Google ஊழியர்களுக்கு வந்த அதிரடி அறிவிப்பு சுந்தர் பிச்சை என்ன சொன்னார் தெரியுமா?

|

கூகிள் நிறுவனத்தின் பெற்றோர் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் தனது ஊழியர்கள் சிலர் எப்பொழுது அலுவலகம் திரும்பலாம் என்றும், மற்றவர்களுக்கு எப்பொழுது வரை வீட்டிலிருந்து வேலை பார்க்க உத்தரவிட்டுள்ளது என்ற புதிய அறிவிப்பை தற்பொழுது அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் கூகிள் வெளியிட்டுள்ள தகவல்கள் என்ன என்று பார்க்கலாம்.

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள்

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள்

கொரோனா தோற்று வேகமாகப் பரவுவதைக் கணக்கில் கொண்டு கூகிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் முதல் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கும்படி உத்தரவிட்டது. நீடித்து வரும் ஊரடங்கினால் ஊழியர்களின் பாதுகாப்பு நலன் கருதி, கடந்த அறிவிப்பின் படி ஜூன் 1ம் தேதி வரை தனது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கும் படி உத்தரவிட்டிருந்தது. தற்பொழுது அந்த அறிவிப்பை மாற்றம் செய்துள்ளது.

பாதுகாப்பு கருதி அதிரடி அறிவிப்பு

பாதுகாப்பு கருதி அதிரடி அறிவிப்பு

கூகிள் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்புப் படி, வீட்டிலிருந்து பணிபுரியும் தனது ஊழியர்களிடம் அவர்கள் இந்த ஆண்டு இறுதி வரை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. அதேபோல், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கூகிள் தனது அலுவலகத்தைத் திறக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சில ஊழியர்களை மட்டும் அலுவலகம் வந்து பணியாற்றச் செய்யும் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் மதுபாட்டில் விற்பனை: எப்படி தெரியுமா?தமிழகத்தில் ஆன்லைன் மதுபாட்டில் விற்பனை: எப்படி தெரியுமா?

நிறுவனத்தின் அனைத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு

நிறுவனத்தின் அனைத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு

வியாழக்கிழமை நடந்த அனைத்து கூட்டத்தின் போது, ​​கூகிள் ஊழியர்களில் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டியவர்கள் மட்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் திரும்பி வர வேண்டிய நிலை இருக்கும் என்று கூறப்பட்டது, ஆனால் சில பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் இவர்கள் பின்பற்ற வேண்டியது இருக்கும் என்று அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தி முதலில் தி இன்ஃபர்மேஷனால் தெரிவிக்கப்பட்டது, பின்னர் பிசினஸ் இன்சைடரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து கூகிள் அறிவித்த அறிவிப்பு

பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து கூகிள் அறிவித்த அறிவிப்பு

கூகிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பேஸ்புக் நிறுவனத்தின் இதேபோன்ற அறிவிப்பைப் பின் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களிடம் எஞ்சிய 2020ம் ஆண்டின் காலத்திற்கு வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றலாம் என்று கூறியுள்ளது. இருப்பினும் ஜூலை 6 ஆம் தேதி முதல் தனது அலுவலகங்களை மீண்டும் திறக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

Xiaomi Mi 10 போன் முன்பதிவு செய்தால் 'இது' இலவசம் - நேரலை பார்க்க லிங்க் உள்ளே!Xiaomi Mi 10 போன் முன்பதிவு செய்தால் 'இது' இலவசம் - நேரலை பார்க்க லிங்க் உள்ளே!

2020ம் ஆண்டின் இறுதி வரை வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம்

2020ம் ஆண்டின் இறுதி வரை வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம்

இதனால், கூகிள் நிறுவனத்தின் ஊழியர்கள் எஞ்சியுள்ள 2020ம் ஆண்டின் காலத்தை வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்களும் வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என்பது தெரிகிறது.

பாதுகாப்பு பின்பற்றுதலுடன் அலுவலகம் திறப்பு

பாதுகாப்பு பின்பற்றுதலுடன் அலுவலகம் திறப்பு

இரண்டு நிறுவனங்களும் ஜூன் மாதம் நிறுவனத்தைத் திறந்தாள் குறிப்பிட்ட சில ஊழியர்கள் மட்டும் பாதுகாப்பு பின்பற்றுதலுடன் அலுவலகம் சென்று பணியாற்றுவார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்துமற்ற முன்னணி நிறுவனங்கள் என்ன அறிவிப்பை வெளியிடும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Sundar Pichai CEO Of Google Told Employees Will Be Working From Home Until Year End : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X