Home
Gadgets

செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி அட்மாஸ்.. 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் சமீபத்தில் சியோமி டிவி எஸ்75 (Xiaomi TV S75) மாடலை அறிமுகம் செய்தது. இந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி விரைவில் தற்போது சீனாவில் விற்பனை வந்துள்ளது. அதேபோல் இந்த புதிய சியோமி டிவி விரைவில் உலக சந்தை மற்றும் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் ஆனது டால்பி அட்மாஸ், 64ஜிபி ஸ்டோரேஜ், 4கே ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சியோமி டிவி எஸ்75 மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?

சியோமி டிவி எஸ்75 அம்சங்கள் (Xiaomi TV S75 specification): 4கே ரெசல்யூஷன் கொண்ட மினி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 512 பேக்லிட் ணழநௌ (512 backlight zones), 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த வி.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) மற்றும் 240Hz ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Mode) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.

செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான சியோமி டிவி எஸ்75 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

சக்திவாய்ந்த குாவாட்-கோர் ஏ73 பிராசஸர் (quad-core A73 processor) உடன் இந்த சியோமி டிவி எஸ்75 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் சியோமி நிறுவனத்தின் சொந்த ஹைபர்ஓஸ் (HyperOS) மூலம் இயங்குகிறது இந்த புதிய 75-இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியில் மேம்பட்ட பல புதிய அம்சங்கள் கிடைக்கும்.

XiaoAi வாய்ஸ் அசிஸ்டண்ட் கொண்டு இந்த சியோமி டிவி எஸ்75 மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் உங்கள் போனில் இருந்தும் கூட இந்த டிவியை கண்ட்ரோல் செய்ய முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியுடன் ஒரு ஸ்மார்ட் ரிமோட் வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதன் ஆடியோ பகுதிக்கும் அதிகம் செலுத்தப்பட்டுள்ளது.

அதாவது டால்பி அட்மாஸ் சரவுண்ட் சவுண்ட் (Dolby Atmos surround sound) மற்றும் ஐமேக்ஸ் ஆதரவு கொண்ட நான்கு யூனிட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த சியோமி 75 இன்ச் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் 10.7 பில்லியன் கலர்ஸ் ( 10.7 billion colors), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது சியோமி டிவி எஸ்75 மாடல்.

செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?

இதுபோக ப்ளூ லைட் ரெடக்சன் (Blue Light Reduction) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிவி. கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதால் இந்த டிவியை நம்பி வாங்கலாம். இரண்டு எச்டிஎம்ஐ 2.1 போர்ட்கள், யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன.

சியோமி டிவி எஸ்75 மாடலின் விலை 4599 yuan (இந்திய மதிப்பில் ரூ.54,049) ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸமார்ட் டிவி தனித்துவமான அம்சங்களுடன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi TV S75 Mini LED with 64GB storage goes on sale in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X