Home
Mobile

விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?

இதைவிட கம்மியா கிடைக்காது என்று அடித்து சொல்லும் அளவுக்கு மீடியாடெக் டைமன்சிட்டி 7025 சிப்செட், 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50எம்பி கேமரா பீச்சருடன் மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி64 5ஜி அம்சங்கள் (Moto G64 5G Specifications): இந்த மோட்டோவில் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 6nm) சிப்செட் வருகிறது. ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 5 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் உள்ளது.

விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி போன்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் மை யுஎக்ஸ் (My UX) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

அதேபோல 12 ஜிபி ரேம் (12 ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொண்டிருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் லாக்-ப்ரீ சிப்செட் மற்றும் ரேம் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும்.

இந்த மோட்டோ ஜி64 5ஜி போனில் 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்சிடி (LCD) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Corning Gorilla Glass 3 Protection) வருகிறது.

விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி போன்!

குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) மற்றும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் உடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமரா 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஹைபர்லேப்ஸ் (Hyperlapse), ஸ்பாட் கலர் (Spot Color), டூயல் கேப்ச்சர் (Dual Capture), நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision) மற்றும் போர்ட்ராய்டு (Portrait) போன்ற பீச்சர்கள் வருகின்றன. அல்ட்ரா பிக்சல் (Ultra Pixel) சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இந்த ஷூட்டரில் ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture), கெஸ்ச்சர் செல்பீ (Gesture Selfie) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த கேமராவை போலவே பேட்டரி சிஸ்டம் பட்டையை கிளப்பும்படி வருகிறது. 30W டர்போசார்ஜிங் (Turbocharging) கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. IP52 ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கொண்டுள்ளது. ப்ரீமியம் டிசைனில் மின்ட் கிரீன் (Mint Green), பேர்ல் ப்ளூ (Pearl Blue), ஐஸ் லைலாக் (Ice Lilac) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது.

இந்த மோட்டோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது. எச்டிஎப்சி பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,100 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதேபோல 6 மாதங்களுக்கான நோ காஸ்ட் ஈஎம்ஐ கொடுக்கப்படுகிறது.

இந்த மோட்டோ ஜி64 5ஜி போனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. அதேபோல மேட்டோரோலா மற்றும ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வருகிறது. டியூரபிலிட்டி, பர்ஃபாமென்ஸ் கொண்ட பட்ஜெட் போன் வேண்டுமானால், இது நல்ல தேர்வாகும்.

Best Mobiles in India

English summary
Moto G64 5G With 12GB RAM, 50MP Camera Launched Sale From April 23 in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X