குறிச்சு வச்சுக்கோங்க.. April-ல் வெளிவரும் Mobile போன்கள்.. பட்ஜெட் முதல் பிளாக்ஷிப் வரை.. எந்த போன் வாங்கலாம்
ஏப்ரல் (April) மாதம் துவங்கிவிட்டது. ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் மொபைல் (Mobile) பிரியர்களுக்கு பிடித்தமான மாதமாக இந்த மாதம் மாறப்போகிறது. காரணம், முக்கியமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட பல முக்கியமான சாதனங்கள் இந்த மாதம் தான் அறிமுகமாகவிருக்கிறது.
இந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் (smartphones launching at April) எது? இவை எந்த பிராண்டில் இருந்து வெளிவரவிருக்கிறது? என்ன விலை செக்மென்ட்டில் (Price segment) எப்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது? இந்த போன்களில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள் (expected specifications) என்னென்ன? என்பது போன்ற தகவலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். வாருங்கள் நேரடியாக விஷயத்திற்கு செல்லலாம்.

ஏப்ரல் இல் வெளியாகும் பட்ஜெட் முதல் பிளாக்ஷிப் வரையிலான ஸ்மார்ட்போன்கள்:
இந்த மாதம் வெளிவரவிருக்கும் புதிய லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் (new latest smartphone) பட்டியலில் ஒன்பிளஸ் (OnePlus), மோட்டோரோலா (Motorola), சாம்சங் (Samsung), ரியல்மி (Realme) மற்றும் சியோமி (Xiaomi) போன்ற முக்கியமான பிராண்டுகளின் சாதனங்கள் இடம்பெறவுள்ளன. பட்ஜெட் முதல் பிளாக்ஷிப் என்று பல்வேறு விலை செக்மென்ட்டில் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான மொபைல்கள் இந்த மாதம் வெளிவர தயார்நிலையில் உள்ளன.
1. ரியல்மி 12x 5ஜி (Realme 12x 5G):
ஏப்ரல் 2ம் தேதி இது அறிமுகம் செய்யப்படுகிறது. இது ரூ.10,000 முதல் ரூ. 11,999 விலை பிரிவில் எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரிக்கும் FHD+ டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இதில் 45W பாஸ்ட் சார்ஜிங், 50MP கொண்ட மெயின் கேமரா, மீடியாடெக் டைமென்சிட்டி 6100 சிப்செட், 5000mAh பேட்டரி ஆகியவற்றை வழங்குகிறது. இது வட்ட வடிவ கேமரா பம்ப் வடிவமைப்பை வழங்குகிறது.
2. ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி (OnePlus Nord CE 4 5G):
பட்ஜெட் விலையில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட FHD+ AMOLED டிஸ்பிளேவை வழங்கும் ஒன்பிளஸ் சாதனமாக இது இந்த மாதம் அறிமுகமாகவிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் 100W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை ரூ. 23,999 முதல் ரூ. 26,999 விலைக்குள் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இது மார்பிள் டிசைன் பேக் பேனலுடன் வரும்.

3. சாம்சங் கேலக்ஸி M55 5ஜி (Samsung Galaxy M55 5G):
சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விருப்பமாக வெளிவரவிருக்கும் புதிய சாதனம் தான் இந்த சாம்சங் கேலக்ஸி M55 5ஜி. இது ரூ. 30,999 முதல் ரூ. 34,999 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6.7" இன்ச் கொண்ட சூப்பர் AMOLED FHD+ டிஸ்பிளே மற்றும் 50MP OIS கேமராவுடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்பு ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் போனில் முதல் 50MP செல்பி கேமராவை கொண்டிருக்கும் போனாக இது வெளிவருகிறது.
4. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro):
இந்த ஸ்மார்ட்போன் 144Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 6.7" இன்ச் அளவு கொண்ட 1.5K pOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது AI அம்சத்துடன் இயங்கும் ப்ரோ கிரேட் 50MP உடன் கூடிய பின்பக்க மற்றும் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. 125W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும். இதன் விலை ரூ.50,000 முதல் ரூ. 55,000 விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra):
இந்த மாதம் எதிர்பார்க்கப்படும் பிரீமியம் பிளாக்ஷிப் சாதனம் இது தான். இந்த சாதனம் ரூ. 99,999 விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் 6.73" இன்ச் கொண்ட QHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 50MP கொண்ட ஒன் இன்ச் கேமரா சென்சாரை கொண்டுள்ளது. இதில் 5,000mAh பேட்டரி 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








