விறுவிறுப்பான விற்பனை.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் சியோமி 40 இன்ச் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் 40-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் புதிய விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சியோமியின் 40-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2023 எடிஷன் (Xiaomi Mi A series Full HD LED Smart Google TV 2023 Edition) மாடலுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவி ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த 40-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2023 எடிஷன் மாடலை ரூ.19499 விலையில் வாங்கிவிட முடியும். மேலும் இந்த டிவியின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சியோமி 40 இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் டிவி அம்சங்கள் (Xiaomi 40 inch Mi A series TV Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ் ஆதரவுடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine),60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. அதேபோல் இந்த சியோமி டிவி சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

சக்திவாய்ந்த குவாட்-கோர் ஏ35 சிப் (Quad Core A35) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி 40-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் டிவி மாடல். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டிவி வெளிவந்துள்ளதால் மேம்பட்ட பல புதிய அம்சங்கள் கிடைக்கும்.
1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமியின் 40-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2023 எடிஷன். மேலும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, பிளே ஸ்டோர் போன்ற பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
குறிப்பாக கேமிங் பயனர்களைக் கவரும் நோக்கில் மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர் (Graphic Processor) ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம். மேலும் பேட்ச்வால் + (PatchWall +) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி 40-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் டிவி மாடல்.
இந்த டிவியில் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் வசதி உள்ளது. அதன்பின்பு டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த சியோமி 40-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் டிவி மாடல். எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

அதாவது 40-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2023 எடிஷன் ஆனது புளூடூத் 5.0, வைஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஏவி, 3.5எம்எம் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக அனைத்து அம்சங்களுடன் சியோமி 40-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் டிவி மாடல் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் சியோமி நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications