ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
மாதத்துக்கு ரூ.149 செலவில் ஏர்டெல் கொடுக்கும் 1 வருட ப்ரீபெய்ட் திட்டத்தை தூக்கி சாப்பிடும் விதமாக ஜியோ நிறுவனம் அதைவிட கம்மியான விலையில் ஒரு திட்டத்தை கொடுக்கிறது. அன்லிமிடெட் 5ஜியை அதில் கொடுத்து ஏர்டெல் கஸ்டமர்களையே மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.
இப்படி ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) இருக்கும் தொடக்க விலை வருடாந்திர திட்டங்கள் எவை, அவற்றில் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன, இந்த திட்டங்களில் எது அதிகப்படியான சலுகைகளை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 1559 திட்ட விவரங்கள் (Jio Rs 1559 Plan Details): இந்த ஜியோ வருடாந்திர திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) போன்ற மொத்த சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், 24 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. இந்த 24 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். ஆனால், ஜியோ வெல்கம் ஆஃபர் (Jio Welcome Offer) பெறும் கஸ்டமர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம்.
டேட்டாவை போலவே எஸ்எம்எம்எஸ் சலுகையும் மொத்தாக கிடைக்கிறது. ஆகவே, 3,600 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம். இதுபோக முக்கிய சலுகையான வாய்ஸ் கால் சலுகையும் கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்துகொள்ள முடியும்.
ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆப்களை பயன்படுத்தலாம். இந்த ஜியோ திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மாதாந்திரம் ரூ.141 செலவில் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதைவிட ஏர்டெல் கூடுதல் வேலிடிட்டியை கொடுக்கிறது. ஆனால், அதில் ட்விஸ்ட் இருக்கிறது.
ஏர்டெல் ரூ 1799 திட்ட விவரங்கள் (Airtel Rs 1799 Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இது, ஜியோவை விட கூடுதலாக ரூ.240 விலை கொண்டதாகும். ஆனால், இந்த திட்டத்தில் 5ஜி டேட்டா சலுகையை கொடுக்கப்படவில்லை. 24 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது.

இதுவும் லம்ப்-சம் டேட்டா சலுகையாகும். இதை பயன்படுத்தி பிறகு ஜியோவை போல 64 கேபிபிஎஸ் டேட்டா கிடைக்காது. ஒரு எம்பிக்கு 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதில் மற்ற சில சலுகைகளை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது.
ஜியோவை போலவே மொத்தமாக 3,600 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இதுபோக அப்பல்லோ 24|7 சர்க்கிள், ப்ரீ-ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த ஏர்டெல் திட்டத்துக்கு மாதம் ரூ.149 செலவாகிறது. ஆனால், ஜியோவை விட கம்மியான சலுகைகளையே கொண்டிருக்கிறது. இப்போது, வோடபோன் ஐடியா திட்டத்தை பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ 1799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1799 Plan Details): இந்த வோடபோன் திட்டத்திலும் லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, 24 ஜிபி டேட்டா சலுகை பயன்படுத்தலாம். அதன்பின் 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும்.

3,600 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. அதேபோல கூடுதல் சலுகையாக விஐ மூவிஸ் மற்றும் டிவி ஆப் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி போன்ற எந்த சலுகைகளும் கிடைக்காது. 365 நாட்களுக்கு வேலிடிட்டி வருகிறது. ஆகவே, ஜியோவே அதிகப்படியான சலுகைகளுடன் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








