iPhone-னை தூக்கி சாப்பிட்ட Android போன்.. சீன நிறுவனமா இருந்தாலும் போன் செம சீன்-ஆ இருக்கு.. இன்று விற்பனை..
சீனாவில் முளைத்து உலகம் முழுக்க பறந்து விரிந்து வேரூன்றி நிற்கும் நிறுவனம் தான் சியோமி (Xiaomi). சியோமி நிறுவனம் இப்போது இந்தியாவில் அதன் பிரீமியம் பிளாக்ஷிப் (Flagship smartphone) ஸ்மார்ட்போனான சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) விற்பனையை துவங்கியுள்ளது.
ஆம் மக்களே, முதன்முதலில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (Mobile World Congress) நிகழ்வின் பொழுது சியோமி நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்தது. இந்த அறிமுகத்தை தொடர்ந்து, கடந்த மார்ச் 7, 2024 ஆம் தேதி சியோமி நிறுவனம் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

இன்று முதல் சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra Sale Today):
வெற்றிகரமான அறிமுகத்திற்கு பிறகு, இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையை சியோமி நிறுவனம் இந்திய சந்தைக்குள் கொண்டுவந்துள்ளது. இன்று முதல் சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra Sale Today) என்ற பிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போனை நிறுவனம் விற்பனை செய்ய துவங்கியுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போனாக கருதப்படும் ஐபோன் 15 (iPhone 15) மாடலுக்கு நிகரான ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போனாக இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
இந்த சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 chipset), வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் (Wired and wirelessfast charging) கூடிய 5,000எம்ஏஎச் பேட்டரி (battery), 50MP குவாட் ரியர் கேமரா (Quad rear camera) மற்றும் 32MP செல்ஃபி கேமரா ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.
சியோமி 14 அல்ட்ரா போனின் முழு சிறப்பம்ச விபரம் மற்றும் இதன் விலை மற்றும் விற்பனை விபரங்களை இப்போது முழுமையாக பார்க்கலாம். Xiaomi 14 Ultra ஸ்மார்ட்போன் சாதனமானது ரூ.99,999 என்ற விலையுடன் இந்திய பிளிப்கார்ட் (Flipkart) தளம், சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது.

- 6.73" இன்ச் WQHD+ LTPO AMOLED மைக்ரோ கர்வுடு டிஸ்பிளே (display)
- 3,200 x 1,440 பிக்சல் ரெசொலூஷன் (pixels resolution)
- 3,000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness)
- 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate)
- டால்பி விஷன் மற்றும் எச்டிஆர்10+ சப்போர்ட் (Dolby Vision and HDR10+ support)
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 chipset)
- 6GB LPDDR5X ரேம் (RAM)
- 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் (storage)
- ஆண்ட்ராய்டு 14 உடன் ஹைப்பர் ஓஎஸ் (Android 14-based HyperOS)
- 50MP உடன் OIS சோனி பிரைமரி சென்சார் (Sony LYT900 primary sensor)
- 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் (ultra-wide lens)
- இரண்டு 50MP சோனி IMX858 சென்சார்
- 32MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
- 80W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் (wireless fast charging)
ICICI மற்றும் HDFC வங்கி கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் 5,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இத்துடன் எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ. 5000 வரையலினா நன்மையையும் சியோமி இந்த போனுடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications