யாரும் தரமுடியாத விலை.. Xiaomi வெளியிட்ட புது AC + Heater மாடல்.. நிறைந்திருக்கும் ஸ்மார்ட் அம்சங்கள்..
சியோமி (Xiaomi) நிறுவனம் புதிதாக சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி (Xiaomi Mijia Air Conditioner Pro 1.5 HP) என்ற ஏசி (AC) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.
சியோமி அதன் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் (Electronics devices) பிரிவில் புதிதாக தொடர்ந்து பல ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்போது இந்த வரிசையில் நிறுவனம் சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி (Xiaomi Mijia Air Conditioner Pro 1.5 HP) என்ற வால் மவுண்ட் ஏசி (wall mount AC) மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஏசி என்றதும் இது வழக்கமான ஏசி என்று நினைத்துவிடாதீர்கள்.

சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி (Xiaomi Mijia Air Conditioner Pro 1.5 HP):
இந்த ஏசியை நீங்கள் வெப்பமான நேரத்தில் குளிர்ந்த காற்றை பெறவும் பயன்படுத்தலாம் மற்றும் குளிர் காலத்தில் சூடான காற்றை பெறவும் பயன்படுத்தலாம். ஆம், மக்களே இது கூலிங் ஏசியாகவும் (cooling AC), சூடான ஹீட்டராகவும் (heater) ஒரே சாதனத்தில் செயல்படுகிறது. இதுவொரு AC + Heater (ஹீட்டர்) சாதனமாகும். "ஒரே கல்லில் ரெண்டு மாங்கா" என்பது போல, ஒரே சாதனத்தில் இரண்டு பயன்முறையை நீங்கள் பயனப்டுத்திக்கொள்ளலாம்.
இதற்கே வாய் பிளந்தால் எப்படி? இன்னும் ஏரளமான மாஸ் அம்சங்களை சியோமி இந்த Xiaomi Mijia Air Conditioner Pro 1.5 HP ஏசியுடன் பேக் செய்துள்ளது. சந்தையில் தற்போது கிடைக்கும் AC மாடல்களை விட இது மிகவும் குறைந்த அளவிலான மின்சாரத்தை (current) மட்டுமே எடுத்துக்கொள்கிறது. மற்ற ஏசி மாடல்களை விட இந்த சியோமி ஏசி மாடல் ஆண்டுக்கு சுமார் 361 kWh மின்சாரத்தை மிச்சம்பிடிப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.
இந்த சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி சாதனம் ராபிட் கூலிங் (Rapid cooling) மற்றும் ராபிட் ஹீட்டிங் (Rapid heating) அம்சத்துடன் வருகிறது. இந்த அம்சம் உங்கள் அறையை வெறும் 30 வினாடிகளில் முழுமையாக குளிர்விக்கிறது மற்றும் 60 வினாடிகளில் சூடாக்குகிறது. இந்த AC மாடல் 18 டெசிபல் (18 decibels) அளவிற்கும் குறைவான மிகவும் குறைந்த அளவிலான இரைச்சலை (noise) கொண்டுள்ளது.

இது பெட்ரூமிற்கு (Bedroom) ஏற்ற மாடலாக அமைகிறது. இந்த சாதனம் கடுமையான வெப்பம் மற்றும் குளிர் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இது -35°C ஹீட்டிங் மோடிலும் (heating mode) மற்றும் கூலிங் மோடில் (cooling mode) 65°C வரை சிறப்பாக செயல்படக்கூடியது. இந்த ஏசி லிங்யுன் ஸ்மார்ட் கண்ட்ரோல் என்ஜின் (Lingyun Smart Control Engine) இன்டெலிஜெண்ட் மோட் அம்சத்துடன் வருகிறது.
இந்த அம்சம் கிளவுட் பேஸ் லேர்னிங் அல்கோரிதம் உடன் வருகிறது. அதேபோல், இது OTA மூலம் அப்டேட் செய்யக்கூடிய எதிர்கால அம்சங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் கண்டிஷனரில் புதிய தலைமுறை 8 போல் 12 ஸ்லாட் கம்ப்ரெஸ்ஸர் (compressor) வழங்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த சத்தம் மற்றும் நீண்ட ஆயுட்காலம் கிடைக்கிறது. இது அதிகரித்த வெப்ப பரிமாற்றத்திற்கான டூயல் ரோ கண்டன்சர் (condenser) மற்றும் கோன் டிஸ்டிபியூட்டரையும் கொண்டுள்ளது.
சியோமி ஏசி விலை என்ன? (Xiaomi AC Price):
இது Mi Home app, ரிமோட் கண்ட்ரோல் (remote control), சியோமி ஹைப்பர் ஓஎஸ் ஸ்மார்ட் கனெக்ட் (Xiaomi HyperOS Smart Connect) மற்றும் வாய்ஸ் கமாண்ட் (voice commands) போன்ற அம்சங்களில் வேலை செய்கிறது. இந்த ஏசியை சியோமி நிறுவனம் தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது விரைவில் இந்தியா போன்ற மற்ற நாடுகளிலும் கிடைக்கும். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 27,654 மட்டுமே.


Click it and Unblock the Notifications