Home
News

Airtel, Jio கஸ்டமர்களுக்கு கிடைக்கும் டால்க்டைம் ரீசார்ஜ்களின் முழு பட்டியல்!

இந்தியாவின் 2 முக்கியமான டெலிகாம் நிறுவனங்களாக இருப்பதால்.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Airtel) ஆகிய இரண்டுமே எல்லா வகையான பயனர்களுக்கும் தேவையான திட்டங்களை கொண்டிருப்பது மிகவும் அவசியம்.

இல்லையென்றால்.. ஏர்டெல்லில் கிடைக்காத ஒரு திட்டத்தை தேடி ஜியோவிற்கும், ஜியோவின் கீழ் கிடைக்காத ஒரு திட்டத்தை தேடி ஏர்டெல்லுக்கும் வாடிக்கையாளர்கள் 'ஜம்ப்' அடித்து விடுவார்கள். இவ்விரு நிறுவனங்களுக்குமே ஒவ்வொரு கஸ்டமரும் முக்கியம். ஏனென்றால் அவர்கள் தான்.. ஏஆர்பியூ (ARPU) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (Average revenue per user) நிர்ணயம் செய்கிறார்கள்!

Airtel, Jio கஸ்டமர்களுக்கு கிடைக்கும் டால்க்டைம் ரீசார்ஜ்!

இதன் விளைவாகவே ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பிரிவுகளின் கீழ்.. ஒரே மாதிரியான விலைகளின் கீழ்.. ஒரே மாதிரியான நன்மைகளை வழங்கும் பல திட்டங்களை தன்வசம் கொண்டுள்ளன. அந்த வரிசையில் தான் ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ரூ.10 திட்டமும் வருகிறது!

இரண்டு நிறுவனங்களுமே ரூ.10 திட்டத்தை ஒரு டால்க்டைம் வவுச்சர் (Talktime Voucher) ஆக.. ஒரு டாப்-அப் பிளான் (Top Up Plan) ஆக வழங்குகிறது. அதாவது ரூ.10 திட்டத்தின் கீழ் ஜியோ மற்றும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 7 ரூபாய் 41 பைசா மதிப்பிலான டால்க்டைம் மட்டுமே கிடைக்கும்.

Airtel, Jio கஸ்டமர்களுக்கு கிடைக்கும் டால்க்டைம் ரீசார்ஜ்!

ஆனால் இந்த இரண்டு ரூ.10 திட்டங்களுமே வெறும் போட்டிக்காக மட்டுமே உள்ளன. பெரும்பாலான கஸ்டமர்கள் டாக்டைம் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதே கிடையாது. ஏனென்றால் ஜியோ மற்றும் ஏர்டெல்லின் பேஸிக் ரீசார்ஜ் (Basic Recharge) திட்டங்களிலேயே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) அணுக கிடைக்கிறது.

சர்வதேச அழைப்புகளை செய்ய விரும்பும் ஜியோ மற்றும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வேண்டுமானால் இந்த திட்டம் கைகொடுக்கலாம். அதற்கும் கூட, வாட்ஸ்அப் வழியாக வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால்களை மேற்கொள்வதே சிறந்த வழியாகும். ஏனென்றால் வாட்ஸ்அப் இதற்காக கூடுதல் கட்டணங்கள் எதையும் வசூலிக்காது; உங்களிடம் தேவையான டேட்டா இருந்தால் போதும்.

Airtel, Jio கஸ்டமர்களுக்கு கிடைக்கும் டால்க்டைம் ரீசார்ஜ்!

ரூ.10 திட்டம் மட்டுமல்ல ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலான டாப்-அப் பிளான்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இவைகள் முறையே ரூ.14.95, ரூ.81.75, ரூ.423.73, ரூ.847.46 மற்றும் ரூ.4237.29 மதிப்பிலான டால்க்டைம் நன்மைகளை வழங்குகின்றன.

இதேபோல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழும் ரூ.10 திட்டத்துடன் சேர்த்து ரூ.20, ரூ.100, ரூ.500, ரூ.1000 மற்றும் ரூ.5000 மதிப்பிலான டால்க்டைம் வவுச்சர்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இவைகள் முறையே ரூ.14.95, ரூ.39.37, ரூ.81.75, ரூ.420.73 மற்றும் ரூ.844.46 மதிப்பிலான டால்க்டைம் நன்மைகளை வழங்குகின்றன.

மேற்கண்ட அனைத்து டாக்டைம் வவுச்சர்கள் அல்லது டாப்-அப் பிளான்களும் ஏர்டெல்லின் இணையதளத்திலும், மொபைல் ஆப் வழியாகவும் மற்றும் ஜியோ நிறுவனத்தின் இணையதளத்திலும், மொபைல் ஆப் வழியாகவும் மற்றும் பிற மூன்றாம் தரப்பு ஆப் அல்லது தளம் வழியாகவும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

ஏர்டெல் மற்றும் ஜியோ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை.. பார்தி ஏர்டெல் நிறுவனமானது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தனது ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்த (Recharge Plan Tariff Hike) திட்டமிட்டுள்ளது. மறுகையில் உள்ள ஜியோ நிறுவனமானது ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்துவதற்கு பதிலாக, அதிக டேட்டா பயன்பாட்டை (Greater data usage) ஊக்குவிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்தும்.

ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய உத்தியின் கீழ் ஜியோ பயனர்கள் உயர் அடுக்கு பேக்கேஜ்களுக்கு (higher-tier packages) இடம்பெயர்வார்கள். அதாவது விலை அதிகமான திட்டங்களை ரீசார்ஜ் செய்வார்கள். இதன் மூலம் ரீசார்ஜ் விலை உயர்வை அறிவிக்காமலேயே ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (Average revenue per user -ARPU) அதிகரிக்க முடியும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நம்புகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs 10 to Rs 5000 Full List of Talktime Vouchers Or Top Up Plans From Airtel and Jio 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X