இந்த டிவியின் ஆடியோ அமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி. அதாவது டால்பி ஆடியோ ( Dolby Audio), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ் (DTS Virtual: X) ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த சியோமி ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

அதிரவிட்ட அமேசான்.. டால்பி ஆடியோ..ஆஃபரில் Xiaomi டிவி.. எந்த மாடல்?

குறிப்பாக வாய்ஸ் அசிஸ்டண்ட், ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. மேலும் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.௦, ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது சியோமி எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி.

குறிப்பாக சியோமி நிறுவனத்தின் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஸ்மார்ட் டிவிகள் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
31 Percent Discount on Xiaomi MI 5A Series Smart TV in Flipkart Sale 2024 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X