Home
Gadgets

அதிரவிடும் விலை.. 16ஜிபி மெமரி.. panoramic சவுண்ட்.. அறிமுகமானது சியோமி 85 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் புதிய சியோமி டிவி எஸ்85 மினி எல்இடி மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 64ஜிபி ஸ்டோரேஜ், குவாட்-கோர் பிராசஸர், வைஃபை 6 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் 85 இன்ச் இந்த டிவி வெளிவந்துள்ளது. இப்பேத இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி டிவி எஸ்85 மினி எல்இடி அம்சங்கள் (Xiaomi TV S85 Mini LED specifications): இந்த டிவி ஆனது மினி எல்இடி பேனலைக் கொண்டுள்ளது. குறிப்பாக 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது சியோமி டிவி எஸ்85 மினி எல்இடி மாடல். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

அறிமுகமானது சியோமி 85 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?

அதேபோல் இந்த சியோமி 85 இன்ச் டிவி ஆனது 4கே ரெசல்யூஷன் (4K resolution) மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவம் வழங்கும். குறிப்பாக மாஸ்டர் பிக்சர் குவாலிட்டி எஞ்சின் (Master Picture Quality Engine) ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி டிவி.

மாஸ்டர் பிக்சர் குவாலிட்டி எஞ்சின் ஆனது ஆப்டிமைஸ் கலர்ஸ் (optimize colors), கான்ட்ராஸ்ட் (contrast), கிளாரிட்டி (clarity), மோஷன் (motion) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இது தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.

அறிமுகமானது சியோமி 85 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?

95% டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut), ஹை கான்ட்ராஸ்ட் ரேஷியோ (High contrast ratio) உள்ளிட்ட சிறப்பான வசதிகளுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் லோவ் ப்ளூ லைட் (Low Blue Light) தொழில்நுட்பம் மற்றும் ஃப்ளிக்கர் ரிடக்ஷன் (flicker reduction) ஆதரவுகளைக் கொண்டுள்ள இந்த அட்டகாசமான டிவி.

சக்திவாய்ந்த குவாட்-கோர் ஏ73 பிராசஸர் (quad-core A73 processor) ஆதரவுடன் இந்த சியோமி டிவி எஸ்85 மினி எல்இடி மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஹைபர்ஓஸ் (HyperOS)மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே பல்வேறு புதிய அம்சங்கள் இந்த 85 இன்ச் டிவியில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த டிவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் சியோமி டிவி எஸ்85 மினி எல்இடி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். Variable ரெஃப்ரெஷ் ரேட் (VRR), ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோட்) போன்ற ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளது.

டால்பி விஷன் பனோரமிக் சவுண்ட் ஆதரவு கொண்ட நான்கு-யூனிட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வைஃபை 6, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

அறிமுகமானது சியோமி 85 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?

குறிப்பாக சியோமி டிவி எஸ்85 மினி எல்இடி மாடல் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவி இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சியோமி டிவியின் விலை 7999 yuan (இந்திய மதிப்பில் ரூ. 92,163)-ஆக உள்ளது.

அதேபோல் சியோமி நிறுவனம் விரைவில் இந்தியாவில் பல்வேறு அசத்தலான டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi TV S85 Mini LED Launched: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X