ஒரே ரீசார்ஜ்ஜில் இலவச Netflix, Amazon Prime & Hotstar.. இப்படி ஒரு Airtel பிளான் இருக்குனு பலருக்கும் தெரியாது

|

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் (Bharthi Airtel) நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 2 சூப்பரான திட்டங்களை பற்றி கேள்விப்பட்டால்.. "அடடா.. இப்படியெல்லாம் கூட ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!" என்கிற எண்ணம் உங்களுக்குள் எழுந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

ஏனென்றால், அந்த 2 ஏர்டெல் திட்டங்களுமே, மிகவும் பிரபலமான மூன்று ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களையும், சிங்கிள் ரீசார்ஜ்ஜின் கீழ் வழங்குகிறது. அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் இந்த 2 திட்டங்களும் ஒரே ரீசார்ஜ்ஜின் கீழ் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான (Disney+ Hotstar) இலவச சந்தாக்களை வழங்குகிறது.

இலவச Netflix, Amazon Prime & Hotstar-ஐ வழங்கும் 2 Airtel பிளான்கள்!

நாம் இங்கே பேசும் பார்தி ஏர்டெல் திட்டங்களின் விலை நிர்ணயம் - ரூ.1199 மற்றும் ரூ.1499 ஆகும். இந்த இரண்டுமே ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு திட்டங்கள் ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த இரண்டு திட்டங்களுமே 3 முக்கியமான OTT நன்மைகளை வழங்குகின்றன. அதாவது ரூ.1199 மற்றும் ரூ.1499 ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸிற்கான சந்தாக்களை இலவசமாக வழங்குகின்றன. ஆனால் இந்த திட்டங்களின் மற்ற நன்மைகள் வேறுபடும்!

பார்தி ஏர்டெல் ரூ.1199 திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 1 ரெகுலர் கனெக்ஷன் மற்றும் 3 பேமிலி ஆட்-ஆன் கனெக்ஷன்களை பெறுவீர்கள். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஒவ்வொரு ஆட்-ஆன் கனெக்ஷனிற்கும் 150ஜிபி + 30ஜிபி என்கிற அளவிலான டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் 200ஜிபி வரையிலான டேட்டா ரோல்ஓவர் (Data Rollover) ஆதரவும் அணுக கிடைக்கும். அறியாதோர்களுக்கு முந்தைய ரீசார்ஜ்ஜில் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த ரீசார்ஜ்ஜிற்கு நகர்த்துவதே டேட்டா ரோல்ஓவர் ஆகும்.

மேலும் ரூ.1199 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால் உடன் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் என்கிற நன்மையும் அணுக கிடைக்கும். ஓடிடி நன்மைகளுக்கான வேலிடிட்டியை பொறுத்தவரை, அமேசான் பிரைம் வீடியோ ஆனது ஆறு மாதங்களுக்கு அணுக கிடைக்கும், நெட்பிளிக்ஸ் பேசிக் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஆனது ஒரு வருடத்திற்கு அணுக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் Wynk பிரீமியம் சந்தாவும் சேர்க்கப்பட்டுள்ளது

பார்தி ஏர்டெல் ரூ.1499 திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 1 ரெகுலர் கனெக்ஷன் மற்றும் 4 பேமிலி ஆட்-ஆன் கனெக்ஷன்களை பெறுவீர்கள். இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஒவ்வொரு ஆட்-ஆன் கனெக்ஷனிற்கும் 200ஜிபி + 30ஜிபி என்கிற அளவிலான டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழும் கூட 200ஜிபி வரையிலான டேட்டா ரோல்ஓவர் அணுக கிடைக்கும்.

ரூ.1,499 திட்டத்தின் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தவரை, இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும் ரூ.1199 திட்டத்தை போலவே, இதன் கீழ் கிடைக்கும் அமேசான் பிரைம் வீடியோ ஆனது ஆறு மாதங்களுக்கு அணுக கிடைக்கும் மற்றும் நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தாக்கள் ஓராண்டு வரை நீளும்.

இந்த 2 திட்டங்களுமே ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்கள் (Best Post-paid Plans) என்பதில் சந்தேகமே வேண்டாம். குறிப்பாக நீங்களொரு சினிமா (Cinema) அல்லது வெப் சீரிஸ் (Web Series) விரும்பியாக இருந்தால், இந்த இரண்டு திட்டங்களில் ஒன்றை கண்களை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம், ஏர்டெல் நிறுவனத்தின் போட்டியாளர் ஆன ரிலையன்ஸ் ஜியோவிடம் இதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை!

Best Mobiles in India

English summary
Want Free Netflix Amazon Prime Video and Disney Plus Hotstar Airtel Gives You 2 Recharge Options

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X